Featured Home (TOP)

Recent Comments

Wednesday, November 18, 2015

avathani Media Network

மட்டு.மாவட்டத்தில் வெள்ள நீரை அகற்ற கோரிக்கை

(ஜவ்பர்கான்)
மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த ஒருவாரகாலமாய் இடைவிடாது பெய்த பெருமழை ஓய்ந்துள்ளமையால் மாவட்டத்தின் பல இடங்களிலும் வெள்ளம் வடிந்து வருகின்றது.
புதிய காத்தான்குடி, ஆரையம்பதி, களுவாஞ்சிக்குடி. வெல்லாவெளி உள்ளிட்ட பல இடங்களிலும் வெள்ளம் வடிவதை அவதானிக்க முடிகின்றது.
அதிகளவில் வெள்ளநீர் தேங்கி நிற்கும் இடங்களிலுள்ள நீரை வெளியேற்ற உள்ளுராட்சி மன்றங்கள் நடவடிக்கை எடுக்கவேண்டுமென பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


virakesari.lk
Read More
avathani Media Network

BCAS Campus இன் வருடாந்த பட்டமளிப்பு விழா- 2015.

இலங்கையின் முன்னணி உயர் கல்வி நிறுவனமான BCASCampus இன் வருடாந்த பட்டமளிப்பு விழா கடந்த11.11.2015 அன்று வெகு விமர்சையாக நடைபெற்றது.  கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டுமண்டபத்தில் நடை பெற்ற இந்நிகழ்வில், Quantity Surveying, Civil Engineering, Computing, Law, Bio Medical Sciences, BusinessManagement ஆகியதுறைகளில் உயர் தேசிய டிப்ளோமாக்களை பூர்த்தி செய்த 443 மாணவர்களுக்கு சான்றிதழ்களும், பதக்கங்களும் வழங்கிவைக்கப்பட்டன.
அத்தோடு Quantity Surveying (QS)  துறையில் London South Bank  பல்கலைக் கழகம் வழங்கும் BSc(Hons) பட்டங்களைப் பெற்றுக் கொண்ட 75 மாணவர்களுக்கான இளமானிப்பட்டங்களும், விசேட விருதுகளும் இப்பட்டமளிப்பு விழாவின்போது வழங்கி வைக்கப்பட்டன.

இந்நிகழ்வில் பல்கலைக் கழக விவகாரங்களுக்கான இராஜாங்க அமைச்சர் கௌரவ மோகன்லால் கிரேரா அவர்கள் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டதோடு London South Bank பலலைக்கழகத்தின் உபவேந்தர் பேராசிரியர் டேவிட் பீனிக்ஸ்  அவர்கள் கௌரவ அதிதியாகவும் கலந்து கொண்டார்.

மேலும், Edexel, UK இன் ஆசிய பிராந்தியத்திற்கான பணிப்பாளர் திருமதி பிரமிளா போள்ராஜ் அவர்களும் London South Bank பல்கலைக்கழகத்தின் உப தலைவர் பேராசிரியர் ராவ் அவர்களும் அதேபோன்று BCAS Campus தலைவர் பொறியியலாளர் அப்துர் ரஹ்மான் அவர்களும் அதனுடைய தலைமைப் பீடாதிபதி பேராசிரியர் சானிகா ஹிரும்புரேகம அவர்களும் இன்னும் பல பிரமுகர்களும் இப்பட்டமளிப்பு விழாவில் சிறப்பு அதிதிகளாகக் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

தனியார் உயர் கல்வித்துறையில் 16 வருட சிறப்பு அனுபவத்தைக் கொண்டுள்ள BCAS Campus, Quantity Surveying, Civil Engineering, Computing, Law, BioMedical Sciences, Business Management , Bio Technology , Telecommunication Engineering மற்றும் Electronics/Electrical Engineering ஆகிய துறைகளில் உயர்தேசிய டிப்ளமோ (HNDs) மற்றும் பட்டப்படிப்பு (Top Up Degrees)  அத்துடன் முதுமானி (Masters) ஆகிய தரத்திலான பாடநெறிகளைஇலங்கையில் வழங்கி வருகிறது.

இலங்கையின் தனியார் உயர் கல்வி நிறுவனங்களில் முதன்மை நிறுவனமாக நன்மதிப்பைப் பெற்றுள்ள BCAS Campus கொழும்பு, கல்கிஸ்ஸை, கண்டி, குருநாகல், யாழ்ப்பாணம், மட்டக்களப்பு மற்றும் கல்முனை ஆகிய நகரங்களில் வளாகங்களையும், துணை வளாகங்களையும் கொண்டிருப்பதோடு கட்டாரில் ஒரு கற்கை நிலையத்தையும் கொண்டுள்ளது.

