Featured Home (TOP)

Recent Comments

Saturday, April 18, 2015

Unknown

கதிரை சின்னத்தில் மஹிந்த ராஜபக்ஷ?

இலங்கை அர­சி­யலில் அடுத்த வாரம் தீர்க்­க­மான சில தீர்­மா­னங்­களை எடுக்கும் வார­மாக அமையப் போகின்­றது. 19 ஆவது திருத்தம் நிறை­வேற்­றப்­ப­டுமா? அல்­லது பாரா­ளு­மன்றம் கலைக்­கப்­ப­டுமா ? என்ற கேள்­விகள் இலங்கை அர­சி­யலை ஆக்­கி­ர­மித்­துள்ள நிலையில், முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக் ஷ பிர­தமர் வேட்­பா­ள­ராகி பொதுஜன ஐக்­கிய முன்­ன­ணியின் கதிரை சின்­னத்தில் போட்­டி­யி­டு­வா­ரென்றும் அர­சியல் வட்­டா­ரங்­க­ளி­லி­ருந்து தெரிய வரு­கின்­றது.
இது தொடர்பில் மேலும் தெரிய வரு­வ­தா­வது,

ஜனா­தி­பதி ஸ்ரீலங்கா சுதந்­திர கட்­சியின் வேட்­பா­ள­ராக ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­ன­ணியில் போட்­டி­யிட வாய்ப்­ப­ளிக்­கலாம். ஆனால் பிர­தமர் வேட்­பா­ள­ராக போட்­டி­யிட வாய்ப்­ப­ளிக்­கப்­ப­ட­மாட்­டாது என ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால திட்­ட­வட்­ட­மாக தெரி­வித்­துள்ள நிலையில், பிர­தமர் வேட்­பா­ள­ராக கள­மி­றங்கும் மஹிந்­தவின் விருப்­பமும் அவரை ஆத­ரிக்கும் வாசு, தினேஸ், விமல், கம்­மன்­பில அணி­யி­னரும் சற்று தளர்ந்­துள்ள நிலையில் சித்­திரை புத்­தாண்டு தினத்தை முன்­னிட்டு தங்­கா­லையில் மஹிந்­தவின் வீட்­டுக்கு ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­ன­ணியின் எம்.பி. க்கள் 37 பேர் உட்­பட மாகாண சபை உறுப்­பி­னர்கள் என 57 பேர் சென்று விருந்­து­ப­சா­ரத்தில் கலந்து கொண்­டுள்­ள­தோடு இதன்­போது மஹிந்­தவின் எதிர்­கால அர­சியல் வியூ­கங்கள் தொடர்­பாக பல தீர்­மா­னங்கள் எடுக்­கப்­பட்­ட­தா­கவும் தெரிய வரு­கின்­றது.
பிர­த­ம­ரா­கவும், இரண்டு தட­வைகள் நாட்டின் ஜனா­தி­ப­தி­யா­கவும் பதவி வகித்த மஹிந்த பொதுத்­தேர்­தலில் சாதா­ரண வேட்­பா­ள­ராக கள­மி­றங்­கு­வதை விரும்­ப­வில்­லை­யென்றும் அதே­வேளை சுதந்­திர கட்­சியின் பிர­தமர் வேட்­பா­ள­ராக போட்­டி­யிட சந்­தர்ப்பம் கிடைக்­காமல் போனால் தினேஸ் குண­வர்த்­த­னவின் தலை­மை­யி­லான மக்கள் ஐக்­கிய முன்­ன­ணியில் போட்­டி­யி­டலாம் என்றும் யோசனை முன்­வைக்­கப்­பட்­ட­தோடு,அத்­தோடு ஏ.எஸ்.பி. லிய­ன­கேவின் இலங்கை தொழி­லாளர் கட்­சியை மஹிந்­த­வுக்கு வழங்க தயா­ராக லிய­னகே இருப்­பது தொடர்­பிலும் ஆரா­யப்­பட்­டுள்­ளது. ஆனால் இக்­கட்­சியில் பிர­தமர் வேட்­பா­ள­ராக போட்­டி­யிட்டு வெற்றி பெற முடி­யாது.
அத்­தோடு மஹிந்­தவை ஆத­ரிக்கும் எம்.பி. க்களுக்கும் பொது தேர்­தலில் வேட்பு மனு சுதந்­திர கட்­சியில் நிரா­க­ரிக்­கப்­பட்டால் அவர்­க­ளாலும் மேற்­கண்ட கட்­சி­களில் போட்­டி­யிட்டு வெற்றி பெற முடி­யாது.
இவ்­வா­றா­ன­தொரு நிலை­யி­லேயே மக்­க­ளுக்கு நன்கு பரிச்­ச­ய­மான பொது­ஜன ஐக்­கிய முன்­ன­ணியின் கதிரை சின்­னத்தில் போட்­டி­யிட தீர்­மா­னிக்­கப்­பட்­டுள்­ள­தா­கவும் தெரிய வரு­கின்­றது.
இம் முன்­ன­ணியின் பொது செய­லா­ள­ரான முன்னாள் பிர­தமர் டி.எம். ஜய­ரத்ன பதவி வகிக்­கின்ற நிலையில் அதற்­கான ஒப்­பு­தலை வழங்க அவர் தயா­ராக இருப்­ப­தா­கவும் தெரிய வரு­கின்­றது.
இவ்­வா­றா­ன­தொரு அர­சியல் சூழ்­நிலை உரு­வா­கு­மானால் மஹிந்த பிர­தமர் வேட்­பா­ள­ரா­கவும் அவரை ஆத­ரிப்­ப­வர்­களும் பொது­ஜன ஐக்­கிய முன்­ன­ணியின் வேட்­பா­ள­ராக கள­மி­றங்­கு­வ­தற்கு தீர்­மா­னிக்­கப்­பட்­ட­தா­கவும் தெரிய வரு­கின்­றது.
இவ்­வாறு பொது­ஜன ஐக்­கிய முன்­ன­ணியில் போட்­டி­யிட்டால் 113 இடங்­களை பெற்­றுக்­கொண்டு மஹிந்த பிர­த­ம­ராக வாய்ப்­பி­ருப்­ப­தா­கவும் நம்­பப்­ப­டு­கி­றது.
இலங்கை அர­சி­யலில் இன்று கடும் சூறா­வளி ஏற்­பட்­டுள்­ளது. எதிர்­வரும் 20 ஆம் திகதி 19 ஆவது திருத்தம் பாரா­ளு­மன்­றத்தில் விவா­திக்­கப்­பட்டு நிறை­வேற்­று­வ­தற்கு அரசு தீர்­மா­னித்­துள்­ளது.

