Featured Home (TOP)

Recent Comments

Wednesday, September 30, 2015

avathani Media Network

புதையல் தோண்டிய பொலிஸ்மா அதிபருக்கு தொடர்ந்தும் விளக்கமறியல்

வவுனியா பிரதேசத்தில் புதையல் தோண்டிய குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்ட வவுனியா மாவட்ட முன்னாள் பிரதி பொலிஸ்மா அதிபர் யூ.கே.திஸாநாயக்க உள்ளிட்ட இருவரை தொடர்ந்தும் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 7ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சந்தேகபர்களான முன்னாள் பொலிஸ்மா அதிபர் உள்ளிட்ட 9 பேர் இன்று (புதன்கிழமை) வவுனியா நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டபோது அவர்களுள் 7 பேர் குற்றத்தை ஒப்புக்கொண்டனர்.
இதனையடுத்து எழுவரில் ஒருவருக்கு 75 ஆயிரம் ரூபாவும் மற்றைய ஆறு பேருக்கும்; தலா ஒரு இலட்சம் ரூபாவும் அபராதம் விதித்து பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டனர்.
ஏனைய சந்தேகநபர்களான வவுனியா மாவட்ட முன்னாள் பிரதி பொலிஸ் மா அதிபர் மற்றும் பிரதான பொலிஸ் பரிசோதகரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் வீ.ராமகமலன் உத்தரவிட்டார்.
வவுனியா குடாக்கச்சி பிரதேசத்தில் புதையல் தோண்டியதாக குற்றஞ்சாட்டப்பட்ட வவுனியா மாவட்ட முன்னாள் பிரதி பொலிஸ்மா அதிபர் அண்மையில் சட்டத்தரணி ஊடாக கொழும்பு குற்றப்புலனாய்வு பிரிவிடம் சரணடைந்தார்.
இதனையடுத்து அவர் கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டு பின்னர் வழக்கு விசாரணை வவுனியா நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
Read More
avathani Media Network

பிள்ளைகளை உயிர் போல் காப்போம் எனும் தொனிப்பொருளில் சிறுவர் துஷ்பிரயோகங்களுக்கு எதிராக விழிப்புணர்வு ஊர்வலம் - காத்தான்குடியில-படங்கள்

(பழுலுல்லாஹ் பர்ஹான்)

உலக சிறுவர் தினத்தை முன்னிட்டு பிள்ளைகளை உயிர் போல் காப்போம் எனும் தொனிப்பொருளில் தேசிய இளைஞர் சேவைகள் மன்றமும், ஸ்ரீலங்கா இளைஞர் கழக சம்மேளனமும் இணைந்து நாடாளாவிய ரீதியில் சிறுவர் துஷ்பிரயோகங்களுக்கு எதிராக பல்வேறு செயற்திட்டங்களை முன்னெடுத்து வருகின்றது.

இதற்கமைய தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் மட்டக்களப்பு மாவட்ட உதவிப் பணிப்பாளர் நைறூஸின் வழிகாட்டலில் மட்டக்களப்பு மாவட்டத்தில் 14 பிரதேச செயலாளர் பிரிவிலும் சிறுவர் துஷ்பிரயோகங்களுக்கு எதிராக பல்வேறு செயற்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற நிலையில் காத்தான்குடி பிரதேச இளைஞர் சேவை அதிகாரியின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு –கல்முனை காத்தான்குடி பிரதான வீதியிலுள்ள அந்நாஸர் வித்தியாலயத்தில் இருந்து காத்தான்குடி பிரதான வீதி ஊடாக சிறுவர் துஷ்பிரயோகங்களுக்கு எதிராக விழிப்புணர்வு ஊர்வலம் இன்று 30 புதன்கிழமை இடம்பெற்றது.

தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் காத்தான்குடி பிரதேச இளைஞர் சேவை அதிகாரி எம்.எம்.ஸமீலுல் இலாஹி தலைமையில் இடம்பெற்ற இவ் விழிப்புணர்வு ஊர்வலத்தில் காத்தான்குடி பிரதேச உதவிப் பிரதேச செயலாளர் ஏ.சி.அஹமட் அப்கர்,அந்நாஸர் வித்தியாலய அதிபர் அல்லாப்பிச்சை,பிரதேச சிறுவர் பாதுகாப்பு உத்தியோகத்தர் எஸ்.எம்.ஏ.நஜீப் ,சிறுவர் உரிமை மேம்பாட்டு உத்தியோகத்தர் சீ.சக்தி நாயகம்,மாவட்ட இளைஞர் சேவை அதிகாரி திருமதி.நிஸாந்தி அருள் மொழி, தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் மாவட்ட தகவல் நிலைய அதிகாரி ரீ.மகேந்திரராசா உட்பட காத்தான்குடி ,மட்டக்களப்பு ஆகிய பொலிஸ் நிலையங்களின் போக்குவரத்து பொலிஸ் உத்தியோகத்தர்கள்,மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

இதன் போது சிறுவர் துஷ்பிரயோக விழிப்புணர்வு துண்டுப்பிரசுரம் பொது மக்களுக்கு வழங்கி வைக்கப்பட்டதுடன், பொது இடங்களில் சிறுவர் துஷ்பிரயோக விழிப்புணர்வு ஸ்டிகர்களும் ஒட்டப்பட்டது.

