Featured Home (TOP)

Recent Comments

Monday, February 1, 2016

avathani Media Network

இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமியின் ஏற்பாட்டில் விஷேட சொற்பொழிவு..

(ஜுனைட்.எம்.பஹ்த்)
இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமியின் ஏற்பாட்டில் மாதாந்தம் இடம்பெறும் விஷேட சொற்பொழிவுத்தொடரில், பெப்ரவரி மாதத்துக்கான சொற்பொழிவு 2ம் திகதி செவ்வாய் கிழமை மாலை 6.45 மணிக்கு ‘இஸ்லாத்தின் பார்வையில் ஒரு நற்பிரஜையின் பண்புகள்’ எனும் கருப்பொருளில் இடம்பெறவுள்ளது.
நாட்டின் சுதந்திர தினத்தை முன்னிட்டே இக்கருப்பொருளில் விரிவுரை இடம்பெறுவது குறிப்பிடத்தக்கது. 77, தெமட்டகொட வீதி, கொழும்பு- 09 இல் அமைந்துள்ள தாருல் ஈமான் கேட்போர் கூடத்தில் இடம்பெறும் இவ்விஷேட சொற்பொழிவை, ஜாமிஆ நளீமிய்யா விரிவுரையாளரும் ADRT நிறுவனத்தின் நிர்வாகப்பொறுப்பாளருமான அஷ்ஷெய்க் ஷிஹான் (நளீமி) அவர்கள் நிகழ்த்தவுள்ளார்.
மஃரிப், இஷா தொழுகைக்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன என்பதையும் அறியத்தருவதோடு, காலத்துக்குத்தேவையான தொனிப்பொருளில் இடம்பெறும் இச்சொற்பொழிவில் கலந்து பயன்பெறுமாறு அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம்.
தொடர்புகளுக்கு: 0766529128


Read More
avathani Media Network

பண்பாட்டை விதைக்க வேண்டிய கல்வி இன்று படுகின்ற பாட்டை பாருங்கள்....!

(ரா.ப.அரூஸ்)

இலங்கை ஆசிரியர் சேவை ஆட்சேர்ப்புக்கான திறந்த போட்டிப் பரீட்சைக்கு மாணவர்களைத் தயார் படுத்தும் பொருட்டு வடமத்திய மாகாணத்தில் ஆங்காங்கே இடைவிடாது கருத்தரங்குகள் தற்போது இடம்பெற்றவண்ணமிருக்கின்றன. அத்தகைய கருத்தரங்கொன்றில் மாதிரி வினாத்தாளில் பின்வருமாறு வினாவொன்று இடம்பெற்றிருந்தது.

''ஒருவர் தனது காதலியை இரகசியமாகச் சந்திக்கச் செல்வதற்கு அவளின் வீட்டிலுள்ள 5 வாயில்களில் ஏதாவதொன்றைப் பயன்படுத்தலாம். ஆனால் சென்ற வாயிலால் மீண்டும் திரும்பி வந்தால் அவன் மாட்டிக் கொள்வான். எனவே அவனுக்கு தனது காதலியின் வீட்டினுள் உட்சென்று வெளியேறுவதற்கு ஒன்றுக்கொன்று வேறுபட்ட எத்தனை முறைகள் உண்டு?''
இதில் பல விடயங்களை நாம் சிந்திக்கவேண்டியிருக்கிறது.

01. ஒரு மாணவ சமூகத்திடம் இத்தகைய விடயங்களை (காதலியை இரகசியமாகச் சந்தித்தல்) ஒரு ஆசிரியரோ அல்லது வளவாளரோ சர்வசாதாரணமாகப் பகிர்ந்துகொள்ளுதல் பண்பாட்டுச் சீரழிவின் ஓர் எடுத்துக்காட்டேயாகும்.
02. மாதிரி வினாத்தாள் ஒன்றில் உதாரணம் காட்ட வேறு விடயமே உலகில் இல்லையா...?
03. கல்வி அமைச்சினால் நடாத்தப்படும் போட்டிப் பரீட்சையொன்றுக்கான மாதிரி வினாத்தாளில் இத்தகைய விடயங்களை உள்ளடக்குதல் ஒரு தேசத்தின் கல்வி அமைச்சினையே கேவலப்படுத்துவதாய் அமையாதா...???
04. மேற்படி வினாவின் அடிப்படையில் இதற்கு விடை காண்பது காதலியை இரகசியமாய்ச் சந்திக்கச் சென்று வெளியேறுவதற்கான வழிகாட்டலல்லவா???
ஆசிரியர்களாக உள்ளீர்க்கப்பட இருப்போர்களே இத்தகையவாறு வழிகாட்டப்பட்டால் இவர்களால் வழிகாட்டப் படவிருக்கின்ற இளம் மாணாக்கர்ளின் நிலைமை என்னவாக இருக்கும் என்று நாமனைவரும் ஒரு கணம் சிந்தித்துப் பார்க்கவேண்டும். நல்ல பண்பாட்டை மாணாக்கரில் விதைக்கவேண்டிய கல்வி இன்று அவைகளைக் குழிதோண்டிப் புதைத்துக்கொண்டிருக்கிறது. இவ்வாறான மிலேசத் தனங்களின் விளைவுதான் இன்று எமது மாணவர்கள் சர்வசாதாரணமாக நெறிபிறழ்வதற்குக் காரணமாக அமைந்துவிடுகின்றது.
எனவே இனி வரும் காலங்களிலாவது இவ்வாறான விடயங்களில் சம்பந்தப் பட்டவர்கள் சிந்தித்துச் செயற்படவேண்டும்.

குறிப்பு: குறித்த வினாத்தாளின் பிரதி இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.




Read More