Featured Home (TOP)

Recent Comments

Friday, April 17, 2015

Unknown

காத்தான்குடி பூர்வீக நூதனசாலை சம்மந்தமாக காத்தான்குடி நகர சபையின் முதல்வர் அஸ்பர் விடுக்கும் முக்கிய அறிவித்தல்.இத்துடன் இணைப்பு

(பழுலுல்லாஹ் பர்ஹான்)

காத்தான்குடி பூர்வீக நூதனசாலை சம்மந்தமாக அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா கடந்த 15-04-2015ம் திகதி காத்தான்குடி நகர முதல்வருக்கு அனுப்பியுள்ள கடிதம் தொடர்பில் காத்தான்குடி நகர சபையின் முதல்வர் எஸ்.எச்.எம்.அஸ்பர் விடுத்துள்ள முக்கிய அறிவித்தல் எமது இணையத்தள வாசகர்களுக்காக இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.
Read More
Unknown

காத்தான்குடி இஸ்லாமிய அரும்காட்சியகம் சம்மந்தமாக காத்தான்குடி ஜம்இய்யதுல் உலமா மற்றும் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா என்பன விடுத்துள்ள முக்கிய அறிக்கைகள்.இத்துடன் இணைப்பு

(பழுலுல்லாஹ் பர்ஹான்)

கடந்த 15-04-2015 மக்கள் பார்வைக்காக அங்குரார்ப்பணம் செய்யப்பட்ட காத்தான்குடி இஸ்லாமிய அரும்காட்சியகம் சம்மந்தமாக காத்தான்குடி ஜம்இய்யதுல் உலமா மற்றும் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா என்பன விடுத்துள்ள முக்கிய அறிக்கைகள் இத்துடன் எமது இணையத்தள வாசகர்களுக்காக இணைக்கப்பட்டுள்ளது.







Read More
Unknown

காத்தான்குடி இஸ்லாமிய நூதனசாலை தொடர்பில் அ.இ.ஜ.உலமா பத்வாக் குழுவின் கடிதம்

புவி. எம்.ஐ. றஹ்மதுழ்ழாஹ் 

காத்தான்குடியில் திறந்து வைக்கப்பட்ட 'இஸ்லாமிய நூதனசாலை' தொடர்பாக அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் பத்வாக்குழு இணைப்பாளர் அஷ்ஷெய்க் எம்.ஏ.எம். ஹாரிஸ் ரஷாதி, காத்தான்குடி நகர சபையின் தவிசாளர் எஸ்.எச்.எம். அஸ்பருக்கு நேற்றைய தினம் (15.04.2015) கடிதமொன்றை அனுப்பி வைத்துள்ளார்.

காத்தான்குடி ஜம்இய்யதுல் உலமா சபைக்கும் பிரதியடப்பட்டுள்ள அக்கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாத்துஹு

காத்தான்குடி முஸ்லிம்கள் செறிந்து வாழும் ஊராகும். அறிஞர்கள், துறைசார்ந்தவர்கள் அங்கு நிறைந்து காணப்படுவது சிறப்பம்சமாகும். கிழக்கிலங்கையில் மாத்திரமன்றி நாடளாவிய ரீதியில் இவ்வூர் விஷேடமாகக் கருதப்படுவது யாராலும் மறுக்க முடியாத உண்மையாகும்.
இந்நிலையில் மனிதர்களை ஒத்த உருவச்சிலைகளை உள்ளடக்கியதான நூதனசாலையொன்று அங்கு ஆரம்பிக்கப்படவிருப்பதாகவும், அது சம்பந்தமான மார்க்கத் தீர்;ப்பைக் கோரியும் ஜம்இய்யாவின் காத்தான்குடிக் கிளை 21.03.2015ஆம் திகதியில் கடிதமொன்றை தலைமையகத்துக்கு அனுப்பி வைத்திருந்தது.
Read More
Unknown

100நாள் வேலைத்திட்டத்தின் கீழ் கற்பிணி தாய்மாருக்கான சத்துணவு வழங்கும் சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சின் திட்டத்தின்-மட்டு மாவட்ட நிகழ்வு-படங்கள்.

(பழுலுல்லாஹ் பர்ஹான்)

நாட்டில் நல்ல அபிவிருத்தியைத்திட்டமிடுவதாக இருந்தால் உடல் உள ஆரோக்கியமும் வளர்ச்சியும் பெற்ற சமூகம் இருத்தல் வேண்டும் அதற்கு ஆரோக்கியமான குழந்தைகளே தேவை என மட்டக்களப்பு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் எஸ்.கிரிதரன் தெரிவித்தார்.

அரசாங்கத்தின் 100நாள் வேலைத்திட்டத்தின் கீழ் கற்பிணி தாய்மாருக்கான சத்துணவு வழங்கும் சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சின் திட்டத்தின் மாவட்ட நிகழ்வு நேற்றைய தினம் வியாழக்கிழமை (16) மட்டக்களப்பு மாவட்டத்தின் காத்தான்குடி பிரதேச செயலகத்தில் நடைபெற்றது.
Read More
Unknown

புண்ணிய தானம் எனப்படும் நெல் தானமளிக்கும் தேசிய நிகழ்வுகளில் இஸ்லாமிய முறைப்படியான நிகழ்வு-காத்தான்குடியில்-படங்கள்.

(பழுலுல்லாஹ் பர்ஹான்)
 
புண்ணிய தானம் எனப்படும் நெல் தானமளிக்கும் தேசிய நிகழ்வுகளில் இஸ்லாமிய முறைப்படியான நிகழ்வு கடந்த 15 புதன்கிழமை மட்டக்களப்பு மாவட்டத்தின் காத்தான்குடியிலுள்ள முஹைதீன் மெத்தைப் பெரிய ஜூம்மா பள்ளிவாயலில் நடைபெற்றது.
 
காத்தான்குடி பிரதேச செயலாளர் எஸ்.எச் முசம்மில் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸ் கலந்து கொண்டார்.
 
இதன் போது காத்தான்குடி பிரதேசத்திலுள்ள வறிய மக்களுக்கு நெல் தானம் வழங்கப்பட்டது.
 
இங்கு ஆசியுரையை காத்தான்குடி ஜம்இய்யதுல் உலமா சபை தலைவர் மௌலவி அப்துல் காதர் (பலாஹி) வழங்கினார்.
Read More