'இஸ்லாத்தின் பார்வையில் ஸஹாபாக்கள்' எனும் நூலின் 3ம் பதிப்பு நூல் வெளியீட்டு விழா-படங்கள்.
(பழுலுல்லாஹ் பர்ஹான்)
முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் ஆதரவுடன் அல் மனார் நிறுவனமும் ஸ்ரீலங்கா ஹிறா பவுண்டேஷனும் இணைந்து நடாத்தும் 'இஸ்லாத்தின் பார்வையில் ஸஹாபாக்கள்' எனும் நூலின் 3ம் பதிப்பு நூல் வெளியீட்டு விழா 24-04-2015 இன்று வெள்ளிக்கிழமை காத்தான்குடி ஹிஸ்புல்லாஹ் மண்டபத்தில் இடம்பெற்றது.
அல்-மனார் நிறுவனத்தின் செயலாளர் நாயகம் அஷ்ஷெய்க் ஏ.எல்.எம்.மும்தாஸ் (மதனி) தலைமையில் இடம்பெற்ற இந் நூல் வெளியீட்டு விழாவில் பிரதம அதிதியாக ஸ்ரீலங்கா ஹிறா பவுண்டேஷன் நிறுவனத்தின் தலைவரும்,பாராளுமன்ற உறுப்பினருமான எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் கலந்து கொண்டதோடு விஷேட அதிதியாக மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்தின் வலயக் கல்விப் பணிப்பாளர் எம்.ஐ.சேகு அலி கலந்து கொண்டார்.
