Featured Home (TOP)

Recent Comments

Monday, August 10, 2015

avathani Media Network

முஸ்லிம் அர­சியல் களம் சில அவ­தா­னங்கள்

(உஸ்தாத் எம்.ஏ.எம்.மன்சூர்)

புதி­ய­தொரு பாரா­ளு­மன்­றத்தை நாம் தெரியப் போகிறோம். இந்­நாட்டுப் பிர­ஜைகள் நாம். முஸ்லிம் சிறு­பான்­மை­யினர். நாட்­டுக்கு ஆற்ற வேண்­டிய கட­மைகள் எமக்­குள்­ளன. அத்­தோடு நாம் எம்மை பலப்­ப­டுத்திக் கொள்­வது அக் கட­மையை ஆற்ற எம்மைத் தகு­தி­யுள்­ள­வர்­க­ளாக ஆக்கும்.

பல­வீன சமூகம் அடுத்த சமூ­கங்­க­ளுக்­காக உழைப்­பது எப்­படிப் போனாலும் தன்னைக் காத்துக் கொள்­வதே அதற்குப் பெரும் சிர­ம­மாகும். அர­சியல் பலம் எம்மைப் பலப்­ப­டுத்­து­வ­தற்­கான முக்­கிய சாத­னங்­களில் ஒன்று .

இந்­நி­லையில் எமது அர­சியல் தலை­மை­க­ளி­ட­மி­ருந்தும், கட்­சி­க­ளி­ட­மி­ருந்தும் நாம் எதிர்­பார்ப்­பது என்ன?

1. இன உணர்வு கூர்­மை­ய­டை­யாமல் தமது நடத்­தைகள், பேச்­சுக்­களை அமைத்துக் கொள்ளும் ஆற்றல் உள்­ள­வர்­க­ளாக அவர்கள் இருக்க வேண்டும்.

இன உணர்வு திட்­ட­மிட்டு மிகக் கவ­ன­மாக வளர்க்­கப்­பட்டு வரு­கி­றது என்­பதில் சந்­தே­க­மில்லை.

அது மிக மெது­வாக வளர்ந்­தாலும் வளர்ந்து வரு­கி­றது என்ற உண்­மையை எப்­போதும் நாம் கவ­னத்திற் கொள்ள வேண்டும்.

எனவே ஓர­ளவு நீண்ட எதிர்­கா­லத்தில் எமது பௌதீக, மான­சீக வாழ்­வுக்­கா­னவைகளுக்கு அச்­சு­றுத்தல் தோன்ற இட­முள்­ளது என்­பதில் சந்­தே­க­மில்லை.

இச்­சூ­ழலில் எமது தலை­மை­க­ளிடம் இந் நிலை­யி­லி­ருந்து சமூ­கத்தைக் காக்கும் திட்டம் அல்­லது திற­னுள்­ளதா?


இங்கு எதிர்­கா­லத்தில் இரு விட­யங்களை மீள் பரி­சீ­ல­னைக்­குட்­ப­டுத்த வேண்டும்:
  
அ)      தனிக்­கட்சி அர­சியல்
 ஆ)    முஸ்­லிம்­களை மட்­டுமே எமது பிர­தி­நி­தி­க­ளாகத் தெரிவு செய்ய வேண்டும் என்ற                    சமூக மன­நிலை.

 இம் முறை கண்டி போன்ற பிர­தே­சங்­களில் சகோ­தர சமூ­கத்தில் உள்ள ஒரு­வரைத் தெரிவு செய்யும் சந்­தர்ப்பம் கிடைத்­துள்­ளது. அந்த சந்­தர்ப்­பத்தைப் நன்கு பயன்­ப­டுத்­து­வதன் மூலம் இதனை ஆரம்­பித்து வைக்க முடியும்.

தேசிய பங்­க­ளிப்பு, அர­சியல் மைய நீரோட்­டத்தில் கலத்தல் என்ற அதி­முக்­கிய அம்சம் குறித்த எமது திட்டம், பொறி முறை என்ன என்­பது தலை­மை­க­ளி­ட­மி­ருந்து எதிர்­பார்க்­கப்­படும் இன்­னொரு அம்சம்.

