Featured Home (TOP)

Recent Comments

Wednesday, May 20, 2015

Unknown

கடந்த 4 வருடங்களாக அபிவிருத்தி என்ற போர்வையில் மூடப்பட காத்தான்குடி பொது மைதானத்தினை சீர்செய்ய நடவடிக்கை ..


கடந்த 4 வருடங்களாக அபிவிருத்தி என்ற போர்வையில் மூடப்பட்டு 120 இலட்சம் ரூபாய்க்கு மேல் அரசாங்கத்தினுடைய பொதுப்பணத்தினை செலவு செய்து செப்பணிடப்பட்ட காத்தான்குடி பொது மைதானத்தினை கடந்த ஆண்டு ஜனாதிபதி தேர்தலின் போது முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ அவர்களினுடைய பொதுக் கூட்டத்தினை நடாத்துவதற்கு மேடை அமைக்கின்றோம் என்ற பேரில் கனரக வாகனங்களை தாறுமாறாக செப்பணிடப்பட்ட மைதானத்தினுள் ஓடி, மைதானத்தை சேதப்படுத்தி மேடும் பள்ளமுமாக மாற்றி பாவனைக்குதவாத நிலைக்கு மாற்றி,

ஆங்காங்கே குழிகளும், பள்ளங்களுமாக இருப்பதனால் விளையாட்டு வீரர்கள் உபாதைக்குள்ளாவதற்கான சந்தர்ப்பங்கள் அதிகமாக காணப்படுகின்றது.



இவ்வாறு பொதுப்பணத்தினை செலவு செய்தது மட்டுமல்லாமல், பாவனைக்குதவாமல் இந்த பொது மைதானத்தினை மாற்றியுள்ளமை மிகவும் கவலைக்குரிய விடயமாகும்.



அதே நேரத்தில் இதனை சீர்செய்து தருமாறு விளையாட்டு கழகங்கள் கேட்டதற்கு இணங்க இன்று (20.05.2015) புதன்கிழமை இப் பொது மைதானம் பார்வையிடப்பட்டு இதனை சீர் செய்வதற்குரிய மதிப்பீட்டினை மேற்கொள்ளுமாறு கோரி காத்தான்குடி நகரசபைக்கு ஓர் அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.



மதிப்பீட்டை பெறுவதனூடாக முதலமைச்சரின் அனுமதியினை பெற்று இதனை சீர்செய்வதற்குரிய நடவடிக்கை எடுக்கப்படும். பொதுப்பணங்கள் இவ்வாறு வீணடிக்கப்படுகின்ற ஓர் அரசியல் கலாச்சாரத்தினை துடைத்தெறிந்து மக்களுடைய பணத்தின் பெறுமதியினை உணர்ந்து செயற்பட வேண்டியது நம்மீது கடமையாகவுள்ளது என கிழக்கு மாகாணசபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறூக் தெரிவித்தார்..



(ஜுனைட்.எம்.பஹ்த்)
Read More
Unknown

நேற்று சீமா, இன்று வித்தியா, நாளை நீ அல்லது நான்.....!!

(ற. இஸ்ஸதுன்னிஸா, மருத்துவபீடம் - கிழக்கு பல்கலைக்கழகம்)

வெறுத்துப் போன மனதுடன் சீமாவுக்காய் எழுந்த கண்ணீரின் தொடராய் இந்தப் பதிவு தொடர்கிறது, என் உடன் பிறவா சகோதரி வித்தியாவைத் தொட்டு.

சீமா.. என் காத்தான்குடி மண்ணின் கறைபடிந்த கைக்குள் அகப்பட்டு மரித்துப் போனவள். பால்மணம் மாறா அந்தப் பச்சைக் குழந்தையும் காமுகன் ஒருவனால் சிதைக்கப்பட்டாள்.. சின்னாபின்னமாக்கப்பட்டாள்.. உருவழிக்கப்பட்டாள்.. இறுதியில் உயிரழிக்கப்பட்டாள்..

ஓங்கியெழுந்த கண்டனங்களும், உரிமைக்கான குரல்களும் சில மாதங்களில் நியதியாய் மெதுமெதுவாய் அமைதியடைந்தன.

