Featured Home (TOP)

Recent Comments

Sunday, December 13, 2015

avathani Media Network

பிரதமருக்கு எதிராக மனு

பிரதமருக்கு எதிரான மனுவொன்றில் கையெழுத்திட அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தீர்மானித்துள்ளது. 

இன்று காலை கூடிய சங்கத்தின் மத்திய செயற்குழு குறித்த முடிவை எடுத்துள்ளதாக, அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் நலிந்த ஹேரத் குறிப்பிட்டுள்ளார். 

அண்மையில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் குறித்து கூறிய கருத்துக்களுக்கு எதிராகவே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. 

மேலும் குறித்த மனுவை நாளை பிரதமர் அலுவலகத்தில் ஒப்படைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, நலிந்த ஹேரத் சுட்டிக்காட்டியுள்ளார். 

இதேவேளை, பிரதமர் ரணில் விக்ரமசிங்க நாளை பாராளுமன்றத்தில் விஷேட உரையொன்றை ஆற்றவுள்ளார். 

தொழிற்சங்கங்களுடன் இடம்பெற்ற கலந்துரையாடலில் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகள் தொடர்பில் அரசாங்கத்தின் நிலைப்பாடு என்ன என்பது குறித்து தௌிவுபடுத்தும் வகையில் இந்த உரை அமையவுள்ளதாக, பிரதமர் அலுவலகம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

adaderana.lk
Read More
avathani Media Network

நீர்வீழ்ச்சிக்கு அருகில் இளைஞன், யுவதி சடலமாக மீட்பு

எல்பிட்டிய – பிட்டுவ – அடஹேலன நீர்வீழ்ச்சிக்கு அருகில் இருந்து இருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
23 வயதான இளைஞன் மற்றும் 18 வயதான யுவதி ஆகியோரே இவ்வாறு சடலங்களாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர குறிப்பிட்டுள்ளார்.
இன்று பகல் குறித்த பகுதியில் மோட்டார் சைக்கிள் ஒன்று இருப்பதாக பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளிலேயே இரு சடலங்கள் இருப்பது தெரியவந்ததாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் இதன்போது எல்பிடிய – நவதகல பகுதியைச் சேர்ந்த இருவரே பலியாகியுள்ளதோடு, சடலங்களின் அருகில் இருந்து நச்சு குப்பி ஒன்றும் கைப்பற்றப்பட்டுள்ளது.
எதுஎவ்வாறு இருப்பினும் மரணத்துக்கான காரணம் இதுவரை தெரியவரவில்லை.
சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை எல்பிடிய பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
Read More
avathani Media Network

