Featured Home (TOP)

Recent Comments

Wednesday, August 19, 2015

avathani Media Network

பொறியியலாளர் றஹ்மானுக்கு தேசியப் பட்டியல் கொடுப்பதில் சிப்லி பாறூக் மற்றும் முபீன் ஆகியோருக்கு அதிருப்தி...?

(அபூ நிதா)
இன்று (19.08.2015) இஷா தொழுகையின் பின், தேசிய தௌஹீத் ஜமாஅத் பள்ளிவாயலில் மௌலவி சஹ்றான் அவர்களால் தேர்தல் முடிவு சம்மந்தமான தன்னிலை விளக்கம் ஒன்று அளிக்கப்பட்டது.

தேசியப்பட்டியல் ஆசனம் தொடர்பில் காத்தான்குடியிலிருந்து ஒரு குழு கொழும்பு செல்ல விருப்பதாகவும், அதில் NTJ சார்பாகவும் வருமாறு NFGG யினால் அழைப்பு விடுக்கப்பட்டதாகவும் இன்று பிற்பகல் 04.30 மணிக்கு நடை பெற்ற கலந்துரையாடலில் NTJ தரப்பு அக்கோரிக்கையை ஏற்றுக் கொண்டு இன்றிரவு 09.00 மணிக்கு புறப்படவிருந்ததாகவும் தனது முதற்கட்ட உரையில் தெரிவித்தார் 

தொடந்தவர் உரையாற்றுகையில் இது தொடர்பாக NTJ யின் அவசரக் குழுக்கூட்டத்தில் நாம் ஒப்பந்தம் செய்திருக்கின்ற மற்றுமொரு தரப்பினரான சகோதரர் சிப்லி பாறூக் தரப்பினரோடு கலந்தாலோசிக்க வேண்டும் என முடிவு எட்டப்பட்டதாகவும் அதற்கிணங்க சகோ. சிப்லி பாறூக் அவர்களுடன் இது தொடர்பாக பேசிய போது வெளிப்படையாக ஆட்சேபனை இல்லையெனத் தெரிவித்தாலும்கூட, அவர் பேசியதன் சாராம்சம் அவ்வாறு செல்வது ஒப்பந்த விதிகளுக்கு முரணாகும் என்பதாக சுட்டிக்காட்டி அதிருப்தியினை வெளியிட்டார்.

அத்தோடு சகோ.முபீன் அவர்களிடம் பேசிய போது நான் SLMC யின் மிக நீண்டகால உறுப்பினராக இருந்து வருகின்றேன் அவ்வாறு தேசியப் பட்டியல் காத்தான்குடிக்குக் கிடைக்குமாக இருந்தால் அதற்கு முழுத்தகுதியும் உடையவன் நான் மாத்திரமே என்று கூறியதாகவும் மௌலவி சஹ்றான் தெரிவித்தார்.

எனவே, மேற்கூறிய நியாயமான...???? காரணங்களினால் கொழும்பு செல்லும் குழுவுடன் NTJ அமைப்பு செல்ல முடியாது என்று NFGG யினரிடம் தெரிவித்து விட்டதாகவும் அவர் மேலும் தெரிவித்தார் 

Read More
avathani Media Network

தேசிய பட்டியல் உறுப்பினர்களை ஒரு வார காலத்திற்குள் சமர்ப்பிக்குமாறு தேர்தல்கள் செயலகம் அறிவிப்பு

