Featured Home (TOP)

Recent Comments

Thursday, August 13, 2015

Unknown

வாக்களித்த மக்கள் வறுமையில் வாடுகின்ற போது வெற்றி பெறும் அரசியல் வாதிகள் மாத்திரம் சுகபோகம் அனுபவிக்கினற்ற நிலை மாற்றப்பட வேண்டும்: மட்டு. மாவட்ட வேட்பாளர் பொறியிலாளர் அர்துர் ரஹ்மான்


'குமருப் பிள்ளைகளை வீட்டிலே வைத்துக் கொண்டு ஓரு முப்பதாயிரம் ரூபா செலவு செய்து மலசல கூடம் ஒன்றைக் கட்டிக் கொள்ள முடியாமல் வாக்களித்த மக்கள் வறுமையிலும், கஸ்டத்திலும் வாழுகின்ற போது நாம் வாக்களித்து தெரிவு செய்து பாராளுமன்றம் அனுப்பிய அரசியல் வாதிகள் மாத்திரம் அவர்களுடைய குளியலறைகளுக்கு பல இலட்சம் பெறுமதியான மாபிள்கற்களைப் பொருத்தி சுகபோக வாழ்க்கை அனுபவித்துக் கொண்டிருக்கிற நிலை காணப்படுகிறது. அது மாற்றப்பட வேண்டும்'
இவ்வாறு,  கடந்த 12.08.2015 அன்று ஏறாவூரில் நடை பெற்ற NFGG + SLMC கூட்டணி இணைந்து ஏற்பாது செய்த பொதுகூட்டம் ஒன்றில் மட்டக்களப்பு மாவட்டத்தில் மரச்சின்னம் 2ஆம் இலக்கத்தில் போட்டியிடும் வேட்பாளர் பொறியிலாளர் அர்துர் ரஹ்மான் தெரிவித்தார்
அவர் தொடர்நதும் அங்கு உரையாற்றும் போது,
"பல எதிர்பார்ப்புகளோடு நல்லவை நடக்கும் என்ற நம்பிக்கையோடுதான் மக்கள் அரசியல் வாதிகளுக்கு வாக்களித்து பாராளுமன்றம் அனுப்புகிறார்கள். ஆனால், அந்த அரசியல் வாதிகளோ வெற்றி பெற்றதன் பின்னால் இந்த மக்களை கண்டு கொள்வதில்லை. அவர்களுடைய பிள்ளைகள் மாத்திரம் சர்வதேச பாடசாலைகளிலும், பல்கலைக் கழகங்களிலும் கல்வி பயிலுகின்றார்கள். ஆனால், நமது பிள்ளைகள் சாதாரண கல்வியைக்கூட உரிய முறையில் கற்றுக் கொள்ள முடியாமல் மிகவும் கஸ்டப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். இப்படியான நிலை இனிமேல் தொடரக்கூடாது இதற்காகவே நாம் பாடுபட்டுக் கொண்டிருக்கிறோம்.
ஒருவர் பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்டால் அவருக்கு அரசாங்கத்தால் சம்பளம், வாகனக் கோட்டா என்று நிறையவே வசதிகளும் சலுகைகளும் வழங்கப்படுகின்றன. அவற்றைப் பெற்றுக் கொள்வதில் எந்தத் தவறும் கிடையாது. அது சட்டமாகும், ஆனால் கிடைக்கின்ற அந்த சலுகைகளையும் வசதிகளையும் வாக்களித்த மக்களின் நலன்களுக்காக பயன்படுத்த வேண்டும் இதுவே தர்மமாகும் இதை எந்த அரசியல் வாதிகளும் செய்வதில்லை. அந்தந்த அரசியல் வாதிகளும் அவர்களது குடும்பமுமே அனுபவித்து வாழ்ந்து கொண்டிருக்கிறது.
இந்தத் தர்மம் அடிப்படை வசதியற்று வாழுகின்ற மக்களும் சென்றடைய வேண்டும்  இதற்காகத்தான் நாம் போராடிக் கொண்டிருக்கின்றோம்.
இன்சா அல்லாஹ் நாம் பாராளு மன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்டால்  சம்பளம் மற்றும் ஏனைய வசதி வாய்ப்புக்களையும்  மக்களின் நலன்களுக்காகவே பயன்படுத்துவோம் என்ற உறுதி மொழியையும்  இங்கு சொல்லிக் கொள்ள விரும்புகின்றோம்
