Featured Home (TOP)

Recent Comments

Tuesday, November 10, 2015

avathani Media Network

பிஸ்மி இஸ்லாமிய பாடசாலையின் நேர்முகப் பரீட்சை முடிவுகள் 2016

பிஸ்மி இஸ்லாமிய பாடசாலையில் 2016ம் கல்வியாண்டுக்கான மாணவிகளை இணைத்துக் கொள்வதற்கான முதலாம் கட்ட எழுத்து மற்றும் நேர்முகப் பரீட்சைகள் என்பன 2015.11.10 காலை 08.00 மணி முதல் மதியம் 02.00 மணிவரை பிஸ்மி தலைமைக் காரியாலயத்தில் இடம்பெற்றன. பல மாணவிகள் கலந்து கொண்ட இந் நேர்முகப் பரீட்சையில் 19 மாணவிகள் மாத்திரமே தெரிவு செய்யப்பட்டனர் அவர்களின் விபரம் வருமாறு.

1.       MR. Aayisa Shukra
2.       R. Rimaza Nafrin
3.       A. Fathima Rakshana
4.       MA. Aysha Satha
5.       M. Fathima Mufa
6.       M. Fathima Musnath
7.       MS. Fathima Zaha
8.       H. Saha Areej
9.       MR. Aysha Zainab
10.   MI. Marsha Yasrik
11.   MA. Fathima Azza
12.   MTF. Zaha
13.   MR.  Zukkya
14.   AM. Fathima Satha
15.   ARF. Amna
16.   MM. Zainab Manara
17.   MN. Nisna Bajee
18.   MM. Aysha Maryam
19.   MS. Aysha


Read More
avathani Media Network

எவன்கார்ட் விவகாரத்தில் மோசடிகள் இருப்பதனாலேயே மாரப்பன இராஜினாமா

எவன்கார்ட் விவ­கா­ரத்தில் மோச­டிகள் இருப்­பதன் கார­ணத்­தி­னா­லேயே அமைச்சர் திலக் மாரப்­பன தனது பத­வியை இரா­ஜி­னாமா செய்­தி­ருக்க வேண்டும். குற்றம் இல்­லா­விடின் பத­வியை இரா­ஜி­னாமா செய்­ய­வேண்­டிய அவ­சியம் இல்லை என தெரி­விக்கும் மக்கள் விடு­தலை முன்­னணி, எவன்கார்ட் மோச­டிகள் தொடர்பில் நீதி அமைச்­ச­ருக்கும் இதே குற்­றச்­சாட்­டுக்கள் உள்­ளன. அவர் என்ன செய்­யப்­போ­கின்றார் எனவும் கேள்வி எழுப்­பி­யது. மக்கள் விடு­தலை முன்­ன­ணி­யினால் நேற்று நடத்­தப்­பட்ட செய்­தி­யாளர் சந்­திப்­பின்­போது எவன்கார்ட் விவ­காரம் தொட ர்பில் வின­வி­ய­போதே கட்­சியின் தலைவர் அனு­ர­கு­மார திசா­நா­யக்க மேற்­கண்­ட­வாறு குறிப்­பிட்டார். இது தொடர்பில் அவர் மேலும் கூறு­கையில்,