பிஸ்மி அல்குர்ஆன் பாடசாலையின் தொழுகை பயிற்சி முகாம்

அல்குர்ஆன் பாடசாலை என்பது வெறுமனே அல்குர்ஆனை ஓதப்பயிற்றுவிப்பதோடு தமது பணியை சுருக்கிக் கொள்ளாமல் சிறார்கள் தமது அன்றாட வாழ்வை ஒழுங்கு படுத்தவும் இஸ்லாமிய வாழ்க்கையை பேணி நடக்கவும் வழிகாட்ட வேண்டும். அந்த வகையில் பிஸ்மி அல்குர்ஆன் பாடசாலை தமது மாணவர்களை தொழுகை பற்றி அறிவூட்டுவதையும் அதனை நடைமுறை ரீதியாக பழக்குவதையும் இலக்காக கொண்டு தொழுகை பயிற்சி முகாம் ; (Training Camp On Salath) ஒன்றை 10-12-2015 வியாழக்கிழமை காலை 08 மணி முதல் மாலை 04.30 மணிவரை காத்தான்குடி கடற்கரை வளாகத்தில் நடாத்தியது.
        பிஸ்மி அல்குர்ஆன் பாடசாலையின் பணிப்பாளர் அஷ;nஷய்க் யு.சு.ஆ அஸ்ஹர் நளீமியின் தலைமையில் இடம்பெற்ற மேற்படி தொழுகை பயிற்சி முகாமில் வுழு, தயம்மும் செய்யும் ஒழுங்குகள்,  அதான், இகாமத் சொல்லும் முறைகள், தொழும் ஒழுங்கு, அதில் ஓதும் அவ்றாதுகள், தொழுகை முடிந்த பின் மொழியும் திக்ர்கள் என பல்வேறு விடயங்கள் காணொளிகள், பயிற்சிகள், விளையாட்டுக்கள், கார்டூன்களினூடாக ஒவ்வொரு மாணவருக்கும் தனிப்பட்ட கவனம் செலுத்தி பயிற்றுவிக்கப்பட்டது.
         பிஸ்மியில் கல்வி பயிலும் 7 வயதை அடைந்த மாணவர்களில் 105 மாணவ மாணவிகள் கலந்து கொண்டு பயிற்சி பெற்றதோடு தாம் இன்று முதல் எம் மீது கடமையாக்கப்பட்டுள்ள தொழுகைகளை உரிய முறையில் நிறைவேற்றுவதாக உறுதிமொழி வழங்கினர். அத்தோடு நிகழ்வில் கலந்துகொண்ட பிஸ்மி குழுமத்தின் தவிசாளர் அஷ்ஷெய்க் ஆ.டீ.ஆ பிர்தௌஸ் நளீமி இம்முகாமின் நோக்கம் பற்றி தெளிவுபடுத்தியதோடு இவ்வேளைத்திட்டம் முழு நாடு தழுவிய ரீதியில் கொண்டு செல்லப்படவுள்ளதாகவும் குறிப்பிட்டார். நிகழ்வின் இறுதியில் கலந்து கொண்ட அனைத்து மாணவ மாணவிகளுக்கும் சான்றிதழ்களும், சிறார்களுக்காக அழகிய முறையிலும், எளிய நடையிலும் படவிளக்க வழிகாட்டலுடன் வடிவமைக்கப்பட்ட 'வாருங்கள் தொழுவோம்' என்ற புத்தகமும் பிஸ்மி குழுமத்தினரால் வழங்கி வைக்கப்பட்டன.

















Read More
avathani Media Network

எலிக்காய்ச்சலால் 3,890 பேர் பாதிப்பு

எலிக்காய்ச்சல் கடந்த மாதத்தில் மாத்திரம் 622 பேர்க்கு பீடிக்கப்பட்டுள்ளதாகவும் வருவடத்தின் இதுவரையான காலப்பகுதியில் நாடு முழுவதும் 3,890 பேர்க்கு எலிக்காய்ச்சல் பீடிக்கப்பட்டுள்ளதாகவும் தொற்றுநோய்கள் தொடர்பான ஆராய்ச்சிப் பிரிவின் பணிப்பாளரான, டொக்டர் பபா பலிஹவடன தெரிவித்துள்ளார்.
இந்த நோய் குறித்து அடையாளம் காணப்படும் பட்சத்தில் உடனடியாக மருத்துவ உதவிகளை பெற்றுக்கொள்வது அவசியமாகும் என்றும் அவர் ஆலோசனை வழங்கியுள்ளார்.
ஒருவகை பக்றீரியா மூலமாக இந்தக் காய்ச்சல் பரவுவதுடன் நோயால் பாதிக்கப்பட்ட எலியின் சிறுநீர் மூலமாக இந்தப் பக்றீரியா வெளிச்சூழலுடன் பரவுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
Read More
avathani Media Network

இடியுடன் கூடிய கன மழை : மின்சாரம் மற்றும் தொழிநுட்ப உபகரணங்கள் பாதிப்பு

மட்டக்களப்பு மாவட்டத்தில் இன்று அதிகாலை இடியுடன் கூடிய கன மழையின் தாக்கத்தினால், வீடுகளில் செயற்பட்ட மின்சாரம் மற்றும் தொழிநுட்ப உபகரணங்களுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக பாதிக்கப்பட்ட பொது மக்கள் தெரிவித்தனர்.
குறித்த இடியுடன் கூடிய கன மழையினால் தாழ்நிலை பகுதிகளிலுள்ள வீடுகள் மற்றும் வீதிகள், பாடசாலைகள் வெள்ள நீரில் மூழ்;கியுள்ளது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
Read More
avathani Media Network

படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு நட்டஈடு

படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு நட்டஈடு வழங்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும் என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, நாடாளுமன்றத்தில் நேற்று சனிக்கிழமை தெரிவித்தார். ஊடக அமைச்சு மீதான குழு நிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில், கடந்த காலங்களில் மட்டும் ஊடகவியலாளர்கள் 44 பேர் படுகொலைச் செய்யப்பட்டுள்ளனர். ஊடகவியலாளர்களை படுகொலைச்செய்த யுகம் நிறைவுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது என்றும் அந்த யுகத்தில் படுகொலைச்செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு நட்டஈடுவழங்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும் என்றும் பிரதமர் தெரிவித்தார்.
Read More
avathani Media Network

பழச் சம்பாத்தியம்

(எம்.எல்.எம்.அன்ஸார்  )

இரத்தம் சதை எலும்பு மூச்சு என்று
எல்லாவற்றையும்
செல்வச் செழிப்போடு வாழவைத்துக் கொண்டிருக்கிறேன்!
*
அப்பிள் பழத்தை அறுத்துத்தான்
காலைச் சாப்பாடாக கண்கள் புசிக்கின்றன!
*
மதியத் தாகத்திற்கு
மாதுளம் பழச் சாறு பிழிந்து
இதயம் பருகி இளைப்பாறுகிறது!
*
பப்பாசிப் பழத்தைக் கண்டால்
பயந்தோடிப் போகிறது மலச் சிக்கல்!
*
இருமலை இனிப்பு ஊற்றிக் கழுவி
தொண்டையைத் துடைத்து
சுத்தமாக வைத்திருப்பதற்குத்தான்
பலாப் பழத்திற்கு சம்பளம் கொடுத்து
பணியில் சேர்த்திருக்கிறேன்!
*
இரத்தத்தை பழுது பார்த்து  இணக்கித் தருகின்ற
தொழில்நுட்ப வேலையை
தோடம் பழம் கவனித்துக் கொண்டிருக்கிறது!
*
சதைகள்
வேலை நிறுத்தத்தில் குதிக்கின்ற போதெல்லாம்
அவற்றின் கோரிக்கைகளை அங்கீகரித்து
தொழிலுக்கனுப்பி வைக்கின்ற அதிகாரம்
கொய்யாப் பழத்திற்கு கொடுக்கப் பட்டிருக்கிறது!
*
நான் மறக்கின்றவைகளை  குறிப்பெழுதி வைத்து
தேவைப்படுகின்ற போது தேடித்தருகின்ற
எனது உதவியாளன் விளாம்பழம்!
*
நரம்புகளை பாடசாலைக்கு அழைத்துச் சென்று
திராட்சைப் பழங்கள் படித்துக் கொடுப்பதனால்தான்
அவை
வயோதிபத்திடம் தோல்வியடையாமல்
சொந்தக் காலில் துணிந்து நிற்கின்றன!
*
உன் கன்னங்கள்
தக்காளிப் பழத்தில்
தங்க நகை அணிய ஆசைப் படுகிறதா?
நட்டமே கிடைக்காத பழச் சம்பாத்தியத்தில்
முதலீடு செய்!
22-10-2015




