Featured Home (TOP)

Recent Comments

Monday, January 25, 2016

avathani Media Network

குயிசீன் கல்வி நிறுவனத்தினால் வறியமாணவர்களுக்குஇலவசபாடசாலைஅப்பியாசகொப்பிகள்அன்பளிப்பு!

(நூருல் அயின் நஜ்முல் ஹுசைன்)
கொழும்புமருதானையில் இயங்கும்   குயிசீன்  கல்வி நிறுவனம் வசதிகுறைந்த மாணவர்களுக்கு உதவும்திட்டத்தில் ஒரு பகுதியாக புத்தளம் அஸன் குத்தூஸ் முஸ்லிம் வித்தியாலய  மாணவர்களுக்கு  இலவச அப்பியாச கொப்பிகளை வழங்கிவைத்தது. இது தொடர்பான வைபவம்; அஸன் குத்தூஸ் முஸ்லிம் வித்தியாலய அதிபர்  .எச்.ஜப்பார் தலைமையில் நடைபெற்றது
குயிசீன் நிறுவன பணிப்பாளர் சஸீனாபாயிஸ், சஹாமா ஸௌஹர், பாடசாலை அதிபர்ஏ.எச்.ஜப்பார், நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளரும், ஊடகவியலாளருமான முஹம்மத் பௌமி ஆகியோரும் இந்நிகழ்வில் கலந்துக் கொண்டனர்.
இந்த நிகழ்வின் போது வித்தியலாயல மாணவர்கள் 500 பேருக்கு அப்பியாச கொப்பிகள் வழங்கப்பட்டன.