இன்று வித்தியா..
ஆசைகளையும், இலக்குகளையும் கனவாய்க் கொண்டவள். மிக அருகில் தெரிந்த பூரிப்பான புது வாழ்க்கையை எதிர்பார்த்து நடந்தவள். யுத்தம் நிர்மூலமாக்கிய பிரதேசத்தில் இருந்து புதியதோர் வாழ்க்கைக்காய் புறப்பட்டவள். என் கண்காணாத் தோழி.. கொரூரமாகச் சிதைக்கப்பட்டிருக்கிறாள்.. காமுகர்களின் கோரப் பசிக்கு இரையாகி இருக்கிறாள்.. உயிர்போகும்வரை போராடி தோற்றுப் போய் எமை விட்டும் தூரப்போயிருக்கிறாள். 

மௌனித்துப் போகிறது மனம். சிந்திக்க மறக்கிறது மூளை. மடை திறக்கிறது விழிகள். தோற்றுப் போகிறது விரல்கள்..!

ஏ.. மட மானுட சமூகமே.. என்னவாயிற்று உனக்கு..?
அடிப்படைப் பண்பாட்டு வீழ்ச்சியில் இருந்து அதியுயர் ஆட்சி வரைக்கும் அராஜகமே தளைத்தோங்குவதைக் கண்டும் காணாமல் இருப்பதுதான் உனக்கு கைவந்த கலையாயிற்றோ??
நானும் குற்றம் சொல்ல விரும்பவில்லை மேலும்.. இரண்டு பாடங்களை மட்டும் இங்கு பதிந்துவிட்டுப் போய் விடுகிறேன்!

முதலாவது..
என் பதிவை வாசிக்கும் தாய்க்கும் தந்தைக்குமானது.. ஆணுக்கும் பெண்ணுக்குமானது.
உங்கள் குழந்தையைச் சூழ்ந்துள்ள அபாயத்தை தயவு செய்து புரிந்து கொள்ளுங்கள்.
பாலியல் துஷ்பிரயோகத்தின் அடிப்படை அலகு, வீடுதான் என்பதை மனதில் கொள்ளுங்கள்.

உங்கள் குழந்தை தன் சொந்தத் தந்தையால், சகோதரனால், கணவனால், பாட்டனால், மாமனால், மச்சானால், சிற்றப்பனால், பெரியப்பானால் என்று அத்தனை உறவுகளும் அதற்கு பல விதங்களில் அச்சுறுத்தலாய் அமைகிறது என்ற உண்மையை புரிந்து கொள்ளுங்கள். 
வெளிப்படையாய் சிந்தியுங்கள். மூடி மறைப்பதை விட்டும் பூசி மெழுகுவதை விட்டும் வெளி வாருங்கள்.

உங்கள் குழந்தை உங்களிடம் ஓடோடி வந்து இன்னவர் என்னைத் துஷ்பிரயோகம் செய்கிறார் என்று கூறும் என எதிர்பார்க்காதீர்கள். அது ஒருக்காலும் நடக்காது. ஏனெனில் தனக்கு என்ன நடக்கிறது என்று புரிந்து கொள்ள முடியாத நிலையில் இருக்கிறது அந்தக் குழந்தை.
எங்களில் எத்தனை பேர் வெளிப்படையாய் கற்றுக் கொடுத்திருக்கிறோம் எங்கள் குழந்தைக்கு, எது நல்ல தொடுகை (பழழன வழரஉh), எது கெட்ட தொடுகை (டியன வழரஉh) என்று?

எங்களில் எத்தனை பேர் கற்றுக் கொடுத்திருக்கிறோம் எம் குழந்தைகளுக்கு, எது பாலியல் துஷ்பிரயோகம் என்று?? 
வார்த்தைகளால் பேசுவதையே பாவமாய் நாம் கருதும்போது, எவ்வாறு எங்கள் குழந்தை அதை விளங்கியறிந்து வெளிப்படுத்தும் என நாங்கள் எதிர்பார்ப்பது??
நாங்களே எங்கள் குழந்தையிடம் பேசத் தயங்கும்போது, எவ்வாறு நம் குழந்தை தனக்கு நேரும் அநியாயங்களை எம்மிடம் வெளிப்படுத்தும் என எதிர்பார்ப்பது? 
இன்று ஆசிரியர் என்ற பெயரில், மௌலவி என்ற பெயரில், மத போதகர் என்ற பெயரில், ஆட்டோக்காரன் என்ற பெயரில், அண்டை வீட்டுக்காரன் என்ற பெயரில், கடைக்காரன் என்ற பெயரில், இன்னும் ஏதேதோ பெயர்களிலெல்லாம் தமக்கு நேர்ந்த கொடுமைகளை சொல்லவும் முடியாமல், மெல்லவும் முடியாமல் ஒவ்வொரு சிறுமியும், சகோதரியும் திணறிக் கொண்டிருக்கின்றபோது...
குறைந்தது ஓரிருவர் அவர்களுக்காய் குரலெழுப்பவும் தீர்வு தேடியும் களமிறங்க.. அந்தோ பரிதாபம்!