அது மட்டுமல்லாம் தெரிவு செய்யப்படுகின்ற பாராளுமன்றப் பிரதிநிதி குறிப்பிட்ட ஒரு சமூகத்திகோ அல்லது குறிப்பிட்ட ஒரு ஊருக்கோ சொந்தமானவர் அல்ல. மாறாக நாட்டுப்பற்றுள்ளவராக சமூகங்கள் மீது அக்கரை கொண்டவராக நீதி நியாயத்தை கடைப்பிடிக்கக்கூடியவராக இருக்க வேண்டும் இப்படியானவர்கள் யார் என்பதை மக்கள் சிந்தித்து வாக்களிக்க வேண்டும்.
என்னைச் சந்தித்த ஏறாவூர் சகோதரர் ஒருவர் என்னிடம் கேட்டார்  'நீங்கள் வெற்றி பெற்றால் எங்களுடைய ஏறாவூருக்கும் சமமாக உதவி செய்வீர்களா என்று'  அவரிடம் நான் சொன்னேன் 'இல்லை. ஏனென்றால் காத்தான்குடியை விட சில தேவைகள் ஏறாவூருக்கு அதிகமாக இருக்கலாம் ஆகவே ஏறாவூருக்கு அதிகமாக உதவி செய்யவேண்டி வரும் இப்படி ஏனைய பிரதேசங்களின் தேவைகளுக்கேற்ப உதவி செய்ய வேண்டியிருக்கிறது என்று' இப்படித்தான் யோசிக்க வேண்டும் அதனை அவர் ஏற்றுக் கொண்டார்.
கடந்த காலத்தில் நாம் வாக்களித்து தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதி செய்த தவறின் காரணமாக இன்றுவரையும் பிரதேச வாதம் தொடர்நது கொண்டிருக்கிறது இதற்கும் நாம் முற்றுபுள்ளி வைக்க நினைக்கிறோம். முஸ்லிம் வாக்காளர்கள் அதிகமாக வாழுகின்ற காத்தான்குடி, ஏறாவூர், ஓட்டமாவடி ஆகிய ஊர்களுக்கு சுழற்சி முறையில் இரண்டு வருட பிரதிநிதித்துவத்தை வழங்குவது தொடர்பிலும் நாம் யோசித்தோம் ஆனால், இந்தத் தேர்தலில் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரசுடன் நாம் இணைந்து போட்டியிடுவதால் அது சாத்தியமில்லாமல் போய்விட்டது. எதிர் காலத்தில் இன்சா அல்லாஹ் நாம் அவ்வாறான முன்னெடுப்புக்களை மேற்கொண்டு பிரதேச வாதத்தை இல்லாதொழிக்கவும் திட்டமிட்டிருக்கிறோம்.
இஸ்லாமிய வரலாற்றை எடுத்துக் கொண்டால் மாற்றங்களை ஏற்படுத்துவதற்கு சஹாபாக்கள் பல உயிர்த் தியாகங்களையும் உடமைகளையும் இழந்துதான் வெற்றி கண்டிருக்கிறார்கள். ஆனால் நாம் இந்த நாட்டில் ஒரு ஆட்சி மாற்றம் ஏற்பட வேண்டும் என்பதற்காக போராடினோம் கடந்த ஜனவரி எட்டாம் திகதி வாக்களித்து ஒரு வரலாறு காணாத ஒரு மாற்றத்தை ஏற்படுத்தினோம்.
இதற்கு நாம் பெரிதாக எந்தத் தியாகத்தையும் செய்துவிடவில்லை. சிந்தித்து வாக்களித்தோம் அதுவே ஒரு மாற்றத்திற்கு காரணமாக அமைந்தது. இதைத்தான் இந்தத் தேர்தலிலும் உங்களிடமிருந்து நாம் எதிர்பார்க்கிறோம். இது ஒரு சிறிய விடயமாக இருந்தாலும் வருங்கால சமூகத்திற்கு நாம் செய்கின்ற பெரும் தியாயமாகும்.
ஆகவே, எதிர்வருகின்ற பொதுத் தேர்தலில் எமது சின்னமான மரத்திற்கும் உங்களுரில் போட்டியிடுகின்ற வேட்பாளரின் இலக்கத்திற்கும் என்னுடைய இலக்கமான 2ஆம் இலக்கத்திற்கும் வாக்களிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்." என்று குறிப்பிட்டார்.
இதேவேளை தந்துரையின் ஆரம்பத்தில் "எதிர்வருகின்ற பொதுத் தேர்தலில்  வெற்றி பெற்று பாராளுமன்றம் சென்றால் நான் எவ்வாறு நடந்து கொள்வேன் என்ற சத்தியப் பிரமானத்தையும்'' பெறியியலாளர் அப்துர் ரஹ்மான் அங்கு மக்கள் முன்வாசித்து உறுதி மொழி எடுத்துக் கொண்டார்
Read More
avathani Media Network