தேசிய பட்டியல் ஊடாக நாடாளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்படவுள்ள உறுப்பினர்களின் பெயர் விபரங்களை ஒரு வார காலத்திற்குள் சமர்ப்பிக்குமாறு தேர்தல்கள் செயலகம் அறிவித்துள்ளது.
இதற்கமைய வெற்றியீட்டிய கட்சிகளின் பொதுச் செயலாளர்கள் தேசியப் பட்டியல் உறுப்பினர்களின் பெயர் விபரங்களை சமர்ப்பிக்குமாறு மேலதிக தேர்தல்கள் ஆணையாளர் ஆர்.எம்.ஏ.எல்.ரத்நாயக்க வலியுறுத்தியுள்ளார்.
அத்துடன் நாடாளுமன்ற தேர்தலில் வெற்றிபெற்ற உறுப்பினர்களின் பட்டியல்களை மாவட்டத் தெரிவத்தாட்சி அதிகாரிகள் எதிர்வரும் சில நாட்களில் தேர்தல்கள் ஆணையாளரிடம் கையளிப்பார்கள் எனவும்அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
தேர்தலில் வெற்றியீட்டிய உறுப்பினர்களின் பெயர்கள், தேர்தல் முடிவுகள் அடங்கிய பட்டியல்கள் மற்றும் தேசிய பட்டியல் மூலம் தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்களின் விபரங்கள் கிடைக்கப் பெற்றதும் அவற்றை வர்தமானி ஊடாக அறிவிக்க நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, நாடாளுமன்ற தேர்தலின் இறுதி முடிவுகளுக்கு அமைய ஐக்கிய தேசியக் கட்சிக்கு 93 ஆசனங்களும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்புக்கு 83 ஆசனங்களும் கிடைத்தன.
இலங்கை தமிழரசுக் கட்சி சார்பில் 14 பேரும் மக்கள் விடுதலை முன்னணி சார்பில் நான்கு பேரும் நாடாளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்டுள்ளதுடன்,
ஈழமக்கள் ஜனநாயகக் கட்சி மற்றும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆகியனவும் தலா ஒரு ஆசனத்தை கைப்பற்றுpயுள்ளன.
அத்துடன் ஐக்கிய தேசியக் கட்சிக்கு 13 தேசியப் பட்டியல் ஆசனங்களும், ஐக்கிய மக்கள் சுதந்திக் கூட்டமைப்புக்கு 12 தேசியப் பட்டியல் ஆசனங்களும் வழங்கப்பட்டுள்ளன.
இலங்கை தமிழரசுக் கட்சி மற்றும் மக்கள் விடுதலை முன்னணி ஆகியவற்றுக்கு தலா இரண்டு தேசியப் பட்டியல் ஆசனங்கள் கிடைக்கப் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் தேசியப் பட்டியல் மூலம் நாடாளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்படவுள்ள உறுப்பினர்கள் தொடர்பில் கட்சி ஆராய்ந்து வருவதாகக குறிப்பிடப்படுகிறது.
இதற்கமைய ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் கபீர் காஷிமிற்கும், கட்சியின் தலைவர் ரணில் விக்ரம சிங்கவிற்குமிடையில் இன்று கலந்துரையாடல்கள் இடம்பெற்று வருவதாகவும்,
இன்றைய தினம் தேசியப் பட்டியல் மூலம் நாடாளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்படும் உறுப்பினர்கள் தெரிவு செய்யப்படவுள்ளதாகவும் அக்கட்சியின் ஊடகப் பேச்சாளர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்தார்.
அத்துடன் தேசிய பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர்களை தெரிவு செய்வதில் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு நெருக்கடி நிலையை எதிர்நோக்கியுள்ளதாக குறிப்பிடப்படுகிறது.
ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் பொதுச் செயலாளராக பணியாற்றிய சுசில் பிரேம ஜயந்த குறித்த பதவியிலிருந்து நீக்கப்பட்ட நிலையில் தற்காலிக செயலாளராக விஷ்வா வர்ணபால நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையிலேயே தேசிய பட்டியல் மூலம் தெரிவு செய்யப்படவுள்ள உறுப்பினர்களை நியமிப்பதில் சிரமங்கள் காணப்படுவதாக குறிப்பிடப்படுகிறது.
அத்துடன் தேசிய பட்டியல் மூலம் தெரிவு செய்யப்படும் உறுப்பினர்களின் விபரங்கள் இதுவரை தீர்மானிக்கப்படவில்லையென மக்கள் விடுதலை முன்னணி தெரிவித்துள்ளது.
Read More