2. முஸ்லிம் சமூ­கத்தின் மான­சீக இருப்பு – மார்க்கம், கலாச்­சாரம், தனித்­துவம் என்­ப­வற்றைக் காப்­பது என்றால் என்ன? அதற்­கான திட்­டமும், வழி முறையும் எமது அர­சியல் தலை­மை­க­ளிடம் காணப்­படல் முதன்­மை­யான அம்­சங்­களில் ஒன்று.

3. எமது பௌதீக இருப்பைப் பலப்­ப­டுத்தல்: இது இரு கருத்­துக்­களைக் கொடுக்கும்

அ) கல்வி, பொரு­ளா­தார ரீதி­யாகப் பலம் பெறல்.

ஆ) முஸ்லிம் கிரா­மங்­களின் கீழ்க் கட்­ட­மைப்பைப் பலப்­ப­டுத்தல்.

இறு­தி­யாகச் சொன்ன முஸ்லிம் சமூ­கத்­தோடு நேர­டி­யாகச் சம்­பந்­தப்­படும் விவ­கா­ரங்­களை கையாள்­வது முதற்­சொன்ன பகு­தி­யோடு முரண்­பட்டுச் செல்­லாதபடி அவ­தா­ன­மாக இருப்­ப­துவும் அவ­சி­ய­மாகும்.

இத்­த­கைய போக்கு கொண்ட ஒப்­பீட்டு ரீதி­யாக சிறந்த தலை­வர்­களை நாம் தெரிவு செய்­வோ­மாக.

முஸ்லிம் அர­சியற் களத்தில் இரு புதிய அம்­சங்­களை இம்­முறை காண்­கிறோம்.

ஒரு புதிய அர­சியல் பிர­வேசம் : NFGG என்ற புதிய கட்சி பாரா­ளு­மன்றத் தேர்­தலில் இறங்கும் முடி­வுக்கு வந்­தமை. அந்­த­வ­கையில் முஸ்லிம் காங்­கி­ர­ஸோடு இணைந்­துள்­ளமை.

இக்­கட்­சியில் இஸ்­லா­மிய சிந்­தனைப் பின்­னணி கொண்­டோரும் இணைந்­துள்­ளனர்.

இந்தப் பிர­வேசம் முஸ்­லிம்­க­ளுக்கு ஒரு புதிய அர­சியல் தலை­மையை உரு­வாக்­குமா என்­பது காலம் சொல்ல வேண்­டிய பதில். எனினும் அதனைச் சாத்­தி­யப்­ப­டுத்த அவர்கள் கையாள வேண்­டிய முறைகள் பற்­றிய சில ஆலோ­ச­னை­களை முன்­வைப்­பது அவ­சியம் எனக் கரு­து­கிறோம்.

01) பாரா­ளு­மன்ற அங்­கத்­துவம் கிடைத்த போதும் அமைச்சுப் பத­விகள் எத­னையும் ஏற்­கா­தி­ருத்தல்.

உட­னேயே வேக­மாக அர­சி­யலில் முன்­னே­று­வது அபா­ய­க­ர­மா­னது. நான் எங்கே காலடி வைக்­கிறேன் என்­பதை அவ­தா­னித்து மிகவும் நிதா­ன­மா­கவும், அவ­தா­ன­மா­கவும், மெது­வா­கவும் செல்­வது மிக அவ­சியம்.

இந்­நி­லையில் வேலைப் பழு குறை­வாக இருப்­பதால் மக்­க­ளோடு அதி­க­ம­திகம் தொடர்பு வைக்­கவும், தொடர்ந்தும் களத்­தி­லி­ருக்­கவும் பெரி­ய­ளவு உதவும்.

02) இஸ்­லா­மிய அர­சியல் என்ற கருத்தில் இஸ்­லா­மிய வார்த்தைப் பிர­யோ­கங்கள், கதை­யா­டல்­களைத் தவிர்த்தல். இன்­னொரு வகையில் சொன்னால் இஸ்­லாத்தை அர­சியல் களத்­திற்கு இழுக்­கா­தி­ருத்தல்.

இது பல விட­யங்­க­ளுக்­காக மிக அவ­சி­ய­மா­னது.

அ) சிறு­பான்மை சமூ­க­மொன்றில் இது பிழை­யான மனப் பாதிப்­பு­களை அடுத்த சமூ­கங்­களில் ஏற்­ப­டுத்தும். சிங்­கள, தமிழ் தீவி­ர­வா­தத்­திற்கு அது துணை புரியும்.