என் சமூக உலமாக்கள் என்றும், தலைவர்கள் என்றும் சொல்கின்ற ஒரு சிலர் அவர்களைப் பார்க்கின்ற ஒழுங்கும், அவர்களுக்கெதிராய் முன்வைக்கும் அப்பட்டமான விமர்சன வார்த்தைகளும் அப்பப்பா...!!

பாலியல் துஷ்பிரயோகத்திற்கெதிராய் ஒரு சகோதரி தன் ஆதங்கத்தை முன்வைத்தபோது அதற்கெதிராய் ஒரு உலமா(?) மேற்கோள்காட்டிய அவரது படுகேவலமான முகநூல் விளக்கம் இன்னும் என் கண்முன் வந்து போகிறது.
பெண்களுக்கெதிரான வன்முறை என்று நான் பேச வரவில்லை. 
இது எங்கள் வீட்டுக் குழந்தைக்கான, என் சகோதரிக்கான, என் தோழிக்கான வெளிச்சொல்ல முடியா அவலநிலை என்ற மனநிலையையே எம் ஒவ்வொருவருள்ளும் ஏற்படுத்த விரும்புகின்றேன். 
குறைந்தது உங்கள் வீட்டுப் பெண்கள் பற்றியேனும் கரிசனை கொள்ளுங்கள். 
உங்கள் குழந்தைக்கு அதனுடைய மொழியில் உலகில் உள்ள எல்லா விடயங்களையும் கற்றுக் கொடுங்கள்.

நல்லதையும் கெட்டதையும் அடையாளம் காண கற்றுக் கொடுங்கள்.
இந்த உலகில் அவளைச்சூழவுள்ள சவால்களுக்கு முகம் கொடுத்து வாழக் கற்றுக் கொடுங்கள்.
தைரியமாய் எதிர்த்துக் கேள்வி கேட்கக் கற்றுக் கொடுங்கள்.
தவறுகளைத் தயங்காமல் சுட்டிக்காட்டக் கற்றுக் கொடுங்கள்.
தன் உடம்பினதும், உளத்தினதும் இயற்கை மாறுதல்களை இயற்கையாகவே அறிந்துணரக் கற்றுக் கொடுங்கள்.
மார்க்கம் என்ற பெயரில் எதையும் திணிக்க முயலாமல் அவள் கேட்கும் நியாயமான கேள்விகளுக்கு நேர்மையாக பதில் கூறி மார்க்கத்தை நடைமுறைப்படுத்துங்கள்.

தலையில் இருந்த துணியை ஏன் இறைவன் மார்பையும்  நோக்கி இறக்கச் சொன்னான்? என்ற விதியை, இறைவனின் சட்டம் என்ற நிலையையும் தாண்டி அதன் நியாயங்களையும் தாற்பரியங்களையும் தெளிவுபடுத்தி இறைவனின் வார்த்தைகளை உண்மையாக்கி உணரச் செய்யுங்கள்.

எங்கள் வீட்டு ஆண்பிள்ளைகளுக்கு அவர்களது சிறுபராயம் முதலே பெண்கள் பற்றிய மகமையையும், யதார்த்தத்தையும் உணர்த்துங்கள்.  பெண்களை தன் சகோதரியாக, தன்னைப் போன்ற ஒரு மனிதப்பிறவியாகப் பார்க்கும் ஒழுங்கைக் கற்றுக் கொடுங்கள். பாலியல் துஷ்பிரயோகத்தால் ஒரு பெண் எந்தளவு தூரம் மன உளைச்சலுக்கு உள்ளாவாள் என்பதை நியாயமாகப் புரிய வையுங்கள்.

ஆணும் பெண்ணும் ஒரே ஆத்மாவில் நின்றும் படைக்கப்பட்ட படைப்பு என்பதை வலியுறுத்திக் கூறுங்கள்.

காதலுக்கும், காமத்திற்கும், யௌவன ஹோர்மோன் மாற்றங்களுக்கும் இடையிலான வேறுபாட்டை விளக்கித் தெளிவுபடுத்துங்கள்.
பிழையான, தவறான சந்தர்ப்பங்கள் கிடைக்கும்போது எவ்வாறு அந்த இடத்தில் சரியாகவும், நீதியாகவும், மனிதனாகவும் பக்குவமாக நடந்து கொள்ள வேண்டும் என்பதைக் காட்டிக் கொடுங்கள்.

