Featured Home (TOP)

Recent Comments

Saturday, August 8, 2015

avathani Media Network

மஹிந்தவின் தேர்தல் அலங்காரங்களை அகற்றிய பொலிஸார்

நீர்­கொ­ழும்பு மாந­கர சபை முன்­றலில் நேற்று வெள்­ளிக்­கி­ழமை மாலை நடை­பெ­ற­விருந்த ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­ன­ணியின் தேர்தல் பிர­சாரக் கூட்­டத்­திற்­காக தேர்தல் சட்­ட­வி­தி­களை மீறி அமைக்­கப்­பட்­டி­ருந்த சட்­ட­வி­ரோ­த­மான கட்­ட­வுட்­க­ளையும் கொடி­க­ளையும் பொலிஸார் அகற்­றினர்.
முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக் ஷ கலந்துகொள்­ள­விருந்த தேர்தல் பிர­சாரக் கூட்­டத்­திற்­காக நீர்­கொ­ழும்பு – – கொழும்பு பிர­தான வீதிக்கு குறுக்­காக கட்சி அமைப்­பா­ளர்­க­ளினால் அமைக்­கப்­பட்­டி­ருந்த கொடி­க­ளையும், பதாகைகளையுமே பொலிஸார் அகற்­றினர்.
நீர்­கொ­ழும்பு –- கொழும்பு பிர­தான வீதிக்கு குறுக்­காக அமைக்­கப்­ப­ட்­டி­ருந்த பாரிய அள­வி­லான பெனர் தொடர்­பாக பொலி­ஸாருக்கு கிடைத்த முறைப்­பாட்டை அடுத்தே பொலிஸார் இந்த நட­வ­டிக்­கையை மேற்­கொண்­டுள்­ள­தாக தெரிய வரு­கி­றது.
இதே­வேளை, பொலிஸார் இந்த நட­வ­டிக்­கையை மேற்­கொண்­டி­ருந்த போது சம்­பவ இடத்­திற்கு வந்த ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சியின் நீர்­கொ­ழும்பு தேர்தல் தொகுதி அமைப்­பா­ளரும், முன்னாள் பிரதி அமைச்­சரும் வேட்­பா­ள­ரு­மான சரத்­கு­மார குண­ரத்ன இது­ தொ­டர்­பாக தமது எதிர்ப்பை பொலி­ஸா­ரிடம் தெரி­வித்­ததை அவ­தா­னிக்க முடிந்­தது.
கட்­சியின் தலைவர் ஒருவர் தேர்தல் கூட்­டங்­களில் கலந்துகொள்ள வரும்­போதே வீதிக்கு குறுக்­காக அலங்­கா­ரங்­களை செய்ய முடியும் என்ற தேர்தல்கள் ஆணையாளரின் அறிவுறுத்தலுக்கு அமையவே இந்த நடவ டிக்கையை பொலிஸார் மேற்கொண்டதாக அறிய முடிந்தது.


Read More
avathani Media Network

காத்தான்குடியில் 24 மணி நேர மருத்துவ சேவை வழங்க பிரதான வீதியில் 'ஹபீபா மெடிகல் சென்டர்' உதயம்-படங்கள்

(பழுலுல்லாஹ் பர்ஹான்)
 
காத்தான்குடி பிரதேச மக்களின் நீண்ட கால எதிர்பார்ப்பாக இருந்து வந்த 24 மணி நேரமும் இயங்கக் கூடிய  சகல வசதிகளுடனும் கூடிய மருத்துவ நிலையம் தற்போது 'ஹபீபா மெடிகல் சென்டர்' எனும் நாமத்தில் உதயமாகியுள்ளது.
 
காத்தான்குடி பிரதான வீதியில் முற்றிலும் நவீனமயப்படுத்தப்பட்ட சூழலில் அமைந்துள்ள ஹபீபா மெடிகல் சென்டர் கடந்த 02.08.2015 அன்று உத்தியோபூர்வமாக அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது.

இந் நிகழ்வில் பிரதேசத்திலுள்ள வைத்திய நிபுணர்கள், உலமாக்கள், நலன் விரும்பிகள் உட்பட பலரும் கலந்து சிறப்பித்தனர்.
 
அன்றைய தினம் சுமார் 250 பேருக்கு இலவச மருத்துவப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு உடனடியாகவே மருத்துவ அறிக்கைகள் கையளிக்கப்பட்டதுடன் வைத்திய நிபுணர்கள் மூலமாக மருத்துவ ஆலோசனைகளும் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.