Read More
avathani Media Network

கோழிக்­கூட்டை போன்று இருக்கும் ஊட­க­வி­ய­லா­ளரின் செய்தி அறை

இலங்­கையில் ஊட­க­வி­ய­லா­ளர்­களுக்கு உயர்­தர பயிற்­சிகள் வழங்கி அவர்­களின் தொழிற்­றுறை முன்­னே ற்­றப்­பட வேண்டும். விசே­ட­மாக பாரா­ளு­மன்­றத்தில் ஊட­க­வி­ய­லா­ளர்­களின் செய்தி அறை கோழிக்­கூட்டைப் போன்று உள்­ளது.
அதனை விஸ்­தீ­ர­ணப்­ப­டுத்த நட­வ­டிக்­கைகள் எடுக்­கப்­பட வேண்­டு­மென்றும் ஜே.வி.பி. எம்.பி. டாக்டர் நளின்த ஜய­திஸ்ஸ தெரி­வித்தார்.
கடந்த ஆட்­சியில் அரச அச்­சகம் ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்சி அச்­ச­க­மாக இயங்­கியது எனவே இது தொடர்­பாக விசா­ர­ணைகள் நடத்­தப்­பட வேண்­டு­மென்றும் அவர் கோரிக்கை விடுத்தார்.
பாரா­ளு­மன்­றத்தில் நேற்று சனிக்­கி­ழமை இடம்­பெற்ற வரவு செலவுத் திட்­டத்தின் பாரா­ளு­மன்ற அலு­வல் கள் மற்றும் வெகு­சன ஊட­கத்­துறை அமைச்­சர்­களின் குழு நிலை விவா­தத்தில் உரை­யாற்றும் போது டாக்டர் நளின்த ஜய­திஸ்ஸ எம்.பி. இவ்­வாறு தெரி­வித்தார்.
சபையில் அவர் தொடர்ந்து உரை­யாற்­று­கையில்,
ஊட­க­வி­ய­லா­ளர்­க­ளுக்­கான பயிற்­சி­களை வழங்­கு­வ­தற்கு திட்­ட­மிட்ட நட­வ­டிக்­கைகள் மேற்­கொள்­ளப்­பட வேண்டும். பாரா­ளு­மன்­றத்தில் செய்தி சேக­ரிப்­ப­தற்­காக ஊட­க­வி­ய­லா­ளர்­க­ளுக்கு வழங்­கப்­பட்­டுள்ள அறை கோழிக்­கூ­டு­களை போன்றும் ஒரு ரியூசன் வகுப்­ப­றையை போன்றும் நெருக்­க­டி­யாக இருக்­கின்­றது.
எனவே அவ் ஊட­க­வி­ய­லா­ளர்­க­ளுக்­கான செய்தி அறைகள் விஸ்­தீ­ர­ணப்­ப­டுத்­தப்­பட வேண்டும். அத்­தோடு பிர­தேச ஊட­க­வி­ய­லா­ளர்கள் சுயா­தீ­ன­மாக தொழில் புரி­வ­தற்­கான நட­வ­டிக்­கைகள் மேற்­கொள்­ளப்­பட
வேண்டும். அவர்­க­ளுக்­கான கொடுப்­ப­ன­வுகள் தொடர்­பாக கவனம் செலுத்­தப்­பட வேண்டும். சில ஊட­க­வி­ய­லா­ளர்கள் அர­சி­யல்­வா­தி­களால் பணம் கொடுத்து வாங்­கப்­ப­டு­கின்­றனர். அதே­வேளை சுயா­தீ­ன­மாக செயற்­படும் பிர­தேச ஊட­க­வி­ய­லா­ளர்­க­ளுக்கு மோட்டார் சைக்கிள் வழங்­கப்­பட வேண்டும்.
கடந்த காலங்­களில் அர­சாங்க அச்­சகம் ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சியின் அலு­வ­ல­க­மாக இயங்­கி­யது. அக்­கட்­ சிக்­காக பல ஆவ­ணங்கள் அச்­சி­டப்­பட்­டமை இவ்­வா­றான செயற்­பா­டு­க­ளுக்­காக ரூபா.30 இலட்சம் அரச அச்­ச­கத்­திற்கு செலுத்­தப்­பட
வேண்டியுள்ளது.
எனவே இம்மோசடி தொடர்பாக விசாரணைகள் நடத்தப்பட வேண் டும். செலுத்த வேண்டிய தொ கையை
அறவிட வேண்டும். இல்லாவிட் டால் அதே பயண த்தை இந்த அரசு முன்னெடுக்க முனைந்ததாகவே அது அமையும் என்றும் நளிந்த ஜய திஸ்ஸ எம்.பி. தெரிவித்தார்.
virakesari.lk
Read More
avathani Media Network

முதல் முறையாக தேர்தலில் வாக்களித்த சவுதிப் பெண்கள்

மன்னர் ஆட்சி நடைபெற்று வருகின்ற சவுதி அரேபியாவில் இதுவரை பெண்களுக்கு வாக்குரிமை இருக்கவில்லை. அவர்கள் தேர்தலில் போட்டியிடவோ கார் ஓட்டவோ அனுமதி இல்லை.