எதிர்க்­கட்சி தேர்தல் முறை மாற்­றத்­திற்­கான 20 ஆவது திருத்­தத்­தையும் இணைத்து விவாதம் நடத்­தப்­பட வேண்­டு­மென வலி­யு­றுத்­தப்­பட்­டுள்­ளது.இந்­நி­லையில் 19 ஆவது திருத்தம் நிறைவேற்றப்படுமா?இல்லையா என்பதும் அரசியலில் ஊசலாடிக்கொண்டிருக்கும் பிரச்சினையாக தலையெடுத்துள்ளது.
எனவே அடுத்த வாரம் இலங்கை அரசியலில் முக்கியமான தீர்மானங்களை எடுக்கும் வாரமாக அமையலாம். 19 நிறைவேற்றப்படுமா ? அல்லது பாராளுமன்றம் கலைக்கப்படுமா?பொதுத்தேர்தலில் மஹிந்தவின் வகிபாகம் என்னவென்பது வெளிவரலாம் என்றும் அரசியல் வட்டாரங்களில் பெரும் எதிர்பார்ப்பாக காணப்படுகின்றது.

Source -Virakesary

Unknown

About Unknown -

Author Description here.. Nulla sagittis convallis. Curabitur consequat. Quisque metus enim, venenatis fermentum, mollis in, porta et, nibh. Duis vulputate elit in elit. Mauris dictum libero id justo.

Subscribe to this Blog via Email :