Read More
avathani Media Network

சிறுநீரக விற்பனையும் சிறுபிள்ளைத்தனமும்

அண்மையில் வெளியாகிய தனி ஒருவன் திரைப்பட வசனம் தான் ஞாபகத்துக்கு வருகின்றது. முதலாம் பக்கத்தில் வெளியாகியுள்ள "இலங்கை வைத்தியர்கள் சிறு நீரகத்திருட்டு" எனும் செய்திக்கும் பதினாறாம் பக்கத்திலுள்ள "இலங்கை அரச மருத்துவ சங்கம் தனியார் மருத்துவ கல்லூரிக்கு எதிராகப் போராட்டம்" எனும் செய்திக்கும் இடையே உள்ள தொடர்பு எவ்வளவு என்ற கேள்வி எழுகின்றது. 2012 ம் ஆண்டு வெளியாகிய செய்தி ஏன் மீண்டும் தோண்டப்பட வேண்டும்? சரி இலங்கை அரச மருத்துவர்கள் சங்கம் மீது இலங்கை அரசாங்கத்துக்கு காழ்ப்புணர்ச்சி இருந்தாலும் இந்திய அரசாங்கம் ஏன் திடீரென இச்செய்தியை வெளியிட வேண்டும்? இப்போது தான் நீங்கள் வணிகச்செய்திகள் பக்கத்திலுள்ள "இலங்கை இந்திய சேவை பரிமாற்று ஒப்பந்தத்துக்கு மருத்துவ சங்கம் எதிர்ப்பு" என்ற செய்தி சம்பந்தப்பட வேண்டும்.
இதை முற்று முழுதாக விளங்கிக்கொள்ள சில காலம் நாம் பின்னோக்கி நகர வேண்டும். மகிந்த ராஐபக்ஷ ஜனாதிபதியாக இருந்த காலத்தில் இலங்கை மருத்துவ சங்கத்துடன். அவர் மிகச்சிறந்த உறவைப் பேணினார். இவ்வுறவு மருத்துவ சங்கமானது அவரது காலத்தில் எந்தவிதமான வேலை நிறுத்தமும் செய்யவில்லை என்பதிலிருந்து புலப்படும். அதுமட்டுமன்றி மருத்துவ சங்கத்தின் சகல கலந்துரையாடல்களும் நேரடியாகவே ஜனாதிபதியுடனேயே நடைபெற்றன. அக்காலத்தில் சுகாதார அமைச்சராயிருந்த மைத்திரிபால மருத்துவ சங்கத்தின் மீது எதுவித அதிகாரமும் கொண்டிருக்கவில்லை. இதை அவரே அவரது பாராளுமன்ற உரையின் போது ஒருமுறை கூறியுள்ளார். மைத்திரிபால பதவிக்கு வந்தவுடன் மருத்துவ சங்கத்தின் மீது அவர் வெறுப்படைய அவருக்கு புதிதாக காரணங்கள் தேவைப்படவில்லை.
வரிவிலக்கு வாகன அனுமதிப்பத்திரத்தை நிறுத்தியதும் மருத்துவர்கள் வேலை நிறுத்தத்தில். குதித்தார்கள். அரசாங்கத்தரப்பில் வாகன அனுமதிப்பத்திரம் காரணமாக மக்கள் பலத்த நட்டமடைவதாக கூறப்பட்டது. மருத்துவர்கள் தரப்பில், கூறப்பட்ட நியாயங்களாவன,
1.இது அமைச்சர்களுக்கு கிடைப்பது போன்ற தீர்வையற்ற (Duty free) அனுமதிப்பத்திரமல்ல. தீர்வைக்குறைப்பு (Duty concession ) பத்திரம் (65% தீர்வை செலுத்தப்பட வேண்டும்)
2.தமது சமாந்தர சேவையிலுள்ள (சம தரத்திலுள்ள )ஏனைய அரச உத்தியோகத்தர்களுக்கு வாகனம், சாரதி, எரிபொருட்கள் வழங்கப்படும்போது தமக்கு உள்ள ஒரேயொரு வரப்பிரசாதமான permit நிறுத்தப்பபட்டமையை கண்டித்தனர்
வேலை நிறுத்தத்தில் ஈடுபட்ட வைத்தியர்களை மக்கள் திட்டித்தீர்த்தனர். இலவசக்கல்வி கற்ற நாய்கள் வேலை நிறுத்தம் செய்கின்றன, காசுப்பேய்கள் என்றெல்லாம் திட்டித்தீர்த்தனர். அவர்கள் வைத்தியர்களைக்க
ு வழங்கப்பட்ட இலவசக்கல்வி அனைவருக்கும் வழங்கப்பட்டது என்பதையும் அரச வைத்தியரின் ஆரம்ப அடிப்படை சம்பளம் வெறும் 26120 ரூபாய்கள் தான் என்பதனையும் மறந்திருந்தனர்.
மனதைத்தொட்டு கூறினால் உங்களுக்கு கிடைக்கும் சம்பளம் குறைக்கப்பட்டாலோ அல்லது வரப்பிரசாதம் நீக்கப்பட்டாலோ நிச்சயமாக யாராகிலும் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவார்கள். ஆனால் வைத்திய சங்கம் வேலை நிறுத்தத்தை தோல்வியுடன் மக்களின் கடும் எதிர்ப்பு காரணமாக முடித்துக்கொண்ட
து. (10 வருடங்களுக்கு ஒரு முறை permit வழங்கப்பபடும் என்று கூறப்பட்டு இருந்தாலும் இன்னும் அது உத்தியோகபூர்வமா