NFGGயின் மற்றுமொரு தேர்தல் பிரச்சாரக் கூட்டம் பொது விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்றது


(NFGG ஊடகப்பிரிவு)
நாளை மறுதினம் இடம்பெறவுள்ள பாராளுமன்றத் தேர்தல் தொடர்பில் மற்றுமொரு பிரச்சாரக் கூட்டம் நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் ஏற்பாட்டில் அதன் தவிசாளரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் மட்டக்களப்பு மாவட்ட 2ம் இலக்க வேட்பாளருமான பொறியியலாளர் அப்துர் ரஹ்மான் அவர்களை ஆதரித்து நேற்று இடம்பெற்றது.
காத்தான்குடி ஹிஸ்புல்லாஹ் பொது விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்ற இப்பிரச்சாரக் கூட்டத்திற்கு NFGGயின் தலைமைத்துவ சபை உறுப்பினர் MACM.ஜவாஹிர் ஆசிரியர் தலைமைதாங்கினார்.
இதன்போது NFGGயின் தலைமைத்துவ சபை உறுப்பினர் பொறியியலாளர் பழுலுல் ஹக், அதன் கொள்கை பரப்புச் செயலாளர் சகோ, சிராஜ் மஷ்ஹூர், SLMCயின் கொள்கை பரப்புச் செயலாளர் ULMN.முபீன் உள்ளிட்ட பலர் உரையாற்றியதுடன் முன்னாள் காத்தான்குடி நகரசபை உறுப்பினர் AGM.ஹாறூன், NFGGயின் பிராந்திய செயற்குழு உறுப்பினர்களான MYM.ஷரீப், MACM.முஹ்ஸின், MACM.முனவ்வர், முஹம்மத் பாயிஸ் உட்பட பெருந்தொகையான பொதுமக்களும் கலந்துகொண்டனர்.



















Read More
avathani Media Network

பாராளுமன்றத்தில் ஹிஸ்புல்லாஹ் எனும் நூல் வெளியீட்டு விழா –படங்கள்

(பழுலுல்லாஹ் பர்ஹான்)
 
முன்னாள் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் பாராளுமன்றத்தில் ஆற்றிய உரைகளின் தொகுப்பு அடங்கிய பாராளுமன்றத்தில் ஹிஸ்புல்லாஹ் எனும் நூல் வெளியீட்டு விழா நேற்று 12-08-2015 புதன்கிழமை மாலை காத்தான்குடி ஹிஸ்புல்லாஹ் மண்டபத்தில் இடம்பெற்றது.
 
தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி ஏ.றஸ்மி தலைமையில் இடம்பெற்ற இவ் நூல் வெளியீட்டு விழாவில் பிரதம அதிதியாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் கலந்து கொண்டார்.
 
