Featured Home (TOP)

Recent Comments

Tuesday, June 2, 2015

Unknown

சிறுமியை கடத்தி துஷ்பிரயோகம் செய்ய முயற்சித்தவருக்கு விளக்கமறியல்

புத்தளம் தில்லையடி பகுதியில் எட்டு வயது சிறுமி ஒருவரை காட்டுக்குள் பலவந்தமாக கடத்திச் சென்று பாலியல் துஷ்பிரயோகம் செய்ய முயற்சித்த நபர் ஒருவர்  பிரதேச மக்களால் பிடிக்கப்பட்டு சரமாரியாக தாக்குதலுக்குள்ளான நிலையில் பொலிஸாரிடம் ஒப்படைத்தனர். குறித்த நபரை புத்தளம் மாவட்ட நீதிமன்றில் பொலிஸார் ஆஜர் செய்த போது சந்தேக நபரை எதிர்வரும் 10 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.


புத்தளம், தில்லையடி பகுதியில் அநகாரிக்க தர்மபால ஆரம்ப பாடசாலையில் கல்வி கற்கும் குறித்த சிறுமி பாடசாலை விட்டு வீட்டுக்கு சென்று கொண்டிருந்த போது, சந்தேக நபர் ஒருவர் குறித்த சிறுமியை பலவந்தமாக காட்டுக்குள் தூக்கிச் செல்வதை சிலர் அவதானித்துள்ளனர்.

குறித்த நபர் சிறுமியை கடத்திச் சென்று காட்டிற்கு மறைத்து வைத்திருந்த நிலையில், புத்தளம் பொலிஸார் மற்றும் பிரதேசவாசிகள் இணைந்து நடத்திய தேடுதலை அடுத்து சுமார் இரண்டு மணிநேரத்திற்கு பின்னர் சிறுமி பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளார்.

அத்துடன் சிறுமியை கடத்திச் சென்ற நபர் காட்டில் பதுங்கியிருந்த நிலையில், பிடிக்க முடிந்ததாக புத்தளம் பொலிஸார் தெரிவித்தனர். 

மீட்கப்பட்ட சிறுமி புத்தளம் தில்லையடி பிரதேசத்தை சேர்ந்தவர் எனவும் இரட்டை பிள்ளைகளில் ஒருவர் எனவும் மற்றைய பிள்ளை ஆண் பிள்ளை எனவும் கூறப்படுகிறது.
சிறுமி தினமும் தனது சகோதரனுடன் முச்சக்கர வண்டியில் பாடசாலைக்கு சென்று வீட்டிற்கு திரும்புவது வழமை. எனினும் நேற்றைய தினம் சந்தேக நபர் சிறுமியை தந்திரமாக ஏமாற்றி தில்லையடி வேலாங்கன்னி தேவாலயத்திற்கு அருகில் உள்ள அடர்ந்த காட்டுக்குள் அழைத்துச் சென்றுள்ளார்.
இதனையடுத்து பிரதேசவாசிகளும் புத்தளம் பொலிஸ் நிலையத்தின் போக்குவரத்து அதிகாரிகளுடன் இணைந்து சிறுமியை தேடும் நடவடிக்கையை ஆரம்பித்தனர். 

தேடுதல் ஆரம்பிக்கப்பட்டு சுமார் இரண்டு மணிநேரத்திற்கு பின்னர் சிறுமி காட்டிற்குள் இருந்து அழும் சத்தம் கேட்டுள்ளது. அழுகை சத்தம் கேட்ட திசையை நோக்கி பிரதேச வாசிகள் சென்ற போது சிறுமி அவர்களை நோக்கி ஓடி வந்துள்ளார்.

பிரதேசவாசிகளுடன் சென்ற சிறுமியின் தந்தை சிறுமி தூக்கி கொண்டு அருகில் உள்ள ரயில் பாதைக்கு ஒடி வந்ததுள்ளார்.
  சிறுமியை தாயுடன் காவற்துறை நிலையத்திற்கு அனுப்பி விட்டு, அங்கு கூடியிருந்த சுமார் 2 ஆயிரம் பிரதேசவாசிகளும் பொலிஸாரும் இணைந்து மீண்டும் காட்டில் தேடுதலை மேற்கொண்டனர். கடும் முயற்சிக்கு பின்னர் சிறுமியை கடத்திச் சென்ற நபரை பிடித்தனர்.

பிரதேசவாசிகள் ஆத்திரமடைந்து செயற்பட்டதன் காரணமாக பிடித்த நபரை பொலிஸ் நிலையத்திற்கு கொண்டு செல்ல மேலும் ஒரு மணிநேரம் தாமதமானது. பிரதேசவாசிகள் சந்தேக நபரை கடுமையாக தாக்கியுள்ளனர். இந்த சம்பவம் காரணமாக புத்தளம் – கொழும்பு பிரதான வீதியின் தில்லையடி வேலாங்கன்னி தேவாலயத்திற்கு அருகில் இருந்து ரயில் கடவை வரை பெரும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
கைது செய்யப்பட்ட நபர் புத்தளம் பாலாவி பிரதேசத்தை சேர்ந்தவர் என விசாரணைகளில் தெரியவந்துள்ளது. சந்தேக நபரால் கடத்திச் செல்லப்பட்ட சிறுமியை புத்தளம் ஆதார வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.
vir
Read More