க்கப்படவில்லை, ஆயினும் அமச்சர்களின் தீர்வையற்ற (100% duty free) permit மீள அளிக்கப்பட்டது. )
ஆனாலும் வைத்திய சங்கம் தொடர்ச்சியாக தரமற்ற தனியார் மருத்துவ கல்லூரியை அரசாங்கம் பொறுப்பேற்று தரப்படுத்தி முறையாக நடத்த வேண்டும் என்று அழுத்தம் கொடுத்தது. ஆனால் சுகாதார அமைச்சரின் மகள் முறையானவர் உட்பட உயர்பதவியிலுள்ளவர்கள், பணக்காரர்களின் குழந்தைகள் கற்கும் இடமாக மாலபே கல்லூரி மாறியுள்ளதால் அதை மூடவதோ பொறுப்பேற்பதோ இலகுவான காரியமல்ல. ஆனால் மருத்துவ சங்கமானது விட்டுப்போன மக்களின் நன்மதிப்பை வெல்ல மக்களை அறிவுறுத்த தொடங்கி, துண்டுப்பிரசுரம் மற்றும் மக்கள் சந்திப்பு மூலம் ஓரளவு வெற்றியும் கண்டது.
அரசாங்கம் வைத்தியர்கள் மீது மக்கள் கொண்டுள்ள நன்மதிப்பை சரிப்பதன் அத்தியாவசியத்தை நன்கு அறிந்துள்ளது. மக்கள் வைத்தியர்கள் போராட்டத்துக்கு ஆதரவளிக்கும் பட்சத்தில், வைத்தியர்களின் கோரிக்கைகளுக்கு அரசாங்கம் செவிசாய்க்க நேரிடும் என்பது அரசாங்கம் அலட்சியப்படுத்த
வில்லை.
இத்தகைய அரசாங்கம்தான் வைத்தியர்களை தற்போது திருடர்கள் என்று கூறுகிறது. தனியார் வைத்தியசாலையொன்றில் சிறுநீரகம் மாற்றுவதற்கு கிட்டத்தட்ட 25-30 லட்சம் இலங்கை ரூபாய்கள் செல்லும். இந்திய தனவந்தர்களுக்கு இது பெரிய தொகையல்ல. அதுமட்டுமன்றி இந்தியாவில் இரத்த உறவினர் அற்ற ஒருவருக்கு உயிருள்ள ஒருவர் உடலுறுப்புகளை தானம் செய்வதை தடைசெய்தது இந்திய அரசாங்கம். ஏழை மக்கள் அனைவரும் ஒரு சிறுநீரகத்துடன் வாழ்வதை தடுப்பதற்கான சட்டம் நன்மையானதே. வறுமை தாண்டவமாடும் நாடான இந்தியாவில் சிறுநீரகத்தை சில ஆயிரங்களுக்கு விற்க மக்கள் தயங்கமாட்டார்கள். சிறுநீரகம் செயலிழந்த இந்திய தனவந்தர்கள் இரகசியமாக சிக்கன சத்திர சிகிச்சை செய்ய சிறந்த இடம் இலங்கை. இலங்கையில் சிறுநீரக மாற்றத்தை தடுக்க எந்தவிதமான தனிப்பட்ட சட்டங்களுமில்லை. சர்வதேச சட்டங்கள் மட்டுமே!! தனவந்தர் வரும்போதே சிறுநீரகம் வழங்கும் "தாராள மனம்படைத்த" ஏழையையும் அழைத்து வருவார்கள். அவர்களுக்கு 5 இலட்சம் இலங்கை ரூபாய்களை அவர்கள் ஏற்கனவே வழங்கியிருப்பார்கள். இங்கே வந்தவுடன் சிறுநீரகம் வழங்குபவர் தான் மாமன் மச்சான் என்று பொய்யுரைப்பார். ஆனால் அதற்கு தேவையுமில்லை. ஏனெனில் இலங்கையில் உறுப்பு தானம் செய்ய உறவினராக இருக்க தேவையில்லை. உறுப்பு தானம் செய்யும் நபருக்கு செய்யப்படும் சத்திர சிகிச்சை, பின் விளைவுகள் மற்றும் அவரின் சம்மதம் அடங்கிய 92 பக்கம் அடங்கிய விபரக்கோவை அவரது சொந்தமொழியில் வாசிக்கப்பட்டு அவரது ஒப்பம் பெறப்படும். இதன்போது சத்திரசிகிச்சை நிபுணரல்லாத இன்னொரு வைத்தியர், நடுநிலையான இன்னும் இரு நபர்கள் ஒப்பமிடவேண்டும். இவ்வளவு நடந்தும் ஓர் சிறுநீரக மாற்றத்துக்கு வைத்திருக்கு கிடைக்கும் தொகை??? சத்திரசிகிச்சை நிபுணர் 1.25 லட்சம், உணர்வழியியல் நிபுணர் 60000, உதவி சத்திரசிகிச்சை வைத்தியர் 5000. அப்போது மிகுதி 28 லட்சம்?? வைத்தியசாலை மற்றும் மருந்துச் செலவு. இலங்கையின் அனைத்து தனியார்துறை வைத்தியசாலைகளும் அரசியல்வாதிகளுக்கும் தொழிலதிபர்களுக்கும் சொந்தமானது. இதில் கொள்ளை இலாபம் அடைபவர்கள் அவர்களே. இலங்கையில் சிறுநீரகமாற்று சிகிச்சை செய்யக்கூடிய வைத்தியர்கள் மிகச்சிலர்தான். இவர்களை தண்டிக்கவேண்டும் என்று கூறுபவர்களின் மனைவியின் தாயின் சிறுநீரகம் செயலிழக்கும் போது சத்திரசிகிச்சையை இந்த வைத்தியர்கள்தான் செய்ய வேண்டும். மைத்திரியோ ராஜிதவோ செய்ய முடியாது.

