Featured Home (TOP)

Recent Comments

Tuesday, June 16, 2015

Unknown

பார்வை குறைந்தவர்களுக்கு மூக்கு கண்ணாடிகள் வழங்கி வைப்பு

ஜம் இய்யத்துஸ்ஸபாப் நிறுவனம் பார்வை குறைந்தவர்களுக்கு கண் சிகிச்சை முகாம்களை நடாத்தி அதன் மூலம் மூக்கு கண்ணாடிகளை வழங்கும் வேலைத்திட்டத்தினை மேற் கொண்டுவருகின்றது

இதன் ஒரு செயற்திட்டம் காத்தான்குடியில் (14.6.2015) ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
பெண்களுக்கான வலுவூட்டலுக்கும் அபிவிருத்திக்குமான அமைப்பின் நிறைவேற்றுப்பணிப்பாளரும் காத்தான்குடி நகர சபையின் முன்னாள் உறுப்பினருமான சல்மா ஹம்சாவின் வேண்டுகோளின் பேரில் அந்த அமைப்பின் அனுசரணையுடன் அதன் அலுவலகத்தில் நடைபெற்ற இந்த வைபவத்தில் ஜம் ய்யத்துஸ் ஸபாப் நிறுவனத்தின் பணிப்பாளரும் அகில இலங்கை ஜம் இய்யத்துல் உலமா சபையின் உதவி செயலாளருமான மௌலவி எம்.எஸ்.எம்.தாஸீம், பெண்களுக்கான வலுவூட்டலுக்கும் அபிவிருத்திக்குமான அமைப்பின் நிறைவேற்றுப்பணிப்பாளரும் காத்தான்குடி நகர சபையின் முன்னாள் உறுப்பினருமான சல்மா ஹம்சாஜம் ய்யத்துஸ் ஸபாப் நிறுவனத்தின் இணைப்பாளர் வாரிஸ் அப்துல் ஜாவித் உட்பட முக்கியஸ்தர்கள் பலரும் கலந்து கொண்டனர்.
இதன் போது 400 பேருக்கு மூக்கு கண்ணாடிகள் வழங்கப்பட்டன.





Read More
Unknown

பாலமுனை முகைதீன் ஜும்ஆ பள்ளிவாயலுக்கு முன்னால் பிரதி அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாவினால் பதினைந்து இலட்சம் ரூபாய் பெறுமதியான மாபில் கையளிக்கும் நிகழ்வு இடம்பெற்றது

(ஏ.எல்.டீன்பைரூஸ்)

ஆரயம்பதி பாலமுனை முகைதீன் ஜும்ஆ பள்ளிவாயலுக்கு முன்னாள் பிரதி அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாவினால் பதினைந்து இலட்சம் ரூபாய் பெறுமதியான மாபில்கள் கையளிக்கும் நிகழ்வு (15.06.2015 திங்கள்) மஃரிப் தொழுகையின் பின்னர் பள்ளிவாயல் தலைவர் எம்.எ.எம்.ஜிப்ரி தலைமையில் இடம் பெற்றது இதன் போது முன்னாள் பிரதி அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா கலந்து கொண்டார்.

காத்தான்குடி பாலமுனை முகைதீன் ஜும்ஆ பள்ளிவாயலின் வரலாறு மிகப் பெரியது என்பதுடன் இன்று இப்பள்ளிவாயல் இவ்வளவு பெரிதாக கட்டப்படுவதற்கு பல நல்ல உள்ளம் படைத்தவர்களின் உதவிகள் எமக்கு கிடைக்கப் பெற்றன என பள்ளிவாயல் தலைவர் எம்.எ.எம்.ஜிப்ரி தெரிவித்தார்.
Read More