தயவு செய்து உங்கள் குழந்தைகளுடன் வெளிப்படையாய் இருங்கள். ஒரு ஆண் சிறுவனின் சரியான சந்தர்ப்பத்தில் நாம் ஒரு சிறந்த தாயாக, தந்தையாக, சகோதரனாக, சகோதரியாக இருக்கத் தவறும் பட்சத்திலேயே அந்த வெற்றிடத்தை அவன் மோசமான நபர்களைக் கொண்டு நிரப்புகின்றான் என்கிற உண்மையைப் புரிந்து கொள்ளுங்கள்.

சிறுவர்கள் சிறுவர்கள் என்று அவர்களைத் தூரப்படுத்த வேண்டாம்.
80மூ மூளை 15 வயதிற்கு முன்னரே வளர்ச்சியடைந்து விடுகிறது. அந்த வயதெல்லைக்குள் நாம் சுட்டிக்காட்ட மறந்த பல விடயங்கள்தான் வயதான பின்னர் பக்கச்சார்பாக நோக்கப்படுகிறது என்ற உண்மையைப் புரிந்து கொள்ளுங்கள்.
சீமா, வித்தியா போன்றோர் எங்கள் கைதாண்டிய நிலையில் இருந்தாலும், குறைந்தது எம் வீடுகளில் உள்ள பெண் சிறுமிகளையாவது காக்க வேண்டிய கடப்பாடு எம் ஒவ்வொருவருக்கும் இருக்கிறது.
நான் பதிவிடும் இரண்டாவது பாடம்:
சீமா ஒரு முஸ்லிமல்ல.. 
அவள் ஒரு பெண் சிறுமி.. ஒரு சகோதர மனிதப் பிறவி.
வித்தியா ஒரு ஹிந்து அல்ல..
ஒரு பெண் யுவதி.. ஒரு சகோதர மனிதப் பிறவி.
என் ஒட்டு மொத்த மனித சமூகமே...
தயவு செய்து இப்படியான விடயங்களில் எம் இனம் தொடர்பான தனித்துவங்களை கொஞ்சம் தூர வையுங்கள்.
இதனை ஒரு மனிதனுக்கு நிகழ்கின்ற அடிப்படை உரிமை மீறலாக அல்லது ஒரு பெண்ணுக்கு நிகழ்ந்த பாலியல் கொடுமையாகப் பாருங்கள்.
அன்று சீமாவுக்காய் குரல் கொடுத்த எம் முஸ்லிம் சமூகம் இன்று வித்தியாவுக்காய் குரல் கொடுக்க முன்வரவில்லை.. அனுதாபம் தெரிவிக்க தயாராகவில்லை..அச்சமூட்டி எச்சரிக்கை செய்ய முற்படவில்லை..!
இன்று வித்தியாவுக்காய் குரல் கொடுக்கும் என் சகோதர சமூகம், அன்று சீமாவுக்காய் கண்டனக் கோஷமெழுப்பவில்லை.. போராட்டம் செய்யவில்லை.. நீதிக்காக அழுத்தம் கொடுக்கவில்லை..!
ஊடகங்களும், மனித உரிமை அமைப்புகளுமே அதைத் தமக்குரிய கடமையாய் கைக்கொண்டது.
நாம் இவ்வாறுதான் மாற்றப்பட்டிருக்கிறோம்.
எமது அரசியல்வாதிகளும் எமது மதத் தலைவர்களும் இதைத்தான் அறுவடையாய் தந்திருக்கிறார்கள் எமக்கு!!
மனிதத்துவத்தை தாண்டிய ஒன்றாய் மதம் எம் தலைக்கடித்துவிட்டது.
இல்லை இல்லை..
அவ்வாறு எம் மூளைகள் சலவை செய்யப்பட்டுவிட்டது!!!
-rizzathunnisa@gmail.com-

.

Read More
Unknown

காத்தான்குடியில் ஹெரோயின் ஏற்றுமதி; பலியாடுகளாக வெளிநாட்டுப் பணியாளர்கள்.

