Featured Home (TOP)

Recent Comments

Wednesday, April 1, 2015

Unknown

கல்குடா கல்வி வலயத்தில் பாடசாலை மாணவர்கள் ஞாயிறு பிரத்தியேக வகுப்புக்களுக்குச் செல்லத் தடை.


மட்டக்களப்பு மாவட்டத்தின் கல்குடா கல்வி வலயத்தில் எதிர்வருகின்ற 05 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை முதல் பாடசாலை மாணவர்கள் தனியார் வகுப்புக்களுக்கு செல்வதைத் தடுக்கும் உத்தரவைத் தான் பிறப்பித்திருப்பதாக கல்குடா கல்வி வலயப் பணிப்பாளர் எஸ். ஸ்ரீகிருஸ்ணராஜா தெரிவித்தார்.

இதற்கான அறிவுறுத்தல்களை கல்குடா வலயத்திலுள்ள அனைத்து பாடசாலைகளின் அதிபர்களுக்கும் தனியார் கல்வி நிலையங்களுக்கும் வழங்கியுள்ளதாக அவர் மேலும் கூறிப்பிடார்.
Read More
Unknown

தமிழ் தேசிய கூட்டமைப்பு கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பொன் செல்வராசா பயணித்த வேன் - மட்டக்களப்பு கல்லடியில் விபத்துக்குள்ளானது

(பழுலுல்லாஹ் பர்ஹான்)

தமிழ் தேசிய கூட்டமைப்பு கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பொன் செல்வராசா பயணித்த வேன் இன்று 1 புதன்கிழமை பிற்பகல் மட்டக்களப்பு கல்லடியில் விபத்துக்குள்ளானது.

குறித்த வேன் மட்டக்களப்பில் இருந்து கல்முனை நோக்கி பயணித்த வேளை முன்னாள் சென்ற மோட்டார் சைக்கிள் ஒன்றுடன் மோதியதிலே இவ் விபத்து இடம்பெற்றுள்ளதாக் அப்பகுதியில் நின்ற பொது மக்கள் தெரிவிக்கின்றனர்.

இவ் விபத்து மட்டக்களப்பு கல்லடி சிவானந்தா வித்தியாலயத்திற்கு அருகாமையில் இடம்பெற்றது.

மேற்படி விபத்தில் தனக்கும் தனது பாதுகாப்பு உத்தியோகத்தர்களுக்கும் எவ்வித காயமும் ஏற்பட வில்லையென தமிழ் தேசிய கூட்டமைப்பு கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பொன் செல்வராசா தெரிவித்தார்.
Read More
Unknown

ஸ்ரீலங்கா ஹிறா பௌண்டேஷன் நிறுவனத்தின் ஏற்பாட்டில் இலவச கண் சிகிச்சை முகாமின் ஆரம்ப நிகழ்வு, காத்தான்குடி தள வைத்தியசாலையில்

(பழுலுல்லாஹ் பர்ஹான்)

ஸ்ரீலங்கா ஹிறா பௌண்டேஷன் நிறுவனத்தின் ஏற்பாட்டில் ஸ்ரீலங்கா ஜம்இய்யதுஸ் ஷபாப் மற்றும் சர்வதேச அல் பஷர் பௌண்டேஷனும் இணைந்து நடாத்தும் கண்ணில் வெள்ளைபடர்படருவதை அகற்றும் இலவச கண் சிகிச்சை முகாமின் ஆரம்ப நிகழ்வு 01-04-2015 இன்று புதன்கிழமை காத்தான்குடி தள வைத்தியசாலையில் இடம்பெற்றது.