(இவ்வளவு சொன்னப்புறமும் இப்ப வரிசையா நம்ம பேஸ்புக் போராளிகள் வந்து , வைத்தியர்களோ , வைத்திய மாணவர்களோ என்ன செய்தாலும் எதிர்த்து ஒரு பதிவைப்போட்டால் தான் ஒரு சிறந்த அறிவுமானாக தெரிவோம் என்ற நம்பிக்கையில் கண்டவெல்லாம் கடமை உணர்ச்சி பொங்க comments பன்னுவாங்க பாருங்கள்.)
Source -facebook(naiwal&siva)
அனுப்புனர் - 
M.B.முஹம்மது ஸில்மி,

கிழக்குப் பல்கலைக்கழகம்.
Read More
avathani Media Network

காத்தான்குடி மீடியா போரத்தின் 16வது ஊடகவியலாளர்கள் மாநாடு.

(எம் எச் எம் அன்வர்)
காத்தான்குடி மீடியா போரத்தின் ஏற்பாட்டில் 16வது ஊடகவியலாளர்கள் மாநாடு காத்தான்குடி கடற்கரை ஜூமைறா பெலசில் இன்ஷா அல்லாஹ் எதிர்வரும் 06.02.2016 அன்று மீடியா போரத்தின்  தலைவர் அல்ஹாஜ் ஏ எல் டீன் பைறூஸ் தலைமையில் இடம்பெறவுள்ளது.

மேற்படி தினத்தில் உயர்தர மாணவர்கள் மற்றும் ஊடகத்துறையில் ஆர்வமுள்ளவர்களுக்கான 'செய்தியாளர்களை உருவாக்குவோம்' எனும் தலைப்பில் சமூக வலைத்தளம் தொடர்பாகவும் அதன் சாதக பாதகங்கள்,  செய்தி எழுதுவதின் வடிவம், கட்டுரை, ஆக்கங்கள், கவிதை எழுதுவது எவ்வாறு போன்ற விடயங்களும் தற்போதுள்ள இணையத்தளங்களின் பயன்பாடுகள் தொடர்பாகவும் ஒரு நாள் பயிற்சி நெறி சிரேஷ்ட வளவாளர்களினால் இடம்பெறவுள்ளதுடன் இவர்களுக்கான சான்றிதழும் பயிற்சிநெறியின் முடிவில் வழங்கப்படவுள்ளது
அத்துடன் அன்றைய தினம் இரவு 7.30 தொடக்கம் மாநாட்டு நிகழ்வு கடற்கரை ஜூமைறா பெலசில் இடம்பெறவுள்ளதுடன் 
பிரதம அதிதியாக புணர்வாழ்வு புணரமைப்பு இராஜாங்க அமைச்சர் எம் எல் ஏ எம் ஹிஸ்புல்லா 
விஷேட அதிதியாக கிழக்கு மாகாணசபை உறுப்பினர் ஷிப்லி பாறுக் 
கௌரவ அதிதியாக முன்னாள் நகர சபை உறுப்பினர் எம் எம் அப்துர் ரஹ்மான் 
உட்பட உலமாக்கல்,வைத்தியர்கள்,பொறியிலாளர்கள்,சட்டத்தரணிகள்,கல்விமான்கள்,அமைப்புக்களின் தலைவர்கள் உட்பட பல முக்கிய அதிதிகள் கலந்து சிறப்பிக்கவுள்ளதுடன் சிரேஷ்ட ஊடகவியலாளர்கள் கௌரவிப்பும் இடம்பெறவுள்ளது.
காத்தான்குடி மீடியா போரம் ஊடகப்பணி மாத்திரம் அல்லாது பிரதேசத்திற்கும் மக்களுக்கும் தேவையான பிரச்சினைகள் மற்றும் தேவைகளை முன்கொண்டுவரும் நிலையில் மேற்படி முக்கியத்துவம் வாய்ந்த இந்நிகழ்வு இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Read More
avathani Media Network

அமெரிக்காவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

அமெரிக்காவின் அலாஸ்கா மாநிலத்துக்குட்பட்ட தெற்கு கடற்கரை பகுதியில் ஞாயிறன்று சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் 7.3 ஆக பதிவான இந்த நிலநடுக்கம் சில வினாடிகள் நீடித்தது. இதனால் வீடுகள் வணிக வளாகங்கள் உள்ளிட்ட கட்டிடங்கள் குலுங்கின. பீதியடைந்த மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி தெருக்களில் தஞ்சம் புகுந்தனர்.
இந்த நிலநடுக்கம் பெட்ரோ வளைகுடாவில் இருந்து 50 கி.மீ தொலைவில் உள்ள கிழக்கு தென்கிழக்கு பகுதியில், பூமிக்கு அடியில் 124.8 கி.மீ ஆழத்தில் மையம் கொண்டிருந்ததாக அமெரிக்க புவியியல் ஆய்வுமையம் தெரிவித்து உள்ளது. நில நடுக்கத்தால் உயிர்ச்சேதமோ, பெரிய அளவில் பொருள் சேதமோ ஏற்பட்டதாக தகவல்கள் இல்லை.
Read More
avathani Media Network

அரசியலமைப்பு திருத்தம் தொடர்பில் மக்கள் கருத்துக்களை பெரும் தினங்கள் - முழுவிபரம்


அரசியலமைப்புத் திருத்தம் தொடர்பில் கருத்துக்களை பெற்றுக் கொள்ளும் மாவட்ட மட்டத்திலான மக்கள் சந்திப்பு, பெப்ரவரி மாதம் முதல் இடம்பெறவுள்ளதாக, அரசியலமைப்பு திருத்தம் தொடர்பில் மக்கள் கருத்துக்களை ஆராயும் குழு தெரிவித்துள்ளது. 