ஆ) அடுத்த கட்­சி­களின் முஸ்லிம் அர­சியல் வாதி­களும் இஸ்லாம் பற்றிப் பேசத் தூண்டப் படு­வார்கள், அது பெரும் பாலும் தப்பும், தவ­று­மாக அமையும்.

இ) அர­சியல் பற்­றிய வரை­வி­லக்­கணம் சொன்ன இஸ்­லா­மிய சட்ட அறி­ஞர்­களும் கூட“­மக்­களை தீமைகள், சீர்­கே­டு­களை விட்டு அப்­பு­றப்­ப­டுத்தி நலன்­களை சாதித்துக் கொடுத்தல்” என்றே சொன்­னார்கள்.

சிறு­பான்மை முஸ்லிம் அர­சி­யலில் முழு­மை­யாகப் காணப்­ப­டு­வது நன்­மை­களைச் சாதித்­த­லே­யாகும். அதுவே சிறு­பான்மை அர­சியல் தத்­து­வத்தின் ஒரு முக்­கிய அம்­ச­மாகும்.

இப்­பின்­ன­ணியில் அதற்­கான வேலைத்­திட்­டங்­க­ளை தயா­ரிப்­ப­துவும், அவற்றை சாதிப்­ப­து­வுமே முழு­மை­யாகக் கவனம் செலுத்­தப்­பட வேண்­டிய விட­ய­மாகும்.

இந்தக் கருத்­தோட்­டத்தின் இன்­னொரு அம்­சமே இஸ்­லா­மிய இயக்­கங்­க­ளோடு தொடர்பு வைக்காதிருத்தலும், அவ்வியக்கங்கள் களமிறங்காமல் இருத்தலுமாகும். இது இரு சாராரையும் பாதுகாப்பதற்கு மிக முக்கியமாக உதவும்.

இஸ்லாமிய உலகிலேயே தஃவாவையும், அரசியலையும் கலக்கக் கூடாது என்ற கருத்து வலுப்பெற்று நடைமுறையாகி வரும் சூழல் இது சிறுபான்மை சமூகத்தைப் பொறுத்தவரையில் இது மிக முக்கியமானது.


03) முஸ்லிம் சமூகம் வரலாறு நெடுகிலும் இணக்க அரசியல் போக்கையே கடைப்பிடித்து வந்தது. காங்கிரஸின் முன்னால் தலைவர் மர்ஹும் பிணக்க அரசியலாக அதனை மாற்ற முயன்றார். ஆனால் அது முழுமையடையவில்லை.

தமிழ் சமூகத்தினர் இணக்க அரசியலில் துவங்கினார்கள். தமிழ்த் தலைவர் செல்வ நாயகம் அதனை பிணக்க அரசியலாக மாற்றி ஆனால் சாத்வீகப் போராட்டமாகக் கொண்டு சென்றார். பிறகு அது ஆயுத போரட்ட அரசியலாக மாறியது.

சகோதர சமூகமொன்றின் இந்த அனுபவமும் எம் முன்னே உள்ளது. இப்போது நாம் எவ்வாறு செல்லப் போகிறோம் என்ற தத்துவார்த்தப் பின்னணியொன்று எம்மிடம் இருக்க வேண்டும். அதனை NFGG உருவாக்கி கொள்ளல் அவர்களுக்கு முன்னே உள்ள பெரும் பொறுப்பாகும்.

04) அரசியல் மைய நீரோட்டத்தில் கலத்தல் என்ற கருத்தோட்டத்தை சாதிப்பது எவ்வாறு என்பது மிகவும் ஆழ்ந்து சிந்திக்கப்பட வேண்டிய ஓர் அம்சமாகும். அதற்கு ஐக்கிய தேசியக் கட்சியோடு இணைந்திருத்தலை ஒரு சந்தர்ப்பமாகப் பயன் படுத்திக் கொள்ளலாமா? அதற்கான பொறிமுறை என்ன? என்பது இப்பின்னணியில் ஆலோசிக்கப் படவேண்டிய விடயமாகும்.

05) இறுதியாக அரசியல் கட்சி என்பதை விட அரசியல் நிறுவனமாக இயங்கல் என்ற நிலை பற்றி NFGG அதிகமதிகம் சிந்திக்க வேண்டும்.