எவன்கார்ட் மிதக்கும் ஆயுதக் கப்பல் விவ­காரம் தொடர்பில் கடந்த காலத்தில் நடை­பெற்ற ஊழல்கள் தொடர்பில் உண்­மை­களை மூடி மறைக்­கவே அர­சாங்கம் முயற்­சிக்­கின்­றது. அதற்­கா­கவே கடந்த கால வரு­மான விப­ரங்கள் முதற்­கொண்டு சகல விடயங்களையும் வெளிப்­ப­டுத்தி வரு­கின்­றனர். எவன்கார்ட் விவ­கா­ரத்தில் இலங்­கைக்கு எத்­தனை கோடி ரூபாய் வரு­மானம் வந்­தது என்­ப­தல்ல இப்­போ­தி­ருக்கும் பிரச்­சினை. இந்த ஆயுதக் கப்பல் எவ்­வாறு எமது பாது­காப்பு சட்ட விதி­மு­றை­களை மீறி செயற்­பட்­டது என்­பதே மிகப்­பெ­ரிய சிக்­க­லாகும். அதேபோல் சட்­ட­வி­ரோ­த­மாக ஆயுத ஊழலை மேற்­கொண்டு அதன்­மூலம் நாட்­டிற்கு பணத்தை கொண்­டு­வந்தால் அதை ஏற்­றுக்­கொள்ள முடி­யுமா?
கடந்த காலத்தில் விடு­தலைப் புலி­க ளின் பாவ­னையில் இருந்த ஆயு­தங்­களை இலங்கை அர­சாங்கம் பெற்­றுக்­கொண்­டது. அந்த ஆயு­தங்கள் தொடர்பில் அர­சாங்கம் தக­வல்­களை வெளிப்­ப­டுத்­த­வில்லை. அவ்­வா­றான நிலையில் அந்த ஆயு­தங்­களை சர்வ­தேச தீவி­ர­வா­தி­க­ளுக்கு விற்று பணம் பெற்­றி­ருக்க முடி­யு­மல்­லவா. அவ்­வா­றான பல கேள்­விகள் எழு­கின்­றன. ஆகவே இந்த விவ­கா­ரத்தில் பல­ரது தனிப்­பட்ட தலை­யீ­டு­களை அறிந்­து­கொள்ள முடி­கின்­றது. அவ்­வா­றான ஒரு தலை­யீடு கார­ண­மா­கவே அமைச்சர் திலக் மாரப்­பன தனது பத­வியை இரா­ஜி­னாமா செய்­து­கொள்ள நேரிட்­டி­ருக் கும்.
தமது தரப்பில் எவ்­வித குற்­றங்­களும் இல்­லை­யென்றால், இப்­போது முன்­வைத்­தி­ருக்கும் குற்­றச்­சாட்­டு­க்கள் தொடர்பில் உரிய கார­ணங்­களை முன்­வைக்க முடி­யு­மாயின் ஏன் அவர் பதவி வில­க­வேண்டும். கடந்த பாரா­ளு­மன்ற அமர்வின் போது இவர் தொடர்பில் எவ்­வாறு குற்­றச்­சாட்டு முன்­வைக்­கப்­பட்­டதோ அதேபோல் நீதி அமைச்சர் விஜ­ய­தாஸ ராஜபக் ஷ மீதும் பல­மான குற்­றச்­சாட்­டுகள் முன்­வைக்­கப்­பட்­டுள்­ளன. ஆகவே அவர் என்ன செய்­யப்­போ­கின்றார் என்ற கேள்­வியும் உள்­ளது. யார் பதவி வில­கு­கின்­றனர், யார் அமைச்சுப் பதவிகளை ஏற்றுக்கொள்கின்றனர் என்ற காரணம் அவசியமற்றது. எவன்கார்ட் விவகாரத்தில் உண்மைகளை கண்டறிந்து அதற்கேற்ற உரிய சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். அதை அரசாங்கம் சரியாக முன்னெடுக்க வேண்டும் எனவும் குறிப்பிட்டார்.

Read More
avathani Media Network

திவிநெகும சட்டம் செயலிழக்குமாறு செய்யப்படல் வேண்டும்

கடந்த அரசாங்க காலத்தில் நிறைவேற்றப்பட்ட திவிநெகும சட்டம் மாகாண சபைகளுக்குரிய விடயங்களை உள்வாங்கியுள்ளது. எனவே இச்சட்டம் செயலிழக்குமாறு செய்யப்படல் வேண்டும் என கிழக்கு மாகாண விவசாய அமைச்சர் கி.துரைராசசிங்கம் தெரிவித்தார்.
Read More