இங்கு நூல் அறிமுகத்தை மூத்த எழுத்தாளரும்,ஊடகவியலாளருமான சிவலிங்கம் சதீஷ்குமாரும், நூல் விமர்சனத்தை தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் மொழித்துறை சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி ஏ.எப்.எம்.அஷ்ரபும், சிறப்புரையை தினகரன் வாரமஞ்சரி பத்திரிகையின் பிரதம ஆசிரியர் தெ.செந்தில்வேலவரும் நிகழ்த்தினர்.
 
இதன் போது பாராளுமன்றத்தில் ஹிஸ்புல்லாஹ் எனும் நூலின் முதற்பிரதியை தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி ஏ.றஸ்மி முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹிஸ்புல்லாஹ்வுக்கு வழங்கி வைத்தார்.
 
மேற்படி நூல் வெளியீட்டு விழாவில் உலமாக்கள்,அரசியல் பிரமுகர்கள்,காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்கள் சம்மேளத்தின் பிரதிநிதிகள்,ஊர் பிரமுகள்,ஊடகவியலாளர்கள் ,புத்திஜீவிகள்,கல்வியலாளர்கள்,பெரும் திரளான பொது மக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.















Read More
avathani Media Network

UNP மட்டு. மாவட்ட முதன்மை வேட்பாளர் அமீர் அலி மட்டக்களப்பில் ஏற்பாடு செய்த விஷேட ஊடகவியலாளர் மகாநாட்டில் தெரிவிக்கப்பட்ட கருத்துக்கள் முழுமையாக mp-3 ஓடியோ வடிவில் இணைப்பு

(பழுலுல்லாஹ் பர்ஹான்)

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் சார்பில் ஐக்கிய தேசிய கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட முதன்மை வேட்பாளராக போட்டியிடும் முன்னாள் பிரதியமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி நேற்று 12 புதன்கிழமை மாலை மட்டக்களப்பு மாவட்ட செயலகத்திற்கு அருகாமையிலுள்ள லங்கா ஹோட்டலில் ஏற்பாடு செய்த விஷேட ஊடகவியலாளர் மகாநாட்டில் ஐக்கிய தேசிய கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட முதன்மை வேட்பாளர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி தமிழ் தேசிய கூட்டமைப்பு,ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்,நல்லாட்சிக்கான தேசிய முன்னணி போன்ற அரசியல் கட்சிகள் தொடர்பிலும் ஏனைய விடயங்கள் விடயங்கள் தொடர்பிலும் தெரிவித்த கருத்துக்கள் 
முழுமையாக mp-3 ஓடியோ வடிவில் இணைக்கப்பட்டுள்ளது.






Read More
avathani Media Network

காத்தான்குடியில் தேர்தல் இலஞ்சமாக விநியோகிப்பதற்காக மறைத்து வைக்கப்பட்டிருந்த பொருட்பொதிகளை பொலீசார் கைப்பற்றினர்

(புவி. எம்.ஐ. றஹ்மதுழ்ழாஹ் - காத்தான்குடி)


மட்டக்களப்பு மாவட்ட உதவித் தேர்தல் திணைக்கள அதிகாரிகளினால் நேற்றிரவு (11.08.2015) காத்தான்குடியிலுள்ள ஐ.ம.சு. கூட்டமைப்பு மற்றும் ஸ்ரீ.ல.மு.கா – ந.தே.மு. கூட்டணி தேர்தல் அலுவலகங்கள் மீது சோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

இதன்போது, காத்தான்குடி அட்வகேட் அப்துல் காதர் (விளையாட்டு மைதான) வீதியிலுள்ள அரிசி ஆலையொன்றில் அமைக்கப்பட்டிருந்த ஐ.ம.சு. கூட்டமைப்பின் 1ம் இலக்க வேட்பாளரும், முன்னாள் பிரதியமைச்சருமான எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ்வின்; தேர்தல் அலுவலகத்தை தேர்தல் திணைக்கள அதிகாரிகள் சோதனையிட்டபோது, அங்கு ஒரு அறை மூடப்பட்டிருப்பதை அவதானித்து அந்த அறைக்கு சீல் வைத்துச் சென்றனர்.

