Featured Home (TOP)

Recent Comments

Monday, December 14, 2015

avathani Media Network

எனக்கு கொலை அச்சுறுத்தல்: முஜிபுர்

பிரபல றகர் வீரர் வசீம் தாஜுதீன் கொலைத் தொடர்பில் நாடாளுமன்றத்தில் உரையாற்றிய தனக்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள மூவர், மரண அச்சுறுத்தல் விடுத்ததாக ஐக்கிய தேசியக் கட்சியின் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான், சபாநாயகரின் கவனத்துக்கு கொண்டுவந்தார்.
நாடாளுமன்றத்தில் நேற்று சனிக்கிழமை சிறப்புரிமை பிரச்சினையொன்றை முன்வைத்தே அவர், மேற்கண்டவாறு கோரிநின்றார்.
 தனக்கு இடையூறு விளைவித்தமை மட்டுமன்றி, நாடாளுமன்ற உறுப்பினர்கள் மூவரால் தனக்கு மரண அச்சுறுத்தலும் விடுக்கப்பட்டது. இதுதொடர்பில் விசாரணைக்க வேண்டும்.
 பிரபல றகர் வீரர் வசீம் தாஜுதீன் தொடர்பில் உரையாற்றிக்கொண்டிருந்த போது உரைக்கு இடையூறு விளைவித்தமை மட்டுமன்றி, நாடாளுமன்ற உறுப்பினர்களான ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ, சனத் நிஸாந்த மற்றும் இந்திக அனுருத்த ஆகியோர், தாஜுதீன் தொடர்பில் பேசவேண்டாம் என்று மரண அச்சுறுத்தல் விடுத்தனர் என்றும் முஜிபுர் ரஹ்மான் சுட்டிக்காட்டினார்.
 இந்த விவகாரம் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர்களின் சிறப்புரிமை குழுவில் கலந்துரையாடப்படும் என்று சபாநாயகர் அறிவித்தார்.
Read More
avathani Media Network

தேர்தல் சட்டத்தை பசில் மீறியதாக குற்றச்சாட்டு

முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சரும், முன்னாள் ஜனாதிபதியின் இளைய சகோதரருமான பசில் ராஜபக்‌ஷ ஜனாதிபதி தேர்தல் சட்டத்தை மீறியதாக கொழும்பு மேல் நீதிமன்றத்தில் சட்டமா அதிபர் திணைக்களத்தால் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளார்.
திவிநெகும நிதியில் 29 மில்லியன் ரூபாவை முறைகேடாகப் பயன்படுத்தியதாக சட்டமா அதிபர் திணைக்களம் அவர் மீது கடந்த வெள்ளிக்கிழமை குற்றஞ்சாட்டியுள்ளது. தேர்தலுக்கு முன்னர் வாக்காளர்கள் மத்தியில் இந்தப் பணம் பகிர்ந்தளிக்கப்பட்டிருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
பசில் ராஜபக்ஷவுடன், திவிநெகும நிதியத்தின் முன்னாள் பணிப்பாளர் நாயகம் ஆர். ஆர். கே. ரணவக்கவும் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளார்.
கையூட்டல்களை வழங்கி வாக்குகளைப் பெறுவதற்கு முயற்சித்ததாக குற்றஞ் சுமத்தப்பட்டுள்ளது. திவிநெகும நிதியம் தொடர்பாக பசில் ராஜபக்ஷ கடந்த ஏப்ரல் மாதம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு பின்னர் பிணையில் விடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Read More

Sunday, December 13, 2015

avathani Media Network

பிரதமருக்கு எதிராக மனு

பிரதமருக்கு எதிரான மனுவொன்றில் கையெழுத்திட அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தீர்மானித்துள்ளது. 

இன்று காலை கூடிய சங்கத்தின் மத்திய செயற்குழு குறித்த முடிவை எடுத்துள்ளதாக, அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் நலிந்த ஹேரத் குறிப்பிட்டுள்ளார். 

அண்மையில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் குறித்து கூறிய கருத்துக்களுக்கு எதிராகவே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. 

மேலும் குறித்த மனுவை நாளை பிரதமர் அலுவலகத்தில் ஒப்படைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, நலிந்த ஹேரத் சுட்டிக்காட்டியுள்ளார். 

இதேவேளை, பிரதமர் ரணில் விக்ரமசிங்க நாளை பாராளுமன்றத்தில் விஷேட உரையொன்றை ஆற்றவுள்ளார். 

தொழிற்சங்கங்களுடன் இடம்பெற்ற கலந்துரையாடலில் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகள் தொடர்பில் அரசாங்கத்தின் நிலைப்பாடு என்ன என்பது குறித்து தௌிவுபடுத்தும் வகையில் இந்த உரை அமையவுள்ளதாக, பிரதமர் அலுவலகம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

adaderana.lk
Read More
avathani Media Network

நீர்வீழ்ச்சிக்கு அருகில் இளைஞன், யுவதி சடலமாக மீட்பு

எல்பிட்டிய – பிட்டுவ – அடஹேலன நீர்வீழ்ச்சிக்கு அருகில் இருந்து இருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
23 வயதான இளைஞன் மற்றும் 18 வயதான யுவதி ஆகியோரே இவ்வாறு சடலங்களாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர குறிப்பிட்டுள்ளார்.
இன்று பகல் குறித்த பகுதியில் மோட்டார் சைக்கிள் ஒன்று இருப்பதாக பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளிலேயே இரு சடலங்கள் இருப்பது தெரியவந்ததாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் இதன்போது எல்பிடிய – நவதகல பகுதியைச் சேர்ந்த இருவரே பலியாகியுள்ளதோடு, சடலங்களின் அருகில் இருந்து நச்சு குப்பி ஒன்றும் கைப்பற்றப்பட்டுள்ளது.
எதுஎவ்வாறு இருப்பினும் மரணத்துக்கான காரணம் இதுவரை தெரியவரவில்லை.
சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை எல்பிடிய பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
Read More