பாலர்கள் பிழை செய்கின்ற போது கூட அது அழகுதான் - அலிஸாஹிர் மௌலானா.
(ஏ.எல்.டீன்பைரூஸ்)
காத்தான்குடி அஷ்ஸஹ்றா பாலர் பாடசாலையின் கலைவிழா நிகழ்வு காத்தான்குடி கடற்கரை கடாபி கார்டனில் ஆசிரியர் எம்.எம்.எம்.லாபிர் தலைமையில் இடம் பெற்றது பிரதம அதிதியாக மட்டக்களப்பு பாராளுமன்ற உறுப்பினர் செய்யது அலிஸாஹிர் மௌலானா கலந்து கொண்டார்.
மேற்படி நிகழ்வில் கௌரவ அதிதிகளாக காத்தான்குடி பிரதேச கல்விப் பணிப்பாளர் எம்.ஏ.சீ.எம்.பதுர்தீன் முன்னால் பிரதி நகர முதல்வர் மர்சூக் அஹமட் லெப்பை ஓய்வு பெற்ற அதிபர் யு.எல்.எம்.முபாறக். சீ.எம்.கலீலுா்ரஹ்மான், கிராம சேவை உத்தியோகஸ்தரும், அஷ்ஸஹ்றா பாலர் பாடசாலையின் ஸ்தாபகர்களில் ஒருவருமான ஏ.எம்.அஸீஸ் உட்பட ஊடகவியாளர்கள், பெற்றொர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
பாலர்கள் பிழை செய்கின்ற போது கூட அது அழகுதான் மேற்படி பாடாலை மாணவர்களின் திறமைஇதன்நம்பிக்கை என்பவற்றை அவதானிக்கின்ற போது பெருமையாக உள்ளது என பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றிய பாராளுமன்ற உறுப்பினர் செய்யது அலிஸாஹிர் மௌலானா தெரிவித்தார்.
அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்.....
யுனிசெப் நிறுவனத்துடைய பணிப்பாளர் எனது நண்பர் பாலர் பாடசாலைகளுக்கு உதவுவதற்கு எமது நிறுவணம் தயாராக உள்ளது என அவர் என்னிடம் கூறினார். ஆகவே நாங்கள் யுனிசெப் நிறுவனத்திடம் சிபார்சு செய்வதில் காத்தான்குடி அஷ்ஸஹ்றா பாலர் பாடசாலைக்கு முதலிடம் என்றும் தெரிவித்தார்.
இறுதியாக நிகழ்வில் கலந்து கொண்ட அதிதிகளை கௌரவிக்கின்ற நிகழ்வு மற்றும் மாணவர்களுக்கான பரிசளிப்பு நிகழ்வும் சிறப்பாக இடம் பெற்றது


