Featured Home (TOP)

Recent Comments

Monday, August 10, 2015

avathani Media Network

கவிதா உள்ளங்களை குளிர வைத்த வகவத்தின் 18 வது பௌர்ணமி கவியரங்கு



வலம்புரி கவிதா வட்டத்தின் 18வது கவியரங்கு கொழும்பு அல் ஹிக்மா கல்லூரியில் கடந்த பௌர்ணமி தினத்தன்று இலக்கியவாதிகளின் ஒன்றுகூடலுடன் சிறப்பாக நடந்தது. வகவத் தலைவர் என். நஜ்முல் ஹுசைன் நிகழ்வுகளுக்கு தலைமை தாங்கினார்.  செயலாளர் இளநெஞ்சன் முர்ஷதீன் வரவேற்புரை நிகழ்த்தினார்.

கடந்த 10-7-2015ல் இறையடி சேர்ந்த வகவக் கவிஞர் மலைத்தேனீ என்ற பெயரில் கவிதை பாடிய உடத்தலவின்ன அப்துர் ரஹ்மான் நினைவுக் கூரப்பட்டார்.  சிறந்த மரபுக் கவிஞரான இவர் ஆரம்ப நாட்களில் கோட்டகொட ஏ.ரஹ்மான் என்ற பெயரில் எழுதி புகழ் பெற்றவராவார்.
அண்மையில் நம்மைவிட்டுப் பிரிந்த இந்திய முன்னாள் ஜனாதிபதியும் சிறந்த கவிஞருமான அப்துல் கலாமும், கவிஞர்களின் பாடல்வரிகளுக்கு உயிர் கொடுத்த இசையமைப்பாளர் எம்.எஸ்.விஸ்வநாதனும் நினைவு கூரப்பட்டனர்.

உலக கவிதைகள் வரிசையிலே கறுப்பின கவிதைகள் குறித்த தனது பார்வையினை கவிஞர் மேமன்கவி மிகச் சிறப்பாகவும், சுவாரசியமாகவும் வெளிப்படுத்தினார். இனரீதியாக நசுக்கப்பட்ட மக்களிடம் இருந்து இதயத்தை வருடும் சிறப்பான கவிதைகள் வெளிப்பட்டதாகவும், எடுத்துக்காட்டாக. 70 களில்  கவிஞர் ஈழவாணனை ஆசிரியராகவும் மேமன்கவி யை வெளியீட்டாளராகவும் கொண்டு வெளிவந்த அக்னி இதழ் தனது 5வது இதழை கறுப்பின மக்களின் கவிதைச்; சிறப்பிதழாகக் கொண்டு வந்ததைக்  குறிப்பிட்டு, அவ்விதழில் நம்மவர்களால் ; மொழிபெயர்ரக்கப்பட்ட கறுப்பின மக்களின் கவிதைள் சிலவற்றை வாசித்துக் காட்டினார்.  குறிப்பாக பேராசியர் எம்.ஏ. நுஃமான்; அவர்களால் மொழிபெயர்க்கப்பட்ட கறுப்பின கவிஞர்ளில் முக்கிமான ஒரு கவிஞராக திகழ்ந்த லங்ஸ்டன் ஹியூஸின்; ''கலப்பு' எனும்; கவிதையைம்;, மு.கனகராஜனால்; மொழிபெயர்க்கப்பட்ட கறுப்பினப் பெண் கவிஞர்  நிக்கி கியோவானின்  எனது கவிதையும்,  என். சுண்முகலிங்கனினால்; மொழிபெயர்க்கப்பட்ட கறுப்பின கவிஞரும் நாட ஆசிரியருமான நோர்மன் ஜோர்டனின் கறுப்பு போராளி எனும் கவிதையையும் hசித்துக் காட்டியதோடு, அவ்விதழில் மேலும் பல கவிதைகளை மொழிபெயர்த்த கே.எஸ்.சிவகுமாரனினால்   எழுதப்பட்ட கறுப்பு இலக்கியம் எனும் குறிப்பையும் எடுத்துக் காட்டியதோடு, கறுப்பின மக்களின் வரலாற்றையும், அவர்தம் கலை இலக்கிய வரலாற்றையும் இளம் தலைமுறையினர் தேடிப் படிக்க வேண்டும் என்றார். அக்கவிதைகளை மேமன்கவி உணர்ச்சிபூர்வமாக முன் வைத்தமை சபையை கவர்ந்தது. 

கலஹா சங்கர் கைலாஷ் தலைமையேற்று நடத்திய கவியரங்கில், கவிஞர்கள் கிண்ணியா அமீர் அலி, ஈழ கணேஷ், பிரேம்ராஜ், தமிழ்த் தென்றல் அலி அக்பர், சமூகஜோதி எம்.ஏ.ரபீக், சட்டத்தரணி உஸ்மான் மரிக்கார், வெளிமடை ஜஹாங்கீர், போறுத்தொடi;ட றிஸ்மி, மிஹிந்தலை ஏ. பாரிஸ், எம்.ஏ.எம்.ஆறுமுகம், சட்டத்தரணி நூருஸ் ஷப்னா நஜ்முல் ஹுசைன், கலையழகி வரதராணி, எம்.வஸீர் ஆகியோர் வீச்சான கவிதைகளால் வகவ மேடையை சுவையாக்கினர்.