ஸ்ரீலங்கா ஹிறா பௌண்டேஷன் நிறுவனத்தின் பணிப்பாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில், சவூதி அரேபிய நாட்டின் தொழிலதிபர் அஷ்ஷெய்க் காலித் பின் நாஸிர் அஸ்ஸித்ரி, ஜம்இய்யதுஸ் ஷபாப் நிறுவனத்தின் தலைவர் அஷ்ஷெய்க் ஜம்மான் அஸ்ஸஹ்றானி, ஜம்இய்யதுஸ் ஷபாப் நிறுவனத்தின் பணிப்பாளர் அஷ்ஷெய்க் அப்துர் ரஸீத், ஷபாப் நிறுவனத்தின் கண் சிகிச்சை முகாமின் பொறுப்பாளர் ஏ.ஜெ.வாரிஸ், ஸ்ரீலங்கா ஹிறா பௌண்டேஷன் நிறுவனத்தின் செயலாளர் அஷ்ஷெய்க் ஏ.எல்.எம்.மும்தாஸ் (மதனி), காத்தான்குடி தள வைத்தியசாலையின் பொறுப்பதிகாரி டாக்டர் ஜாபிர் உட்பட வைத்தியர்கள், முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பரீட் உட்பட ஊர் பிரமுகர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
Read More
Unknown

மாட்டு வண்டியில் உலக முட்டாள்கள் தினம்

(பழுலுல்லாஹ் பர்ஹான்)

உலக முட்டாள்கள் தினமான ஏப்ரல் 1 இன்று புதன்கிழமை மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் நிலையத்திற்கு அருகாமையில் ஒருவர் மாட்டு வண்டியில் இன்னும் சிக்ரட் புகைக்கும் உங்கள் சிலருக்கு இனிய பிறந்நாள் வாழ்த்துக்கள் என்ற பதாதையை கட்டி வீதியால் செல்வதை படங்களில் காணலாம்.





Read More
Unknown

19வது திருத்தச் சட்டம் : விசாரணை இன்று

அரசாங்கத்தால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட 19வது திருத்தச் சட்டம் தொடர்பில் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்கள் மீதான விசாரணை இன்று இடம்பெறவுள்ளது.   மனுக்களை  விசாரணை  செய்வதற்காக மூவர் அடங்கிய உயர் நீதிமன்ற நீதிபதிகள் குழாம் பெயரிடப்பட்டுள்ளது. 
இந்தக் குழுவின் தலைவராக பிரதம நீதியரசர் கே.ஶ்ரீபவன் நியமிக்கப்பட்டுள்ளதோடு, சந்திரா ஏகநாயக்க மற்றும் பிரியசாத் டெப் ஆகியோரும் இதில் அடங்குகின்றனர். 
Read More
Unknown

காத்தான்குடியில் கண் சிகிச்சை முகாம் இன்று (01.04.2015) ஆரம்பம்

-ஏ.எல்.டீன் பைரூஸ்-

சிறி லங்கா ஹிறா பௌண்டேசன் ஏற்பாட்டினில் சிறிலங்கா ஜம் இய்யத்துஸ்ஷபாப் மற்றும் சர்வதேச அல்பஷர் பெண்டேசன் இணைந்து நடாத்தும் கண் சத்திர சிகிச்சை முகாம் 01.04.2015  புதன்கிழமை இடம் பெற இருப்பதனை முன்னிட்டு காத்தான்குடி ஆதார வைத்திய சாலையில் அதற்கான சகல ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாக முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் கே.எல்.எம்.பரீட் தெரிவித்தார்.

இடம் பெற உள்ள கண் சிகிச்சை முகாமிற்கு என 85 நோயாளர்கள் பதிவு செய்துள்ளதாகவும்; இம்முகாமில் நோயாளர்களை கவனிக்கவென விசேட உள்ளுர் தொண்டர் படை அணி தயாராக இருப்பதாகவும் கே.எல்.எம்.பரீட் மேலும் தெரிவித்தார்.