இந்நிலையில், அங்கு இடம்பெற்ற நகரசபைத் தேர்தலில் பெண்கள் வாக்களிப்பதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

தேர்தலில் தங்களுக்கும் வாய்ப்பளிக்க வேண்டும் என சவுதிப் பெண்கள் மேற்கொண்ட நீண்ட நெடும் போராட்டத்திற்கு இன்றைய தினம் ஓர் நல்ல பலன் கிட்டியுள்ளது.

அதன்படி, 979 பெண்கள் தேர்தலில் போட்டியிட்டுள்ளனர். சுமார் 1,30,637 பெண் வாக்காளர்களாகப் பதிவு செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த ஜனவரி மாதம் மன்னர் அப்துல்லா மரணம் அடைவதற்கு முன்பாக சில சீர்திருத்தங்களை கொண்டு வந்தார். இதில் பெண்களுக்கு வாக்குரிமை வழங்குவதும் அடங்கும்.


Read More
avathani Media Network

ஆள்மாறாட்டம் செய்து பரீட்சை எழுதியவர் கைது

கண்டியில் கல்வி பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையில் ஆள்மாறாட்டம் செய்து பரீட்சை எழுதிய ஒருவரை கண்டி பொலிஸார் கைது செய்துள்ளனர்.
20 வயதுடைய நபர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
போலி ஆவணங்களை சமர்ப்பித்தல், போலிப் பெயரில் பரீட்சை எழுதியமை, மோசடியில் ஈடுபட்டமை போன்ற குற்றங்களுக்காக கைது செய்யப்பட்ட குறித்த நபரைகண்டி நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்திய போது இரண்டு இலட்ச ரூபா சரீரப் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

உண்மையான பெயரைக் கொண்ட பரீட்சாத்தியையும் விசாரணைக்குட்படுத்த    பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
Read More
avathani Media Network

துறை­முகத் துறையில் மோச­டி: 225 பில்­லியன் ரூபா கடன்

துறை­முகத் துறையில் இடம்­பெற்­றுள்ள மோச­டி­யால் 225 பில்­லியன் ரூபா கடன் செலுத்த வேண்­டிய நிலை ஏற்­பட்­டுள்­­தாக துறை­முகப் கப்­பற்­துறை அமைச்சர் அர்­ஜுன ரண­துங்க தெரி­வித்தார்.

நிலக்­கரி கொண்டு செல்­­தற்­காக இரு கப்­பல்கள் கொள்­­னவு செய்­துள்­­மையால் நாளாந்தம் 13 ஆயிரம் டொலர் நஷ்டம் ஏற்­பட்­டுள்­­தா­கவும் சுட்­டிக்­காட்­டினார்.

கடந்த புதன்­கி­ழமை பாரா­ளு­மன்­றத்தில் இடம்­பெற்ற கடற்­றொழில் நீரியல் வளத்­துறை போக்­கு­­ரத்து சிவில் விமானம் மற்றும் கப்­பற்துறை அமைச்­சுக்கள் மீதான குழு­நிலை விவா­தத்தில் கலந்து கொண்டு உரை­யாற்­றும்­போதே மேற்­கண்­­வாறு தெரி­வித்தார்.

2020 ஆம் ஆண்­டாகும் போது கொள்­கலன் ஏற்றி இறக்கும் மத்­திய நிலை­­மாக இலங்­கையை மாற்­று­­தையே பிர­தான இலக்­காக கொண்­டுள்ளேன். அத்­துடன் துறை­முக கப்­பற்­துறை அமைச்சின் கீழ் உள்ள மோச­டி­களை முற்­றாக ஒழிப்­­தோடு இவ் அமைச்சில் காணப்­படும் அர­சியல் ரீதி­யான கலா­சா­ரத்­தையும் மாற்­றி­­மைக்­­வுள்ளோம்.

கடந்த கால ஆட்­சியில் சீன நிறு­­னத்­துடன் துறை­முக அதி­கார சபை மேற்­கொண்ட உடன்­­டிக்­கை­யினால் 15 சத­வீ­­மான இலா­பமே கிடைக்­கின்­றது.

