ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கும் இடையிலான சந்திப்பு நாளை ஐந்தாம் திகதி செவ்வாய்க்கிழமை நடைபெறலாம் அரசியல் வட்டாரங்களில் இருந்து தெரியவருகின்றது.
இதற்கு முன்னர் இந்த பேச்சுவார்த்தை நடைபெறவிருந்த போதிலும் பல்வேறு காரணங்களினால் நடைபெறவில்லை. இந்நிலையிலேயே நாளை செவ்வாய்க்கிழமை சந்திப்பு இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சிறிலங்கா சுதந்திரக் கட்சிக்குள் காணப்படுகின்ற சிக்கல்கள் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் குறித்து இதன்போது பேசப்படும் என தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை சந்திப்பதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன திகதி ஒதுக்கியுள்ளதாக இராஜாங்க அமைச்சர் ரெஜினோல்ட் குரே கடந்த மேதினத்தன்று தெரிவித்திருந்தார்.
முரண்பாடுகளை களைந்துகொள்ளும் நோக்கில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் சந்தித்துப் பேச்சு நடத்தவுள்ளனர் என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார்.