பிரித்தானியாவின்  முன்னணி பல்கலைக்கழகங்ளான University of Wolverhampton , London South Bank University   என்பவற்றுடனும்,  உலகளாவிய ரீதியில் அங்கீகரிக்கப்படும் தகைமைகளைவழங்குகின்ற நிறுவனமான Edexel UK உடனும்உறுதியான இணைப்பைக் கொண்டுள்ள BCAS Campus இதுவரை பல்லாயிரக்கணக்கான இலங்கைமாணவர்களுக்கு உயர்கல்வி மற்றும் தொழில்வாய்ப்புகளுக்கான சந்தர்ப்பங்களைப் பெற்றுக் கொடுத்துள்ளது.















Read More
avathani Media Network

சம்மாந்துறை வைத்தியசாலையின் அசாதாரண நிலைமைகளைக் கண்டறிய கிழக்கு சுகாதார அமைச்சர் நசீர் நேரடி விஜயம்.

(ஏ.எல்.ஏ.றபீக் பிர்தௌஸ்)

சம்மாந்துறை ஆதார வைத்தியசாலையில் நேற்று முதல் நாள் ஏற்பட்ட அசாதாரண நிலைமைகளையும், அதன் குறைபாடுகளையும் கண்டறியும் நோக்கில், கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல்.எம்.நசீர் நேற்று அங்கு விஜயம் செய்தார்.

வைத்திய அத்தியேட்சகர் டாக்டர்.வை.பி.ஏ.அஸீஸ் தலைமையிலான குழுவினர் சுகாதார அமைச்சர் நசீரை வரவேற்று, வைத்தியசாலையின் சுற்றுச்சூழலை பார்வையிடச் செய்ததோடு, வைத்தியசாலையின் தேவைகள், குறைகளைத் தெரிவிக்கும் விசேட கலந்துரையாடலொன்றும் அங்கு இடம் பெற்றது.

இதில் தலைமை வகித்துப் பேசிய வைத்திய அத்தியேட்சகர் வை.பி.ஏ.அஸீஸ்:- 'எமது வைத்தியசாலைக்குப் பல அநீயாயங்கள் மேலதிகாரிகளால் இழைக்கப்பட்டுள்ளன. முன்னாள் சுகாதார அமைச்சரினால் எமது தாதியர் விடுதிப் புனர்நிர்மானத்திற்காக ஒதுக்கப்பட்டுள்ள ரூபாய்.50 இலட்சத்திற்குமான வேலைகள் ஒரு சதமெனும் குறைவில்லாமல் டீயுஞ வின்படி செய்துதரப்பட வேண்டும்' எனக் கேட்டுக் கொண்டார்.

மேலும் விசேட வைத்தியர்கள், தாதியர்கள், சிற்றூழியர்கள், பள்ளிவாசல் நம்பிக்கையாளர்கள் எனப் பலரும் பலவிதமான குற்றங் குறைகளையும், வைத்தியசாலையின் தேவைகளையும் அமைச்சரிடம் நேருக்கு நேர் எடுத்துக் கூறினர்.

தாதிய உத்தியோகத்தரான திருமதி.மறுஜுனா தனது ஆதங்கத்தை வெளிப்படுத்துகையில்;:-'எமது வைத்தியசாலையின் நிலைமையைக் கருத்தில் கொண்டு நாங்கள் இரவு, பகல் கடமைகளைச் செய்து வருவதனால், எங்கள் குடும்ப வாழ்க்கை பல வழிகளில் பாதிக்கப்படுகின்றது. எங்கள் கணவன், பிள்ளைகளின் தியாகங்களுக்கு மத்தியில் நாம் இதனை ஒரு சமூகப் பணியாகக் கருதியே செய்து வருகின்றோம். இப்படியாகப் பல தியாகங்களுக்கு மத்தியில் நாம் சம்பாதிக்கும் மேலதிக நேரக் கொடுப்பனவுகளைக் கூட தராமல் மறுத்திருக்கின்றனர். இன்னும் வைத்தியர்களுக்கு ரூபாய் 10000மும், தாதியருக்கு ரூபாய் 3000மும் வழங்க வேண்டுமென்று அரசாங்கம் பணித்திருந்த போதிலும் இந்த ரூ.3000த்தையும் தாதியர்கள் பெறக் கூடாது என்பதற்காக எமது சுனுர்ளு எங்களது சம்பளத்திலிருந்து ரூ.3000த்தையும், வட்டி ரூ.150வும் சேர்த்து ரூ.3150தை இந்த சுனுர்ளு வெட்டி எடுத்துள்ளார். இப்படியான குறுகிய சிந்தனையுள்ள ஒரு மேலதிகாரி எங்களுக்குத் தேவையில்லை' எனத் தெரிவித்தார்.