இந்த ஆண்டின் ஜன­வரி முதல் ஒக்­டோபர் 31 ஆம் திகதி வரை துறை­முக அதி­கார சபை 32, 232 மில்­லியன் ரூபா வரு­மா­னத்தை ஈட்­டி­யுள்­ளது. 23.3 மில்­லியன் ரூபா கொழும்பு துறை­மு­கத்தின் ஊடாக ஈட்­டப்­பட்­டுள்­ளது.

இதில் 1.7 மில்­லியன் ரூபா கடந்த ஜன­வரி முதல் ஒக்­டோபர் வரை அம்­பாந்­தோட்டை துறை­மு­கத்­திற்கு செல­வி­டப்­பட்­டி­ருக்­கின்­றது.

அம்­பாந்­தோட்டை துறை­மு­கத்தைப் பொறுத்­­­ரையில் முதலாம் கட்ட ஆரம்ப நிகழ்­வுக்­காக 113 மல்­லியன் ரூபா செல­வி­டப்­பட்­டி­ருக்­கின்­றது. முன்னாள் ஜனா­தி­பதி தலை­மையில் பாரிய நிகழ்வு ஏற்­பாடு செய்­யப்­பட்­டி­ருக்­கின்­றது. அந்­நி­லையில் எமது ஆட்­சியில் இரண்டாம் கட்ட ஆரம்ப நிகழ்வை செய்­தி­ருந்தோம். அதற்கு 10 ஆயிரம் ரூபா­வுக்கு குறை­வான தொகையே செல­விட்டோம்.

அம்­பாந்­தோட்டை துறை­மு­கத்தில் கம்­­னி­­ளுக்கு எரி­பொருள் விநி­யோ­கிப்­­தற்­காக களஞ்­சிய வச­திகள் காணப்­­டு­கின்­­போதும் எவ்­வி­­மான இலா­பமும் கிடைக்­­வில்லை.

மேலும் எரி­பொருள் கொள்­­னவு செய்­­தற்­காக 24 மில்­லியன் டொலர் கடன் பெறப்­பட்­டுள்­ளது. அதில் 819.76 மில்­லியன் டொலர் செலுத்த வேண்­டி­யுள்­ளது.

அம்­பாந்­தோட்டை துறை­முக திட்­டத்­திற்­காக காணி சுவீ­­ரிப்பு உரிய முறையில் மேற்­கொள்­ளப்­­­வில்லை. சுவீ­­ரிப்பு செய்­யப்­பட்ட காணி­­ளுக்­கான இழப்­பீ­டு­களை வழங்­கு­­தற்கு 2 பில்­லியன் ரூபா தேவைப்­­டு­கின்­றது.

செப்­டெம்பர் 31 ஆம் திக­தி­யாகும் போது 225 மில்­லி­­னாக நாம் செலுத்த வேண்­டிய கடன் தொகை உயர்­­டைந்­துள்­ளது. திரு­கோ­­மலை, ஒலுவில், காங்­கே­சன்­துறை ஆகி­­வற்றை இலா­­மீட்டும் துறைமுகங்­­ளாக மேம்­­டுத்­­வுள்ளோம்.

அத்­துடன் 10 ஆயிரம் ரூபா சம்­­ளத்­திற்­காக இளைஞர், யுவ­திகள் துறை­முகத் துறையில் இணைக்­கப்­பட்­டுள்­ளனர். இவர்கள் தேர்தல் காலத்தில் அர­சியல் நோக்கத்திற்காகவே பணியில் அமர்த்தப்பட்டு ள்ளனர்.

இவர்கள் தவறான முறையில் சேவையில் உள்வாங்கப்பட்டாலும் அவர்களை நாம் பணி நீக்கம் செய்யப்போவதில்லை.


அவர்களுக்காக உரிய பொறி முறைகளை வகுத்து அவர்களின் தொழில் பாதுகாப்பை உறுதிப்படு த்தவுள்ளோம். நாம் யாரையும் அரசியல் ரீதியாக பழிவாங்க முயலவில்லை என்றார்.
Read More