ஹபீபா மெடிகல் சென்டரானது தரமானதும் சினேகபூர்வமானதுமான மருத்து சேவையை பிரதேச மக்களுக்கு வழங்க தன்னை அர்ப்பணித்துள்ளது.
 
இங்கு 24 மணி நேர வெளி நோயாளர் பார்வையிடும் வசதி, 24 மணி நேர மருந்தக வசதி, விசேட மருத்துவ நிபுணர்களை செனலிங் செய்யும் வசதி, ஆய்வுகூட பரிசோதனை வசதி, ஈ.சி.ஜி மற்றும் ஸ்கேன் வசதி, தொலைபேசி மூலம் முன்கூட்டிய வெளிநோயாளர் பதிவு முறை, மாதாந்த கிளினிக் வசதி, நோயாளர் மருத்துவ அறிக்கை பேணுதல், அவசர வீட்டு மருத்துவ வசதி, காயப் பராமரிப்பு மற்றும் மருந்து கட்டுதல் வசதி ஆகியவற்றுடன் அம்பியூலன்ஸ் வசதியும் விரைவில் ஆரம்பிக்கப்படவுள்ளது.
 
இதேவேளை பொது வைத்திய நிபுணர்கள், பொது சத்திர சிகிச்சை நிபுணர்கள், மகப்பேற்று பெண் நோயியல் வைத்தி நிபுணர்கள், எலும்பு முறிவு சத்திர சிகிச்சை நிபுணர்கள், சிறுவர் நல மருத்து நிபுணர்கள், எலும்பு முறிவு, கதிரியக்க, நரம்பியல், தோல் விசேட வைத்திய நிபுணர்களின் சேவைகளும் இங்கு வழங்கப்படவுள்ளன.
 
மேலதிக விபரங்களுக்கு 0652248628,0652248631 ஆகிய தொலைபேசி இலக்கங்களுடன் தொடர்பு கொள்ள முடியும்.

















Read More
avathani Media Network

"பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் சகல சலுகைகளையும் மக்களின் நன்மைகளுக்காகவே அர்ப்பணிப்போம்": பொறியியலாளர் அப்துர் ரஹ்மான்

