Featured Home (TOP)

Recent Comments

Friday, June 12, 2015

Unknown

ஜனாஸா வாகன சேவைக்காக அள்ளி வழங்குங்கள் நன்மையை பரிசாக பெறுங்கள். (படங்கள்)

(முஹம்மது ஜெலீல், நிந்தவூர் )

எமதூர் நிந்தவூர் ஜனாஸா வாகனத்தேவையை பூர்த்தி செய்யும் முகமாகக் மேற்கொள்ளப்பட்ட நன்கொடை நிதி மூலம் கிடைக்கப்பெற்ற பணத்தின் அளவைக் கொண்டு சிறந்த வாகனம் ஒன்று கொள்வனவு செய்யப்பட்டு கடந்த வருடங்களாக 125 க்கும் மேற்பட்ட ஜனாஸாவை அவர்களது வீடுகளுக்கு கொண்டு வரும் சேவையை செய்துவருகின்றோம். அல்ஹம்துலில்லாஹி 


ஆனால் கடந்த மாதங்களாக ஜனாஸா வாகன பராமரிப்பு குழு பாரிய பிரச்சிளைகளையும் சவால்களையும் சந்தித்து கொண்டுவருகினறது. குறிப்பாக கடந்த வருடங்களாக ஜனாஸா வாகன பராமரிப்பு ஜனாஸாக்களை ஏற்றுவதன் மூலம் எமது சகோதரர்கள் மன நிறைவுடன் வழங்கும் சிறிய நன்கொடைகள் மூலமாகவே நிவர்த்தி செய்யப்பட்டு வந்துள்ளது. ஆனால் தற்போது அதன் பராமரிப்பு நிதியில் ரூபா.7610.00 நிதியே மிகுதியாகவுள்ளது.
Read More
Unknown

சம்மாந்துறை அல்-அர்ஷத் மகா வித்தியாலயத்தில் முகமலர்ந்து பாராட்டும் முப்பெருவிழாக்கள். -மாகாண அமைச்சர் மன்சூர் பிரதம அதிதி-

( ஏ.எல்.ஏ.றபீக் பிர்தௌஸ் ) 

சம்மாந்துறை அல்-அர்ஷத் மகா வித்தியாலயத்தில் முகமலர்ந்து பாராட்டும் முப்பெருவிழாக்கள் நேற்று இடம்பெற்றன.

வித்தியாலய அதிபர் ஏ.எல்.அப்துல் மஜீட் தலைமையில் இடம் பெற்ற இம்முப்பெருவிழாக்களில் கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் எம்.ஐ.எம்.மன்சூர் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு சிறப்பித்தார்.

மேலும் இந்நிகழ்வில் சம்மாந்துறை வலயக் கல்விப் பணிப்பாளர் எம்.எஸ்.சஹதுல் நஜீம், பிரதிக் கல்விப் பணிப்பாளர்களான எஸ்.எம்.எம்.எஸ்.உமர் மௌலானா, ஏ.எஸ்.ஏ.கியாஸ், எம்.எச்.எம்.பாறூக், அமைச்சரின் பொது மக்கள் தொடர்பதிகாரி யூ.எல்.பஸீர், சம்மாந்துறை பிரதேச சபை செயலாளர் ஏ,ஏ.சலீம், உளவளத்துணை இணைப்பாளர் எம்.ஏ.சபூர்த்தம்பி, முன்னாள் கோட்டக் கல்வி அதிகாரி எம்.ஏ.றசூல், வலயக் கல்விக் காரியாலய கணக்காளர் ஏ.எச்.தஸ்தக்கீர்,; உள்ளிட்ட உயரதிகாரிகள் பலரும் கௌரவ அதிதிகளாகக் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
Read More
Unknown

இளைஞர்களுக்கான விஷேட நிகழ்வு இன்று..


(-ஜுனைட்.எம்.பஹ்த்-)

எதிர்வரும் றமழானை முன்னிட்டு, ஸ்ரீ லங்கா இஸ்லாமிய மாணவர் இயக்கம் இளைஞர்களுக்கான விஷேட நிகழ்வொன்றை ஏற்பாடு செய்துள்ளது.

இன்ஷாஅல்லாஹ் ஜூன் 12ம் திகதி அதாவது இன்று வெள்ளிக்கிழமை மாலை 6.45 முதல்
8.15 மணி வரை இல77, தெமட்டகொட வீதி, கொழும்பு- 09 இல் அமைந்துள்ள தாருல் ஈமான் கேட்போர் கூடத்தில் இடம்பெறவுள்ளது .

இந்நிகழ்வில் உஸ்தாத் ரஷீத் ஹஜ்ஜுல் அக்பர் அவர்கள் 'ஆசைகள் இளைஞர்களின் இலட்சியங்கள்  அல்ல!' எனும் தலைப்பில் உரை நிகழ்த்தவுள்ளார்.

இந்நிகழ்வில் அனைத்து இளைஞர்களும் கலந்துகொண்டு பயன்பெருமாறு அழைக்கிறோம்.

ஏற்பாடு- ஸ்ரீலங்கா இஸ்லாமிய மாணவர் இயக்கம்.




Read More