20 பேர் அடங்கிய குறித்த குழுவினர், அண்மையில் கொழும்பு மாவட்டத்தில் மக்களின் கருத்துக்களை கேட்கும் பணிகளை மேற்கொண்டனர். 

மேலும், ஏனைய பகுதிகளில் பெப்ரவரி மாத ஆரம்பம் முதல் 29ம் திகதி வரை காலை 09.30 தொடக்கம் 04.30 வரை, அந்தந்த மாவட்ட செயலகங்களில் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளது. 

இதன்படி ஒவ்வொரு மாவட்டத்திற்கும் இரு நாட்கள் இதன்பொருட்டு ஒதுக்கப்படவுள்ளன. 

மக்கள் தமது கருத்துக்களை எழுத்து மூலம் அல்லது வாய்மொழி மூலம் வழங்க முடியும். 

அந்தவகையில், பெப்ரவரி 1ம், 2ம் திகதிகளில் கம்பஹா மற்றும் கண்டி ஆகிய மாவட்டங்களிலும், 3 மற்றும் 10ம் திகதிகளில் மாத்தளை மாவட்டத்திலும், 5ம், 6ம் திகதிகளில் களுத்துறை மற்றும் வவுனியா மாவட்டங்களிலும், 8ம், 9ம் திகதிகளில் காலி, கேகாலை மற்றும் கிளிநொச்சி ஆகிய மாவட்டங்களிலும் மக்களின் கருத்துக்கள் பெறப்படவுள்ளன. 

அத்துடன் 10ம் 11ம் திகதிகளில் மாத்தறை மற்றும் மன்னார் மாவட்டங்களிலும், 12 மற்றும் 13ம் திகதிகளில் ஹம்பாந்தோட்டை மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களிலும் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது. 

இதேவேளை, குருநாகல் மற்றும் யாழ்ப்பாணத்தில் 15ம், 16ம் திகதிகளிலும், அனுராதபுரம் மற்றும் புத்தளத்தில் 17, 18ம் திகதிகளிலும், நுவரெலியா மற்றும் பொலன்னறுவையில் 19ம், 20ம் திகதிகளிலும் மக்கள் தமது கருத்துக்களை பதிவு செய்யலாம். 

மேலும், 23, 24ம் திகதிகளில் பதுளை மற்றும் திருகோணமலை மாவட்டங்களிலும், 25, 26ம் திகதிகளில் மொனராகலை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களிலும், 27 மற்றும் 29ம் திகதிகளில் இரத்தினபுரி மற்றும் அம்பாறை மவாட்டங்களிலும் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது. 

இது தொடர்பிலான மேலதிகத் தகவல்களை 011 2 43 76 76 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு அழைப்பதன் மூலம் பெற்றுக் கொள்ளலாம். 
Read More
avathani Media Network

முஹாசபா மீடியா நெட்வொர்க் இன் 05 ஆவது வெளியீடு..

(ஜுனைட்.எம்.பஹ்த்)
முஹாசபா மீடியா நெட்வொர்க் இன் காத்தான்குடி பிராந்திய குழுவினால் வெளியிடப்பட்டுவரும் சமூக சீர்திருத்த பிரசுரங்களின் 05 ஆவது பிரசுரம் "மரணம்" என்ற தலைப்பில் வெளியிடப்பட்டு காத்தான்குடி பிரதான வீதியில் முஹாசபா உறுப்பினர்களால் விநியோகம் செய்யப்பட்டது..
தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டுவரும் இச் செயற்பாட்டிற்கு மக்கள் மிகுந்த வரவேற்பு அளிப்பதை S.
M.S மூலமாக அறியமுடிந்துள்ளது.

இவ் இலவச பிரசுரங்களை பெற்றுக்கொள்ள விரும்புபவர்கள் . உங்கள் பெயர்,தபால் முகவரி என்பவற்றை 0770741849 என்ற இலக்கத்திற்கு S.M.S அனுப்பலாம்.





Read More