Read More
Unknown

காத்தான்குடி மத்திய கல்லூரி (தேசிய பாடசாலையின்) 85வது ஆண்டு நிறைவினை முன்னிட்டு கழகங்களுக்கிடையிலான கால்பந்தாட்டப் போட்டிகள்

(ஏ.எல்.டீன்பைரூஸ்)

காத்தான்குடி மத்திய கல்லூரி (தேசிய பாடசாலையின்) 85வது ஆண்டு நிறைவினை முன்னிட்டு உள்ளுர், வெளியுர் கழகங்களுக்கிடையிலான ஒரு சினேக புர்வ கால்பந்தாட்ட சுற்றுப் போட்டிகள் இடம்பெற இருப்பதனை முன்னிட்டு  (சீட்டு எடுத்தல் மூலம் கழகங்களை தெரிவு  செய்யும் நிகழ்வு) பாடசாலையின் அதிபர் கேப்டன் யூஎல்.ஏ. முபாரக் தலைமையில் (31.03.2015 செவ்வாய்) பாடசாலையில் இடம்பெற்றது.
Read More
Unknown

சன்றைஸ் விளையாட்டுக் கழகம் சம்பியனாகத் தெரிவு


(ஏ.எல்.டீன்பைரூஸ்)

காத்தான்குடி பிரதேச செயலகத்தினால் நடாத்தப்பட்டு வந்த பிரதேச கழகங்களுக்கிடையிலான உதை பந்தாட்டப் போட்டியில் 2015ம் ஆண்டுக்கான சம்பியனாக காத்தான்குடி சன்றைஸ் விளையாட்டுக் கழகம் தெரிவாகி உள்ளது.
Read More
Unknown

கொடுத்த வாக்குறுதியைப் பேணாது ஏமாற்றினார் ஹிஸ்புல்லாஹ்! உலமாக்கள் ஏமாற்றம்!!


(புவி. எம்.ஐ. றஹ்மதுழ்ழாஹ்)

காத்தான்குடியில் அமைக்கப்பட்டு வரும் இஸ்லாமிய அருங்காட்சியகத்தில் உருவச் சிலைகளையும், பொம்மைகளையும் வைப்பது தொடர்பாக, தேசிய தவ்ஹீத்  ஜமாஅத் உலமாக்களுடன் சந்திப்பொன்றை மேற்கொண்டு தனது செயற்பாட்டிற்கான மார்க்க ரீதியான ஆதாரங்களையும், காரணங்களையும் விளக்குவதாக கடந்த 27ம்திகதி வெள்ளிக்கிழமை அந்த அமைப்பின் உலமாக்களிடம் வாக்குறுதியளித்திருந்த மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், முன்னாள் பிரதியமைச்சருமான எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ், இன்று தனது வாக்குறுதியை அப்பட்டமாக மீறியுள்ளார் எனத் தெரிவிக்கப்படுகிறது.


கடந்த 30ம் திகதி திங்கட்கிழமை இச்சந்திப்பை மேற்கொள்வதாக அவர் வாக்குறுதியளித்திருந்த போதிலும், இன்றும் அவரது சந்திப்புக்காக இரவு10:00 மணிவரை காத்திருந்த தேசிய தௌஹீத் ஜமாஅத் உலமாக்கள், இதன் பிறகு அவருடன் இவ்விவகாரம் தொடர்பான சந்திப்பில் பங்கேற்பதில்லை என்ற தீர்மானத்துடன் கலைந்தனர்.


இதேவேளை, கடந்த வாரம் இடம்பெற்ற ஜும்ஆவின் போது மக்கள் மத்தியில் அறிவிக்கப்பட்டவாறு, நாளை (01.04.2015) புதன்கிழமை இரவு 08:00 மணிக்கு புதிய காத்தான்குடி மீன்பிடி இலாகா வீதியிலுள்ள தேசிய தவ்ஹீத் ஜமாஅத் தலைமையகத்தில் 'இஸ்லாமிய நூதனசாலையில் உருவச் சிலைகள் மற்றும் பொம்மைகள் வைக்கலாமா?' எனும் தலைப்பில் விஷேட மார்க்க விளக்க நிகழ்ச்சியொன்றும் வீடியோ காட்சிகளுடன் நடைபெறவுள்ளது






தேசிய தவ்ஹீத் ஜமாஅத்தின் பிரசாரகர் மௌலவி எம்.சீ.எம். ஸஹ்றான் (மஸ்ஊதி) இந்நிகழ்வில் விளக்கவுரை ஆற்றுவதோடு, மேற்படி தலைப்பிலான நூல் வெளியீடொன்றும் அங்கு இடம்பெறவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.
Read More