"மக்களால் தெரிவு செய்யப்பட்ட பாராளுமன்றப் பிரதிநிதிகளுக்கு வழங்கப்படும் சம்பளம் உள்ளிட்ட சகல வரப்பிரசாதங்களையும் மக்கள் பயன்பெறும் விதமாக பொது நலன்களுக்கே அர்பணிப்போம்" என நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் தவிசாளரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் மட்டக்களப்பு மாவட்ட 2ம் இலக்க வேட்பாளருமான பொறியியலாளர் அப்துர் ரஹ்மான் தெரிவித்தார்.
காத்தான்குடியில் மௌலான கபுறடி வீதியில் இடம்பெற்ற பிரச்சார நிகழ்வு ஒன்றில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
அவர் மேலும் உரையாற்றும்போது,
"பாராளுமன்ற உறுப்பினர்களாக வருபவர்களுக்கு மக்களின் வரிப்பணத்திலுருந்து ஏராளமான சலுகைகள் வழங்கப்படுகின்றன. எந்த உழைப்பும் இல்லாத அதிகூடிய சம்பளம், ஆடம்பர வாழ்க்கை, ஆடம்பர வாகனக் கோட்டா, வெளிநாட்டுப் பயணங்கள் மற்றும் சமூக அந்தஸ்தும் கௌரவமும் என பல வகையான வரபிரசாதங்களையும் சலுகைகளையும் அனுபவிக்கின்றனர். பெரும்பாலானவர்கள் இவ்வாறான சலுகைகளுக்காகவே பாராளுமன்றம் செல்வதற்கு ஆசைப் பட்டு போட்டி போடுகின்றனர். இவ்வளவு வசதிகள் வாய்ப்புக்களையும் பெற்றுக்கொண்ட அரசியல்வாதிகள், மக்கள் அவலங்களுக்கு உள்ளாகும்போதும் வறுமையில் வாடுகின்றபோதும் அவர்களைக் கண்டுகொள்ளாத நிலையே காணப்படுகின்றது.
உதாரணமாக ஒரு பாராளுமன்ற உறுப்பினருக்கு இரண்டு கோடி ரூபாய் பெறுமதியான வாகன கோட்டா வழங்கப்படுகின்றது. மக்கள் வழங்கும் ஆணையின் மூலமாகவே இத்தனை இலாபம் கிடைக்கிறது என்பதனை எந்தவொரு அரசியல்வாதியும் வெளியே கூறுவதுமில்லை. மக்களும் இதனை அறிந்துகொள்வதுமில்லை. ஆனால் இதுவும் கூட மக்களின் நன்மைக்காகவே பயன்படுத்தப்பட வேண்டும் என்பதே நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் நிலைப்பாடாகும்.
எதிர்வரும் தேர்தலில் பாராளுமன்ற உறுப்பினர் பதவி எமக்குக் கிடைத்தால் அதன் மூலம் எமக்கு கிடைக்கும் எந்த சலுகைகளையும் நாம் எமக்காக எடுத்துக் கொள்ள மாட்டோம். அவற்றை பொது மக்களுக்கே வழங்கி விடுவோம். சம்பளம் உட்பட அனைத்து கொடுப்பனவுகளையும் மக்களின் நன்மைக்காகவே செலவிடுவோம். அந்த இரண்டு கோடி ரூபாய் பெறுமதியான வாகனக் கோட்டவினை பயன்படுத்தி, இறைவனின் உதவியுடன் பின்தங்கிய கிராமங்களுக்கு போக்குவரத்துக்கான வாகன வசதிகளை பெற்றுக்கொடுப்பதற்கு நாம் திட்டமிட்டிருக்கிறோம்.
பாராளுமன்றம் செல்வது என்பது இன்று தன்நபர் பிழைப்பு நடாத்தும் ஒரு இலாபகரமான தொழிலாக மாறியிருக்கின்றது. ஒன்றுமில்லாதவன் ஒரு தொழிலுமில்லாத நிலையில் பாராளுமன்றம் சென்று, ஒரு சில வருடங்களின் பின்னர் காணிகளும் சொத்துக்களும் தொழிற்சாலைகளும் அவனுக்கு எப்படி வந்தது என்பதை பொதுமக்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும். தனது சொந்த வாழ்வில் ஆயிரம் ரூபாய் அன்பளிப்புச் செய்ய வழியில்லாதவர் பாராளுமன்றம் சென்றதன் பின் வாக்குக் கேட்பதற்காக ஐயாயிரம் தொடக்கம் ஐம்பது ஆயிரம் வரை இலஞ்சம் கொடுக்கிறார் என்றால் குறுகிய காலத்திற்குள் இந்த நிலை எப்படி ஏற்பட்டது என்பதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்." என்று தெரிவித்தார்.
Read More
avathani Media Network

காத்தான்குடி கர்ப்பிணிகளுக்கும், தாய்மார்களுக்கும் பழுதடைந்த போக்கு உணவுகள் விநியோகம்


காத்தான்குடிப் பிரதேசத்தில் கர்ப்பிணிகள் மற்றும் பாலூட்டும் தாய்மார்களுக்கு நல்லாட்சி அரசாங்கத்தின் உதவித்திட்டத்தின்கீழ் 2000 ரூபா பெறுமதிக்கு வழங்கப்படும் சத்துணவுப் பொருட்கள் பாவனைக்குதவாத நிலையில் பழுதடைந்து காணப்படுவதாகப் புகார் தெரிவிக்கப்படுகின்றது.

இத்திட்டத்தின் கீழ் தனியார் வர்த்தக நிலையங்கள் மூலம் பொதி செய்யப்பட்டு வழங்கப்படும் நெத்தலிக் கருவாடு துர்வாடை கொண்டதாகவும், நிலக்கடலை மற்றும் பாசிப்பயறு என்பன வண்டுகளும், புழுப்பூச்சிகளும் கூடுகட்டி வாழும் நிலையிலும் வழங்கப்பட்டு வருவதாக சுட்டிக்காட்டப்படுகின்றது.

இதுகுறித்து பிரதேச சுகாதார அதிகாரிகளிடம் தாங்கள் முறையிட்ட போதிலும் அவர்கள் எந்தவிதமான மாற்று நடவடிக்கைகளும் எடுப்பதாகத் தெரியவில்லை எனவும், கடந்த இரண்டு மாதங்களாக இவ்வாறே தமக்கு பழுதடைந்த பாவனைக்குதவாத பொருட்களே வழங்கப்பட்டு வருவதாகவும் விசனம் தெரிவிக்கப்படுகின்றது.

Read More