(முஹம்மது நியாஸ்)
இஸ்லாமிய மணம் கமழுகின்ற, இஸ்லாமிய கலாச்சார விழுமியங்களுக்கும் நெறிமுறைகளுக்கும் கால்கோளாகத்திகழ்கின்ற ஒரு முன்மாதிரிமிக்க ஊர் என்று கடந்த ஓரிரு தசாப்தங்களுக்கு முன்னர் மார்தட்டிப்பேசப்பட்ட காத்தான்குடிப் பிரதேசம் சமகால சூழலில் பல்வேறுபட்ட குற்றச்செயல்களுக்கும் கலாச்சார சீரழிவுகளுக்கும் பிரசித்திபெற்ற பிரதேசமாகவும், அடிக்கடி ஊடகங்கள் வாயிலாக மேற்கோள் காட்டிப்பேசப்படுகின்ற ஓர் ஊராகவும் மாறிக்கொண்டிருப்பதை அண்மைக்காலமாக நாம் அவதானித்து வருகிறோம்.

இஸ்லாமிய சமூகம் மாத்திரம் செறிவாக சூல் கொண்டுள்ள இப்பிரதேசத்தில் கடந்த சில வருடங்களாக கொலை, கொள்ளை, பாலியல் பலாத்காரம், சிறுவர் துஷ்பிரயோகம், சூதாட்டம், வட்டி, தற்கொலை, மோசடிகள் மற்றும் மதுபானம் உள்ளிட்ட போதைவஸ்த்துப்பாவனைகள் போன்ற சகலவிதமான சட்ட, மார்க்க, சமூக விரோத செயற்பாடுகள் அனைத்துமே அடிக்கடி நடைபெற்றுவருவதை நாம் காண்கிறோம்.
Read More
Unknown

போர்க்களமானது யாழ்ப்பாண நீதிமன்றம் - காமுகர்களைக் கொலை செய்ய முயன்ற மக்கள் (Photos) Share

மாணவி வித்தியா கொலையின் சந்தேகநபரான சுவிஸ் ஆசாமி மற்றும் சட்டத்தரணி ஆகியோரை இன்று நீதிமன்றத்தில் முற்படுத்த முயன்ற சமயத்தில் அங்கு பெரும் களேபரம் ஏற்பட்டுள்ளது.
அவர்கள் இருவரையும் அடித்துக் கொல்ல வேண்டுமென்ற கோசத்துடன் மக்கள் திரண்டு தாக்குதல் நடத்தியதில், பொலிஸ் வாகனங்கள், நீதிமன்ற கட்டிட தொகுதி என்பன சேதமடைந்துள்ளன. அத்துடன் பொலிசார் இருவரும் காயமடைந்துள்ளனர். ஆர்ப்பாட்டக்காரர்களை விரட்டி பொலிசார் தடியடி நடத்தியபோதும், ஆர்ப்பாட்டக்காரர்கள் பதில் தாக்குதல் நடத்தியதால் நீதிமன்ற வளாகமே போர்க்களமாக காட்சியளிக்கிறது.
காமுகர்களிற்கு மரணதண்டனை விதிக்க வேண்டும் அல்லது தம்மிடம் ஒப்படைக்க வேண்டுமென ஆர்ப்பாட்டக்காரர்கள் கொந்தளித்து கொண்டிருந்தார்கள். ஆர்ப்பாட்டக்காரர்கள் எல்லைமீறி சென்று, நீதிமன்றத்தின் மீதும் கற்கள், தடிகள் கொண்டு தாக்குதல் நடத்தியுள்ளனர்.




Source - newtamil.com
Read More
Unknown

புதிய தேர்தல் முறை தொடர்பான சட்டமூலம் : இன்று அமைச்சரவையில் ஜனா­தி­ப­தி­யினால் சமர்ப்­பிக்­கப்­படும்

