Featured Home (TOP)

Recent Comments

Saturday, November 21, 2015

avathani Media Network

சாதாரண தரப்பரீட்சை அனுதிச் சீட்டுக்களை உடனடியாக மாணவர்களுக்கு வழங்கவும்


கல்விப் பொதுத் தரா­தர சாதா­ரண தரப் பரீட்­சைக்­கான அனுமதிச்­சீட்­டுக்கள் நாட­ளா­விய ரீதியில் உள்ள பாட­சா­லை­க­ளுக்கு பரீட்­சைகள் திணைக்­க­ளத்­தினால் அனுப்­பி­வைக்­கப்­பட்­டுள்ள நிலையில் அதனை அதிர்­பர்கள் உட­ன­டி­யாக மாண­வர்­க­ளுக்கு கைய­ளிக்க நட­வ­டிக்கை எடுக்க வேண்டும் என பரீட்­சைகள் திணைக்­களம் அறிவுறுத்தியு­ள்­ளது.

அனுமதிச்­சீட்­டுக்­களை அதி­பர்கள் வைத்துக் கொள்­வ­தனால் மாண­வர்கள் பரீட்­சைகள் நேரங்­களில் ஏதேனும் பிரச்­சி­னை­களை எதிர்­நோக்­கினால் அதன் முழுப் பொறுப்­பி­னையும் அதி­பர்கள் ஏற்­றுக்­கொள்ள வேண்டும் எனவும் தெரிவிக்­கப்­பட்­டுள்­ளது.

இலங்கை பரீட்சை திணைக்­க­ளத்­தினால் வெளியி­டப்­பட்­டுள்ள அறிக்கை ஒன்­றி­லேயே பரீட்­சைகள் ஆணை­யாளர் டப்ள்யூ.எம்.என்.ஜே.புஸ்­ப­கு­மார மேற்­கண்­ட­வாறு தெரி­வித்­துள்ளார்.

அவ்­வ­றிக்­கையில் மேலும் குறிப்­பி­டப்­பட்­டுள்­ள­தா­வது.
பொதுத் தரா­தர சாதா­ரண தரப் பரீட்சை எதிர்­வரும் டிசம்பர் மாதம் 8 ஆம் திகதி முதல் 17 ஆம் திகதி வரை நடை­பெ­ற­வுள்ள நிலையில் பரீட்சைக்கான அனுமதிச்சீட்­டுக்கள் நாட­ளா­விய ரீதியில் உள்ள பாட­சா­லை­க­ளுக்கு பரீட்­சைகள் திணைக்­க­ளத்­தினால் கடந்த 18 ஆம் திகதி தபால் மூலம் பாட­சா­லை­க­ளுக்கு அனுப்­பி­வைக்­கப்­பட்­டுள்­ளது.

இவ்­வா­றான நிலையில் பரீட்சை அனுதிச்­சீட்­டு­களை பாட­சாலை அதி­பர்கள் உட­ன­டி­யாக மாண­வர்­க­ளுக்கு கைய­ளிக்க நட­வ­டிக்கை எடுக்க வேண்டும். அவற்றை அதி­பர்கள் வைத்­தி­ருக்க முடி­யாது. அவ்­வாறு அனுமதிச்­சீட்­டு­களை அதி­பர்கள் வைத்துக் கொள்­வ­தனால் மாண­வர்கள் ஏதேனும் பிரச்­சி­னை­களை எதிர்­நோக்­கினால் அதன் முழுப் பொறுப்­பி­னையும் அதி­பர்கள் ஏற்­றுக்­கொள்ள வேண்டும்.

இம்­முறை மொத்­த­மாக 664537 பரீட்­சார்த்­திகள் பரீட்­சைக்குத் தோற்­ற­வுள்­ள­துடன் இதில் 403442 பேர் பாட­சாலை மாணவ மாண­வியர் மறு­புறம் பாட­சாலை பரீட்­சார்த்­தி­களின் அனுமதிச்சீட்­டுக்கள் பாடசாலை அதிபர்களுக்கும் தனிப்பட்ட பரீட்சார்த்திகளின் அனுமதிச்சீட்டுக்கள் தனிப்பட்ட முகவரிகளுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக அவ்வறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

avathani Media Network

About avathani Media Network -

Author Description here.. Nulla sagittis convallis. Curabitur consequat. Quisque metus enim, venenatis fermentum, mollis in, porta et, nibh. Duis vulputate elit in elit. Mauris dictum libero id justo.

Subscribe to this Blog via Email :