
ஊரார் கோழியறுத்து உம்மா பெயாில் கத்தம்..? ஒரு பிள்ளை என்பதற்காய் ஒன்பது முறை சுன்னத்
'ஊரார் கோழியறுத்து உம்மா பெயரில் கத்தம் ஓதுவது' - இப்படியொரு பழமொழி நமது சமூகத்தில் வழக்கில் இருந்து வருகிறது.
இதனை உண்மைப்படுத்தும் வகையில் நமதூரில் பல்வேறு விடயங்கள் அவ்வப்போது நடந்தேறி வருவதையும் நம்மால் அவதானிக்க முடிகிறது. இதிலொன்றுதான் கடந்த (17.05.2015) அன்று காலை இடம் பெற்ற கத்தமாகும். இந்தக் கத்தத்திற்;கும், ஏற்கனவே ஓதப்பட்ட பல்வேறுபட்ட கத்தங்களுக்கும் சாப்பாடு வழங்கியிருக்கிறார்கள் புதிய காத்தான்குடி பெரிய ஜூம்ஆ பள்ளிவாயல் நிருவாகத்தினர்.