வைத்தியசாலை ஊழியரான திருமதி.ஜாபிறா கருத்து வெளியிடுகையில்:- 'சிற்றூழியர்களான நாங்கள் இங்கு பெருங் கஷ்டங்களை எதிர்நோக்குகின்றோம். ஒரு வாட்டுக்கு 04 பேர் தேவையான இடத்தில் ஒருவர் மட்டுமே கஷ்டப்படுகிறோம். ஊழியர் பிரச்சினையைத் தீர்த்துத் தாருங்கள்' எனக் வேண்டிக் கொண்டார்.

அனைத்தையும் செவிமடுத்த அமைச்சர் நசீர் கருத்துத் தெரிவிக்கையில்:- 'உங்கள் பிரச்சினைகள் எல்லாவற்றையும் நான் நன்கறிவேன். அரசாங்கத்துடைய எல்லா வைத்திய சாலைகளிலும் பல குறைபாடுகள் இருக்கின்றன. அதிலும் சனத்தொகை ஆகக் கூடுதலாகக் காணப்படும் சம்மாந்துறை போன்ற வைத்தியசாலைகளிலும் பல குறைபாடுகள் இருக்கத்தான் செய்கின்றன. அவற்றையெல்லாம் நிவர்த்தி செய்துதருவதற்காகவே சுகாதார அமைச்சர் நசீர் இந்த அடத்திற்கு வந்துள்ளேன். முன்னாள் சுகாதார அமைச்சர் மன்சூர் விட்ட இடத்திலிருந்து அப்பணிகளை நான் தொடர்ந்தும் செய்துதரத் தயாராக இருக்கிறேன். மூன்று இனமக்களும் வாழுகின்ற கிழக்கு மாகாணத்திற்கு ஒதுக்குகின்ற நிதிகள் போதாமலிருக்கின்ற காரணத்தினால் மத்திய அரசுடன் இணைந்து சில நிதிகளைக் கொண்டு வந்து மாகாண வைத்தியசாலைகளை அபிவிருத்தி செய்யும் தேவையும் எமக்கிருக்கிறது. உங்களது கடமைகளை நீங்கள் சரிவரச் செய்யுங்கள். உங்களது கொடுப்பனவுகள், உங்களுக்குரித்தான அத்தனையையும் நான் பெற்றுத் தரத் தயாராக இருக்கிறேன்' எனத் தெரிவித்தார்.











Read More
avathani Media Network

வலம்புரி கவிதா வட்டத்தின் 22வதுபௌர்ணமி கவியரங்கு

வலம்புரி கவிதா வட்டத்தின் 22வது பௌர்ணமி கவியரங்கு கவிமணி எம்.சி.எம்.சுபைர்  அரங்காக எதிர்வரும் 25.11.2015 அன்று காலை 10.00 மணி, புதன்கிழமை கொழும்பு-12 குணசிங்கபுர அல் ஹிக்மா கல்லூரியில் . கவிஞா; எம்.ஏ.எம்.ஆறுமுகம் தலைமையில் நடைபெறும்.
 

இவ்வரங்கில்  லேக்ஹவுஸ் தமிழ் வெளியீடுகளுக்கான ஆலோசகர் எம்.ஏ.எம்.நிலாம் (ஈழத்துநூன்) அவர்கள் சிறப்பதிதியாக கலந்துக் கொண்டு ; கவிமணி எம்.சி.எம் சுபைh; அவா;களைப் பற்றி சிறப்புரை  ஆற்றுவார்.
இக்கவியரங்கில் கவிதை வாசிக்க விரும்புவோர் என்.நஜ்முல் ஹுசைன் (தலைவர்)  0714929642
இளநெஞ்சன் முh;ஷிதீன் (செயலாளா) ;0777388149 ஆகியாருடன் தொடர்புக் கொள்ளலாம்
Read More