இரண்டிற்குமிடையிலான வேறுபாடு தெளிவு என்பதால் விவரமாக விளக்கத் தேவையில்லை என நம்புகிறேன்.

முஸ்லிம் அரசியல் களத்தில் இரண்டாவது முக்கிய அம்சம் இம்முறை முஸ்லிம்களில் குறிப்பிடத்தக்களவு தொகையினர் JVP க்கு ஆதரவாக இயங்கத் துவங்கியுள்ளனர். இதற்கான காரணமென்ன என்பதை ஆராய்வதை விட இதனை எவ்வாறு சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்பது முக்கியம் எனக் கருதுகிறேன்.

1. முஸ்லிம்கள் அரசியல் மைய நீரோட்டத்தில் கலப்பதற்கான ஒரு முக்கிய வாயில் இதுவாகும். JVP இல் இணைந்தமை வெறும் உணர்ச்சி பூர்வ நிலையாலும், நம்பிக்கையீனத்தாலும் உருவான முடிவாக இல்லாமல் JVP இல் நுழைந்தவர்கள் இவ்விடயத்தைக் கவனத்தில் கொள்வது அதனை வளர்க்க முயல்வது மிக முக்கியமாகும்.

2. முஸ்லிம்கள் தேசிய நலனில் அக்கறை கொண்டவர்கள் வெறுமனே சந்தர்ப்பவாத அரசியலை மட்டுமே கொண்டு செல்பவர்களல்ல என்ற கருத்தைப் பரவலாகவும் முஸ்லிம்கள் பற்றிய பிழையான மனப்பதிவை நீக்கவும் இது உதவ முடியும்.

இன உணர்வு கூர்மையடைவதிலிருந்து பாதுகாக்கவும் இத்தகையதொரு அரசியல் பிரவேசம் பெரியளவு உதவும்.,

ஆனால் இங்கு முக்கியமானது என்னவென்றால் அக்கட்சியின் வினைத்திறன்மிக்க உழைப்பாளர்களாக அங்கு நுழையும் முஸ்லிம் தலைமைகள் இருக்க வேண்டும். இந்த நாட்டின் தேசியக் கட்சிகளை உருவாக்குதல், வளர்த்தலில் முஸ்லிம் தலைமகைளுக்கு ஒரு குறிப்பிடத்தக்க பங்குண்டு என்பது வரலாறு. இக்கட்சியைப் பொறுத்தவரையிலும் அப்பங்கை வகிக்கும் திறன் அங்கு நுழையும் முஸ்லிம் தலைமைகளுக்கு இருக்க வேண்டும்.

இவ்வாறு எழுதுவது கண்டு முஸ்லிம் வாக்கைச் சிதறச் செய்வதற்கு இது காரணமாக அமையும் என சிலர் கூறலாம். ஒரு மாற்றத்தை உருவாக்க ஆரம்பத்தில் சில நஷ்டங்களைச் சகித்துக் கொள்ள வேண்டும் என்ற உண்மையை நாம் இங்கு கவனத்திற்கு கொள்ள வேண்டும். எந்த நஷ்டமுமின்றி ஒரு மாற்றத்தை நாம் உருவாக்க முடியாது.

அடுத்த முக்கிய அம்சம் நாம் பாராளுமன்றத்திற்கு அனுப்புவர்களின் தொகையையல்ல, தரத்தையே எப்போதும் கவனத்திற்கு கொள்ள வேண்டும்.

முஸ்லிம் வாக்காளர்கள் எப்போதும் வாக்களித்தல் என்பது ஒரு அமானிதம், ஒரு சாட்சி பகர்தல் என்பதைக் கவனத்திற் கொள்வார்களாக.

அமானிதத்தைப் பாதுகாத்தல் ஒரு முஸ்லிமின் அடிப்படைப் பண்பு. பொய்ச் சாட்சியம் ஒரு பயங்கரப் பாவம்.
Read More
avathani Media Network

