Featured Home (TOP)

Recent Comments

Sunday, December 13, 2015

avathani Media Network

பழச் சம்பாத்தியம்

(எம்.எல்.எம்.அன்ஸார்  )

இரத்தம் சதை எலும்பு மூச்சு என்று
எல்லாவற்றையும்
செல்வச் செழிப்போடு வாழவைத்துக் கொண்டிருக்கிறேன்!
*
அப்பிள் பழத்தை அறுத்துத்தான்
காலைச் சாப்பாடாக கண்கள் புசிக்கின்றன!
*
மதியத் தாகத்திற்கு
மாதுளம் பழச் சாறு பிழிந்து
இதயம் பருகி இளைப்பாறுகிறது!
*
பப்பாசிப் பழத்தைக் கண்டால்
பயந்தோடிப் போகிறது மலச் சிக்கல்!
*
இருமலை இனிப்பு ஊற்றிக் கழுவி
தொண்டையைத் துடைத்து
சுத்தமாக வைத்திருப்பதற்குத்தான்
பலாப் பழத்திற்கு சம்பளம் கொடுத்து
பணியில் சேர்த்திருக்கிறேன்!
*
இரத்தத்தை பழுது பார்த்து  இணக்கித் தருகின்ற
தொழில்நுட்ப வேலையை
தோடம் பழம் கவனித்துக் கொண்டிருக்கிறது!
*
சதைகள்
வேலை நிறுத்தத்தில் குதிக்கின்ற போதெல்லாம்
அவற்றின் கோரிக்கைகளை அங்கீகரித்து
தொழிலுக்கனுப்பி வைக்கின்ற அதிகாரம்
கொய்யாப் பழத்திற்கு கொடுக்கப் பட்டிருக்கிறது!
*
நான் மறக்கின்றவைகளை  குறிப்பெழுதி வைத்து
தேவைப்படுகின்ற போது தேடித்தருகின்ற
எனது உதவியாளன் விளாம்பழம்!
*
நரம்புகளை பாடசாலைக்கு அழைத்துச் சென்று
திராட்சைப் பழங்கள் படித்துக் கொடுப்பதனால்தான்
அவை
வயோதிபத்திடம் தோல்வியடையாமல்
சொந்தக் காலில் துணிந்து நிற்கின்றன!
*
உன் கன்னங்கள்
தக்காளிப் பழத்தில்
தங்க நகை அணிய ஆசைப் படுகிறதா?
நட்டமே கிடைக்காத பழச் சம்பாத்தியத்தில்
முதலீடு செய்!
22-10-2015