Read More
avathani Media Network

காத்தான்குடி பிரதேசத்திற்கு புதிய அரச கால்நடை வைத்திய அதிகாரி நியமனம்.

(பழுலுல்லாஹ் பர்ஹான்)

மட்டக்களப்பு மாவட்டத்தின் காத்தான்குடி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பகுதியில் அமைந்துள்ள காத்தான்குடி பிரதேச கால்நடை வைத்திய அதிகாரி காரியாலயத்திற்கு அண்மையில் புதிய கால்நடை வைத்திய அதிகாரியாக டாக்டர் திருமதி.லிங்கேஸ்வரன் டுஜித்திரா நியமிக்கப்பட்டு கடமையாற்றி வருகின்றார்.

இலங்கை கால்நடை உற்பத்தி சுகாதார திணைக்களத்தின் கிழக்கு மாகாண பணிப்பாளரின் கீழ் இக் காரியாலயம் இயங்கி வருகின்றது.

பொது மக்கள் உரிய நேரத்தில் பொருத்தமான கால்நடை வைத்திய சேவையை பெற்றுக்கொள்ளுமாறு காத்தான்குடி பிரதேச கால்நடை வைத்திய அதிகாரி டாக்டர் திருமதி.லிங்கேஸ்வரன் டுஜித்திரா தெரிவித்துள்ளார்.

மேற்படி புதிய கால்நடை வைத்திய அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ள டாக்டர் திருமதி.லிங்கேஸ்வரன் டுஜித்திரா கண்டி பேராதனை பல்கலைக்கழகத்தின் பீ.வீ.எஸ்.சீ. பட்டதாரியான இவர் காத்தான்குடி ஊர் வீதி புணருத்தான பணிக்கான வீதி அபிவிருத்தி அதிகார சபையின் களப் பொறியியலாளர் ஏ.லிங்கேஸ்வரனின் மனைவியும்,மட்டக்களப்பு புகையிரத நிலைய சிரேஷ்ட புகையிரத நிலைய அதிபர் ஏ.வசந்த குமார் தம்பதியரின் புதல்வியுமாவார்.



Read More
avathani Media Network

காத்தான்குடி பிரதேச அரச கால்நடை வைத்திய அதிகாரி காரியாலத்தினால் இலவசமாக கோழிக் குஞ்சுகள் வழங்கி வைப்பு-படங்கள்.

(பழுலுல்லாஹ் பர்ஹான்)

காத்தான்குடி பிரதேச அரச கால்நடை வைத்திய அதிகாரி காரியாலத்தினால் நடுத்தர அளவிளான கோழிப் பண்னையாளர் அபிவிருத்தி திட்டத்தின் கீழ் இலவசமாக கோழிக் குஞ்சுகள் வழங்கும் நிகழ்வு கடந்த 07 வெள்ளிக்கிழமை பிரதேச அரச கால்நடை வைத்திய அதிகாரி காரியாலத்தில் இடம்பெற்றது.

இதன் போது காத்தான்குடி பிரதேச கால்நடை வைத்திய அதிகாரி டாக்டர் திருமதி.லிங்கேஸ்வரன் டுஜித்திராவினால் தெரிவு செய்யப்பட்ட பண்னையாளர்களுக்கு இலவசமாக கோழிக் குஞ்சுகள் வழங்கி வைக்கப்பட்டன.

இங்கு காத்தான்குடி பிரதேசத்திலிருந்து தெரிவு செய்யப்பட்ட பத்து பண்னையாளர்களுக்கு மொத்தமாக 100 நூறு கோழிக் குஞ்சுகள் பகிர்ந்தளிக்கப்பட்டதுடன் ,கோழி வளர்ப்பு பற்றிய ஆலோசனையும் வழங்கப்பட்டது.






Read More
avathani Media Network

தரம் 5 புல­மைப்­ப­ரிசில் பரீட்­சையில் 3 இலட்­சத்து 40 ஆயிரம் மாண­வர்கள்

இம்­முறை நடை­பெ­ற­வுள்ள தரம் 5 புல­மைப்­ப­ரிசில் பரீட்­சைக்கு நாட­ளா­விய ரீதியில் 3 இலட்­சத்து 40 ஆயி­ரத்து 926 மாண­வர்கள் தோற்­ற­வுள்­ளனர்.
பாட­சா­லை­க­ளுக்கு மாண­வர்­களைத் தெரிவு செய்­வ­தற்கும் புல­மைப்­ப­ரிசில் வழங்­கு­வ­தற்­கு­மாக தரம் 5 மாண­வர்­க­ளுக்­காக நடத்­தப்­படும் பரீட்சை எதிர்­வரும் 23 ஆம் திகதி ஞாயிற்­றுக்­கி­ழமை நடை­பெ­ற­வுள்­ளது.
இப்­ப­ரீட்சை 2,907 பரீட்சை நிலை­யங்­களில் நடை­பெறும். பரீட்­சைக்கு தோற்றும் மாண­வர்­களில் 02 இலட்­சத்து 54 ஆயி­ரத்து 373 மாண­வர்கள் சிங்­கள மொழி மூலமும் 86 ஆயி­ரத்து 553 மாண­வர்கள் தமிழ் மொழி மூலமும் பரீட்­சைக்கு தோற்­ற­வுள்­ளனர்.
Read More