அர­சி­ய­ல­மைப்பின்  20 ஆவது திருத்தச் சட்­ட­மாக கொண்­டு­வ­ரப்­ப­ட­வுள்ள  தேர்தல் முறை மாற்றம்  தொடர்­பான  வரைபு யோசனை இன்­றைய அமைச்­ச­ரவைக் கூட்­டத்­துக்கு  ஜனா­தி­ப­தி­யினால்  சமர்ப்­பிக்­கப்­படும் என எதிர்­பார்க்­கப்­ப­டு­கின்­றது. 
புதிய தேர்தல் முறையை தயா­ரிப்­ப­தற்கு நிய­மிக்­கப்­பட்ட  அமைச்­ச­ரவை உப குழு  அறிக்­கையை தயா­ரித்து  ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­விடம் கைய­ளித்­துள்ள நிலையில் அந்த வரைபு அறிக்­கையே  இன்று அமைச்­ச­ர­வையில் சமர்ப்­பிக்­கப்­ப­ட­வுள்­ள­தாக தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது. 
அந்­த­வ­கையில் இன்­றைய தினம் அமைச்­ச­ர­வையில்  புதிய தேர்தல் முறைக்கு அங்­கீ­காரம் கிடைக்­கு­மி­டத்து வர்த்­த­மானி    அறி­வித்­தலில் அதனை வெளி­யிட நட­வ­டிக்கை எடுக்­கப்­படும்.   பின்னர்   புதிய தேர்தல் முறை குறித்த சட்­ட­மூலம் பாரா­ளு­மன்­றத்தில் சம­ரப்­பிக்­கப்­படும். 
கடந்­த­வாரம் அமைச்­ச­ரவைக் கூட்­டத்­தின்­போது  புதிய தேர்தல் முறையை தயா­ரிப்­ப­தற்­காக அமைச்­ச­ரவை உப­குழு நிய­மிக்­கப்­பட்­டது.  அந்தக் குழுவில்   அமைச்­சர்­க­ளான கலா­நிதி சரத் அமு­னு­கம, எஸ்.பி. திசா­நா­யக்க, லக் ஷ்மன் கிரி­யெல்ல, கபிர் ஹஷீம், சம்­பிக்க ரண­வக்க, ரவூப் ஹக்கீம், கயந்த கரு­ணா­தி­லக்க, பழனி திகாம்­பரம் மற்றும் ரிஷாத் பதி­யுதீன் ஆகியோர் உறுப்­பி­னர்­க­ளாக  இடம்­பெற்­றுள்­ளனர். 
Read More
Unknown

பஷிலுக்கு நெஞ்சுவலி;இன்று விசாரணை

விளக்­க­ம­றியல் உத்­தரவின் கீழ் கொழும்பு தேசிய வைத்­தி­ய­சாலையின் கட்­டணம் செலுத்தும் அறை யில் சிகிச்சை பெற்று வரும் முன்னாள் பொரு­ளா­தார அபி­வி­ருத்தி
அமைச்சர் பஷில் ராஜ­ப­க்ஷ­வுக்கு மீண்டும் நெஞ்சு வலி ஏற்­பட்­டுள்­ளது. இத­னை­ய­டுத்து அவர் உட­ன­டி­யாக தேசிய வைத்­தி­ய­சா­லையின் இரு­தய சிகிச்சைப் பிரி­வுக்கு மாற்­றப்­பட்டு பரி­சோ­த­னைகள் மேற்­கொள்­ளப்­பட்டன.

இந் நிலையில் மீண்டும் அவர் ஏற்­க­னவே தங்­கி­யி­ருந்த கட்­டணம் அற­வி­டப்­படும் சிகிச்சை அறைக்கு மாற்­றப்­பட்­ட­தாக மேல் மாகாண சபை உறுப்­பினர் நிமல் லன்ஸா ஊட­கங்­க­ளிடம் குறிப்­பிட்டார். ஏற்­க­னவே பஷில் ராஜ­ப­க்ஷ­வுக்கு மார­டைப்பு ஏற்­பட்­டுள்­ள­தா­கவும் இரு­தய கோளாறு இருப்­ப­தா­கவும் நீதி­மன்­றுக்கு அறிக்கை சமர்­பிக்­கப்­பட்­டுள்ள நிலை­யி­லேயே நேற்று முன் தினம் அவருக்கு நெஞ்சு வலி ஏற்­பட்­டுள்­ளது.
Read More
Unknown

உருவச்சிலைகள் தொடர்பான தவறான கருத்துக்களுக்கு நாளை தக்க பதில் வழங்குகின்றது தேசிய தௌஹீத் ஜமாஅத்

(புவி. எம்.ஐ. றஹ்மதுழ்ழாஹ் - காத்தான்குடி)

காத்தான்குடி பூர்வீக நூதனசாலையிலுள்ள உருவச்சிலைகள் குறித்து, இஸ்லாமிய மார்க்க ரீதியான விளக்கங்களை எடுத்தியம்பும் மாபெரும் மக்கள் சந்திப்பொன்று நாளை (20.05.2015) புதன்கிழமை மாலை காத்தான்குடியில் நடைபெறவுள்ளது.

தேசிய தௌஹீத் ஜமாஅத் ஏற்பாடு செய்துள்ள இம்மக்கள் சந்திப்பு நிகழ்வு, காத்தான்குடி இஸ்லாமிய கலாசார மண்டபத்தில் மாலை 07:30 மணிக்கு இடம்பெறும்.
Read More