இன்று, (12.08.2015) உதவித் தேர்தல் ஆணையாளரின் அறிவுறுத்தலுக்கமைய காத்தான்குடி பொலிசார் மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதிமன்றத்தில், குறித்த அறையைத் திறந்து சோதனையிடுவதற்கான நீதிமன்றக் கட்டளையைக் கோரியபோது, நீதிபதி அல்ஹாபிழ் என்.எம். அப்துழ்ழாஹ் அதற்கு அனுமதியளித்தார்.

இதனையடுத்து குறித்த அறையை இன்று பொலீசார் திறந்து சோதனையிட்டபோது, அங்கு வாக்காளர்களுக்கு தேர்தல் இலஞ்சமாக வழங்குவதற்குத் தயாராக பொதி செய்து வைக்கப்பட்டிருந்த 4000க்கும் மேற்பட்ட பொதிகளைக் கைப்பற்றியதாகத் தகவல்கள் தெரிவிக்கப்பட்டன.
குறித்த மில் ஆலை உரிமையாளருக்கு எதிராக தேர்தல் சட்டங்களை மீறிச் செயற்பட்ட குற்றச்சாட்டினைப் பதிவு செய்து சட்ட நடவடிக்கைகளை முன்னெடுக்க தேர்தல் திணைக்களமும், பொலீசாரும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக சட்ட ஆய்வாளர் ஒருவர் சற்று முன்னார் தெரிவித்தார்.

இதேவேளை, காத்தான்குடி கடற்கரை வீதியிலுள்ள நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் தேர்தல் அலுவலகத்திற்கும் நேற்றிரவு தேர்தல் திணைக்கள அதிகாரிகள் சென்று தமது சோதனைகளை மேற்கொண்டனர். அவர்களின் நடவடிக்கைகளுக்கு நல்லாட்சிக்கான தேசிய முன்னணி அலுவலகத்தில் இருந்த பொறுப்பாளர்கள் பூரண ஒத்துழைப்புக்களை வழங்கினர். இதன்போது அங்கிருந்து எந்தவிதமான தடைசெய்யப்பட்ட பொருட்களும் கைப்பற்றப்படவில்லை எனத் தெரிவிக்கப்படுகின்றது.


Read More
avathani Media Network

ஆயிரக்கணக்கான மகளிர் பங்குகொண்ட NFGGயின் கிழக்குப் பிராந்திய மகளிர் அணி ஏற்பாடு செய்திருந்த "மகளிர் மாநாடு" - படங்கள்.


நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் கிழக்குப் பிராந்திய மகளிர் அணி ஏற்பாடு செய்திருந்த "மகளிர் மாநாடு" ஆயிரக்கணக்கான மகளிர் பங்குகொண்டு சிறப்பித்தனர்.
காத்தான்குடி ஹிஸ்புல்லாஹ் விளையாட்டு மைதானத்தில் இன்று மாலை 3.30 மணியளவில் ஆரம்பமான மேற்படி மகளிர் மாநாடு NFGGயின் கிழக்குப் பிராந்திய மகளிர் அணி உறுப்பினர் திருமதி அனீஸா பிர்தௌஸ் அவர்களின் தலைமையில் இடம்பெற்றது.
இம்மாநாட்டில் அதிதியாக பெண்கள் மனித உரிமை செயற்பாட்டாளர் நளினி ரட்ணராஜா விஷேட உரையாற்றினார். அத்துடன் NFGGயின் தவிசாளரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் மட்டக்களப்பு மாவட்ட 2ம் இலக்க வேட்பாளருமான பொறியியலாளர் அப்துர் ரஹ்மான், NFGGயின்  தேசிய அமைப்பாளர் அஷ்ஷெய்க் MBM.பிர்தௌஸ் நளீமி, அதன் கொள்கை பரப்புச் செயலாளர் சிராஜ் மஷ்ஹூர் ஆகியோரும் உரையாற்றினார்கள்.
இதன்போது மகளிர் அணி உறுப்பினர்களின் விஷேட கலை நிகழ்வுகளும் இடம்பெற்றதுடன் “மாற்றத்துக்காய் ஒன்றினைவோம்”   என்ற தலைப்பில் உணர்சிக் காவியம் ஒன்றும் இடம்பெற்றது.














































Read More