தண்ணீர் தாகம் தீர்ப்போம் வவுணதீவில் கவனயீர்பு போராட்டம்

என்று தணியும் எமது தண்ணீர் தாகம்? ஒன்று கூடுவோம் வாரீர் குரல் கொடுப்போம் தண்ணீர் தாகம் தீர்ப்போம் என்ற தொனிப் பொருளில் மட்டக்களப்பு வவுணதீவு பிரதேச செயலாளர் பிரிவின் கீழுள்ள கிராம அபிவிருத்திச் சங்கங்கள் ஒன்றியம் மற்றும் மாதர் அபிவிருத்திச் சங்கங்கள் இணைந்து உன்னிச்சை குளத்து முன்றில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றினை ஏற்பாடு செய்திருந்தனர்.
குறித்த பிரதேச மக்கள் வரட்சியான காலத்தில் குளிப்பதற்காகவும், குடிப்பதற்காகவும் நீரை பெற்றுக் கொள்ள பல மைல் துரம் சென்று நீரை பெற்றுக் கொள்வதாக தெரிவிக்கின்றனர்.
அத்துடன் தங்களது அன்றாடத் நீர் தேவையினை நிறைவேற்ற பாதுகாப்பற்ற வீதி ஓரங்களில் குளிப்பதுமான ஒரு அவல நிலமை காணப்படுவதாக தெரிவிக்கின்றனர். இதேவேளை பல வருடகாலமாக குளத்தையும் வாய்க்கால்களையும் அண்மித்த இடங்களில் காணப்படும் பூவல் முறைமையில் குளிகளைத் தோண்டி மாசடைந்த நீரினையே குடித்து வருவதாக கவலை தெரிவிக்கின்றனர்.
இவ்வி;டயங்கள் தொடர்பாக மாவட்டத்தினை பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் வாதிகள் மற்றும் அரசாங்க அதிகாரிகள் தெரிந்திருந்தும் தங்களுக்கான நீர் வசதியினை பெற்றுத்தர நடவடிக்கை எடுத்துத் தர முன்வரவில்லை என தெரிவிக்கின்றனர்.
இதன்போது ஜனநாயகக் கட்சியின் தலைவர் பீல்ட் மார்ஸல் சரத்பொன்சேகா குறித்த விடயம் தொடர்பாக அறிந்து கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்ட மக்களை நேரில் சென்று பார்வையிட்டு குறித்த விடயம் தொடர்பாக மக்களுடன் கலந்துரையாடல் மேற்கொண்டார்.
இதுதொடர்பாக ஜனாதிபதியின் கவனத்திற்கு தெரிவித்து நடவடிக்கை மேற்கொள்வதாக மக்களிடம் தெரிவித்தார். குறித்த விடயம் தொடர்பாக நடவடிக்கை மேற்கொண்டு தருமாறு கோரிக்கை அடங்கிய மகஜர் போராட்டத்தில் கலந்து கொண்டவர்களினால் கையளிக்கப்பட்டது. பின்னர் போராட்டம் கைவிடப்பட்டது.



Read More
avathani Media Network

தெஹிவளை பள்ளிக்கு அருகில் மஹிந்தவுக்கு எதிராக ஆர்ப்பாட்டம்

பிரபல றக்பி வீரர் வசீம் தாஜூதீனின் சடலம் தோண்டி எடுக்கப்பட்ட தெஹிவளை பள்ளிவாசலுக்கு அருகில் பொது மக்கள் ஆர்ப்பட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்கள் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கு எதிராக பதாகைகளை ஏந்தியவாறு ஆர்ப்பட்டத்தில் ஈடுப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
source - virakesary
Read More
avathani Media Network

"எதிரொலி" தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பொறியியலாளர் அப்துர் ரஹ்மான் பங்கேற்கிறார்

(NFGG ஊடகப்பிரிவு)
சக்தி தொலைக்காட்சியில் இன்று 10.08.2015 இரவு 9.30 மணிக்கு ஒளிபரப்பாகவுள்ள "எதிரொலி" கலந்துரையாடல் நிகழ்ச்சியில் நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் தவிசாளரும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் மட்டக்களப்பு மாவட்ட2ம் இலக்க வேட்பாளருமான பொறியியலாளர் எம்.எம். அப்துர் ரஹ்மான் பங்கேற்கின்றார்.
இந்நிகழ்வின்போது, தமது NFGGயின் நல்லாட்சி அரசியற் கோட்பாடுகள் பற்றியும், இதன்மூலம் நாட்டு மேற்கொள்ளப்பட்டுவரும் தமது வேலைத்திட்டங்கள் மற்றும் எதிர்கால நடவடிக்கைகள் தொடர்பிலும்  நாட்டு மக்களுக்கு விளக்கமளிக்கவுள்ளார்.
Read More