மேற்படி விழிப்புணர்வு ஊர்வலத்தில் கலந்து கொண்ட மாணவர்கள் தொடுகை மூலமும் ,தொடுகை அல்லாத முறையிலும் சிறுவர்களுக்கு பாலியல் ரீதியான துஷ்பிரயோகம் ஏற்படுகின்றது,சிறுவர்களை போதைப் பொருளின் பாவனையில் இருந்து உயிர்களை பாதுகாப்போம், சிறுவர்கள்,இளைஞர்களுக்கு பாதுகாப்பான முன்மாதிரிப் பிரதேசமாக காத்தான்குடியை உருவாக்குவோம்,பாடசாலைகளில் இடைவிலகல்களை இல்லா தொழிப்போம் ,சிறுவர் துஷ்பிரயோகங்களைக் கண்டால் 1929க்கு அழைப்போம்,சிறுவர் துஷ்பிரயோகங்களை ஒழிக்க அனைவரும் ஒன்றினைவோம் போன்ற பல்வேறு சிறுவர் துஷ்பிரயோக விழிப்புணர்வு பதாதைகளை ஏந்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.





























Read More
avathani Media Network

கடல் அரிப்பு காரணமாக காத்தான்குடி- ஏத்துக்கால் கடற்கரையில்- மலசலகூடம் அமைப்பதற்காக இடப்பட்டிருந்த அத்திவாரம் உடைந்தது-படங்கள்.

(பழுலுல்லாஹ் பர்ஹான்)

மட்டக்களப்பு மாவட்டத்தின் காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட காத்தான்குடி- ஏத்துக்கால் கடற்கரையில் ஏற்பட்டுள்ள கடல் அரிப்பு காரணமாக அப்பகுதியில் மலசலகூடம் அமைப்பதற்காக இடப்பட்டிருந்த அத்திவாரம் நேற்று 29 செவ்வாய்க்கிழமை இரவு உடைந்துள்ளது.

மீனவர் தங்குமிடக் கட்டிடத்துடன் மலசலகூடம் அமைப்பதற்காக இடப்பட்டிருந்த அத்திவாரமே இவ்வாறு உடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இக் கடற்கரையில் ஏற்பட்டுள்ள கடல் அரிப்புக் காரணமாக சுமார்; 25 அடி தூரம் கடலுக்குள் சென்றுள்ளதாக மீனவர்கள் தெரிவித்தனர்.

கடல் அரிப்பினால் சேதமடைந்துள்ள கட்டிடத்தை பார்வையிட அதிகமான மக்கள் வருகை தந்த வண்ணமுள்ளனர்.










Read More
avathani Media Network

பிள்ளைகளை உயிர் போல் காப்போம் '': காத்தான்குடியில் பேரணி

''பிள்ளைகளை உயிர் போல் காப்போம்'' எனும் தொனிப் பொருளில் மட்டக்களப்பு மாவட்டத்தின் பல இடங்களிலும் சிறுவர் துஷ்பிரயோகங்களுக்கெதிரான விழிப்புணர்வு ஊர்வலங்கள் இன்று காலை நடைபெற்றன.

தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் ஸ்ரீலங்கா இளைஞர் கழக சம்மேளனம் இந்த விழிப்புணர்வு ஊர்வலங்களை ஏற்பாடு செய்திருந்தன.
இந்த விழிப்புணர்வு ஊர்வலத்தில் மாணவர்கள் பங்கு பற்றினர். காத்தான்குடியில் நடைபெற்ற ஊர்வலத்தில் காத்தான்குடி உதவி பிரதேச செயலாளர் ஏ.சி.அகமட் அப்கர்,  தேசிய இணைஞர்கள் மன்ற அதிகாரி, காத்தான்குடி அந் நாசர் வித்தியாலய அதிபர் எம்.அல்லாபிச்சை உட்பட ஆசிரியர்கள் சிறுவர் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மாணவர்கள் எனப்பலர் கலந்து கொண்டனர்.

இதே போன்று ஆரையம்பதி மகா வித்தியாலயத்திற்கு முன்பாகவும் இந்த விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது. இதில் பாடசாலை ஆசிரியர்கள், மாணவர்கள் தேசிய இளைஞர் சேவைகள் மன்ற அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
Source - virakesary
Read More
avathani Media Network

திஹாரிய இஸ்லாமிய அங்கவீனர் நிலையத்தில் இடம்பெற்ற முன்னாள் பிரதமர்களின் நினைவு கூரல் நிகழ்வும், பரிசில்கள் வழங்கி வைப்பும்

(இன்பாஸ் சலாஹூதீன்)

முன்னாள் பிரதமர்களான எஸ்.டப்ளியூ.ஆர்.டி பண்டாரநாயக்க, சிறிமாவோ பண்டாரநாயக்க, முன்னாள் சபாநாயகர் அனுர பண்டாரநாயக்க ஆகியோரின் நினைவு கூரல் நிகழ்வு  அண்மையில் திஹாரிய இஸ்லாமிய அங்கவீனர் நிலையத்தில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் அதிதியாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க, துறைமுகம் மற்றும் கப்பல் துறை அமைச்சர் அர்ஜூன ரணதுங்க, அங்கவீனர் நிலையத்தின் சர்தேச ஆலேசகர் புரவலர் ஹாஸிம் உமர் ,நிலையப்பணிப்பாளர் ஜிப்ரி ஹனிபா மற்றும் நிலைய மாணவர்களும் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்வில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க, அமைச்சர் அர்ஜூன ரணதுங்க ,புரவலர் ஹாஸிம் உமர் ஆகியோர் பரிசு மற்றும் தையல் இயந்திரம் மற்றும் செவிப்புலன் கருவி ஆகியன வழங்கி வைத்தனர்.













Read More