Read More
avathani Media Network

கோழிக்­கூட்டை போன்று இருக்கும் ஊட­க­வி­ய­லா­ளரின் செய்தி அறை

இலங்­கையில் ஊட­க­வி­ய­லா­ளர்­களுக்கு உயர்­தர பயிற்­சிகள் வழங்கி அவர்­களின் தொழிற்­றுறை முன்­னே ற்­றப்­பட வேண்டும். விசே­ட­மாக பாரா­ளு­மன்­றத்தில் ஊட­க­வி­ய­லா­ளர்­களின் செய்தி அறை கோழிக்­கூட்டைப் போன்று உள்­ளது.
அதனை விஸ்­தீ­ர­ணப்­ப­டுத்த நட­வ­டிக்­கைகள் எடுக்­கப்­பட வேண்­டு­மென்றும் ஜே.வி.பி. எம்.பி. டாக்டர் நளின்த ஜய­திஸ்ஸ தெரி­வித்தார்.
கடந்த ஆட்­சியில் அரச அச்­சகம் ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்சி அச்­ச­க­மாக இயங்­கியது எனவே இது தொடர்­பாக விசா­ர­ணைகள் நடத்­தப்­பட வேண்­டு­மென்றும் அவர் கோரிக்கை விடுத்தார்.
பாரா­ளு­மன்­றத்தில் நேற்று சனிக்­கி­ழமை இடம்­பெற்ற வரவு செலவுத் திட்­டத்தின் பாரா­ளு­மன்ற அலு­வல் கள் மற்றும் வெகு­சன ஊட­கத்­துறை அமைச்­சர்­களின் குழு நிலை விவா­தத்தில் உரை­யாற்றும் போது டாக்டர் நளின்த ஜய­திஸ்ஸ எம்.பி. இவ்­வாறு தெரி­வித்தார்.
சபையில் அவர் தொடர்ந்து உரை­யாற்­று­கையில்,
ஊட­க­வி­ய­லா­ளர்­க­ளுக்­கான பயிற்­சி­களை வழங்­கு­வ­தற்கு திட்­ட­மிட்ட நட­வ­டிக்­கைகள் மேற்­கொள்­ளப்­பட வேண்டும். பாரா­ளு­மன்­றத்தில் செய்தி சேக­ரிப்­ப­தற்­காக ஊட­க­வி­ய­லா­ளர்­க­ளுக்கு வழங்­கப்­பட்­டுள்ள அறை கோழிக்­கூ­டு­களை போன்றும் ஒரு ரியூசன் வகுப்­ப­றையை போன்றும் நெருக்­க­டி­யாக இருக்­கின்­றது.
எனவே அவ் ஊட­க­வி­ய­லா­ளர்­க­ளுக்­கான செய்தி அறைகள் விஸ்­தீ­ர­ணப்­ப­டுத்­தப்­பட வேண்டும். அத்­தோடு பிர­தேச ஊட­க­வி­ய­லா­ளர்கள் சுயா­தீ­ன­மாக தொழில் புரி­வ­தற்­கான நட­வ­டிக்­கைகள் மேற்­கொள்­ளப்­பட
வேண்டும். அவர்­க­ளுக்­கான கொடுப்­ப­ன­வுகள் தொடர்­பாக கவனம் செலுத்­தப்­பட வேண்டும். சில ஊட­க­வி­ய­லா­ளர்கள் அர­சி­யல்­வா­தி­களால் பணம் கொடுத்து வாங்­கப்­ப­டு­கின்­றனர். அதே­வேளை சுயா­தீ­ன­மாக செயற்­படும் பிர­தேச ஊட­க­வி­ய­லா­ளர்­க­ளுக்கு மோட்டார் சைக்கிள் வழங்­கப்­பட வேண்டும்.
கடந்த காலங்­களில் அர­சாங்க அச்­சகம் ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சியின் அலு­வ­ல­க­மாக இயங்­கி­யது. அக்­கட்­ சிக்­காக பல ஆவ­ணங்கள் அச்­சி­டப்­பட்­டமை இவ்­வா­றான செயற்­பா­டு­க­ளுக்­காக ரூபா.30 இலட்சம் அரச அச்­ச­கத்­திற்கு செலுத்­தப்­பட
வேண்டியுள்ளது.
எனவே இம்மோசடி தொடர்பாக விசாரணைகள் நடத்தப்பட வேண் டும். செலுத்த வேண்டிய தொ கையை
அறவிட வேண்டும். இல்லாவிட் டால் அதே பயண த்தை இந்த அரசு முன்னெடுக்க முனைந்ததாகவே அது அமையும் என்றும் நளிந்த ஜய திஸ்ஸ எம்.பி. தெரிவித்தார்.
virakesari.lk
Read More
avathani Media Network

முதல் முறையாக தேர்தலில் வாக்களித்த சவுதிப் பெண்கள்

மன்னர் ஆட்சி நடைபெற்று வருகின்ற சவுதி அரேபியாவில் இதுவரை பெண்களுக்கு வாக்குரிமை இருக்கவில்லை. அவர்கள் தேர்தலில் போட்டியிடவோ கார் ஓட்டவோ அனுமதி இல்லை.

இந்நிலையில், அங்கு இடம்பெற்ற நகரசபைத் தேர்தலில் பெண்கள் வாக்களிப்பதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

தேர்தலில் தங்களுக்கும் வாய்ப்பளிக்க வேண்டும் என சவுதிப் பெண்கள் மேற்கொண்ட நீண்ட நெடும் போராட்டத்திற்கு இன்றைய தினம் ஓர் நல்ல பலன் கிட்டியுள்ளது.

அதன்படி, 979 பெண்கள் தேர்தலில் போட்டியிட்டுள்ளனர். சுமார் 1,30,637 பெண் வாக்காளர்களாகப் பதிவு செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த ஜனவரி மாதம் மன்னர் அப்துல்லா மரணம் அடைவதற்கு முன்பாக சில சீர்திருத்தங்களை கொண்டு வந்தார். இதில் பெண்களுக்கு வாக்குரிமை வழங்குவதும் அடங்கும்.


Read More
avathani Media Network

ஆள்மாறாட்டம் செய்து பரீட்சை எழுதியவர் கைது

கண்டியில் கல்வி பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையில் ஆள்மாறாட்டம் செய்து பரீட்சை எழுதிய ஒருவரை கண்டி பொலிஸார் கைது செய்துள்ளனர்.
20 வயதுடைய நபர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
போலி ஆவணங்களை சமர்ப்பித்தல், போலிப் பெயரில் பரீட்சை எழுதியமை, மோசடியில் ஈடுபட்டமை போன்ற குற்றங்களுக்காக கைது செய்யப்பட்ட குறித்த நபரைகண்டி நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்திய போது இரண்டு இலட்ச ரூபா சரீரப் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

உண்மையான பெயரைக் கொண்ட பரீட்சாத்தியையும் விசாரணைக்குட்படுத்த    பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
Read More