Featured Home (TOP)

Recent Comments

Friday, January 15, 2016

avathani Media Network

முஹாசபா மீடியா நெட்வொர்க் இனது 2ஆவது சிரமதான நிகழ்வு..

முஹாசபா மீடியா நெட்வொர்க் இனது காத்தான்குடி குழுவினரால் இன்று(15/01/2016) ம் திகதி காத்தான்குடி ஸாஹிரா வலது குறைந்தோர் பாடசாலையில் சிரமதானம் மேற்கொள்ளப்பட்டதுடன் பெளதீக குறை பாடுகள் தொடர்பாகவும் ஆராயப்பட்டது..
முஹாசபா மீடியா நெட்வொர்க் தொடர்ச்சியாக மேற்கொண்டு வரும் சமூக நலன் செயற்திட்டங்களில் ஒன்றாக இச் சிரமதானங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது..
இத் தூய பணியில் அதிக சகோதரர்கள், மாணவர்கள் கலந்து  கொண்டனர்..  கலந்து கொண்ட சகோதர்களுக்கும் , உதவிகள் புரிந்த  சகோதரர்களுக்கும் முஹாசபா மீடியா நெட்வொர்க் இன் பணிப்பாளர் ஊடகவியலாளர் ஜுனைட்.எம்.பஹ்த் நன்றி தெறிவித்தார்..







Read More
avathani Media Network

-பாலர் பாடசாலைகளுக்கு முற்றிலும் இலவசமாக பால் சூடாக்கும் இயந்திரம் வழங்கி வைப்பு-படங்கள்.

(பழுலுல்லாஹ் பர்ஹான்

மட்டக்களப்பு மாவட்டத்தின் காத்தான்குடி பிரதேச செயலாளர் பிரிவில் இயங்கிவரும் காத்தான்குடி பிரதேச அரச கால்நடை வைத்திய அதிகாரி அலுவலகத்தினால் தூய பசும்பால் அருந்துவதை ஊக்குவிக்கும் நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் காத்தான்குடி பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள பாலர் பாடசாலைகளுக்கு முற்றிலும் இலவசமாக பால் சூடாக்கும் இயந்திரம் வழங்கப்பட்டு வருகின்றது.

மேற்படி பால் சூடாக்கும் இயந்திரம் வழங்கும் நிகழ்வு அண்மையில் காத்தான்குடி பிரதேச அரச கால்நடை வைத்திய அதிகாரி அலுவலகத்தில் இடம்பெற்றது.
 
இதன் போது காத்தான்குடி பிரதேச அரச கால்நடை வைத்திய அதிகாரி திருமதி .டுஜித்திரா லிங்கேஸ்வரனினால் தெரிவு செய்யப்பட்ட பாலர் பாடசாலைகளுக்கு அதன் பொறுப்பாசிரியைகளிடம் முற்றிலும் இலவசமாக பால் சூடாக்கும் இயந்திரம் உத்தியோகபூர்வமாக வழங்கி வைக்கப்பட்டது.
 
குறித்த பால் சூடாக்கும் இயந்திரம் பீ.எஸ்.டி.ஜி திட்டத்தின் கீழ் காத்தான்குடி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பகுதிகளிலுள்ள அஸ்ஸஹ்றா பாலர் பாடசாலை,அப்றார் பாலர் பாடசாலை,அமானா கிட்ஸ் கொலேஜ்,தாருஸ் ஸலாம் பாலர் பாடசாலை,அப்ரா பாலர் பாடசாலை,ஜாமிஉல்ழாபிரீன் பாலர் பாடசாலை,அல் மஜீதிய்யா கிட்ஸ் கொலேஜ்,நூரா பாலர் பாடசாலை உள்ளிட்ட 8 பாலர் பாடசாலைகளுக்கு வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது








Read More
avathani Media Network

தமிழ்,முஸ்லிம் மாணவர்களுக்கான பாடசாலை உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு-படங்கள்.

(பழுலுல்லாஹ் பர்ஹான்)

மட்டக்களப்பு மாவட்டத்தின் ஆரையம்பதி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட சிகரம் கிராமத்தில் சிறப்பாக இங்கிவரும் சிகரம் கிராம அபிவிருத்தி சங்கத்தின் ஏற்பாட்டில் ஸ்ரீலங்கா கப்பல் ஆலிம் பவுண்டேஷனின் அனுசரனையுடன் நடைபெற்ற வறிய தமிழ்,முஸ்லிம் மாணவர்களுக்கான பாடசாலை உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு அண்மையில் காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்கள் சம்மேளனத்தின் சிகரம் வீட்டுத்துத் தொகுதியிலுள்ள கலாசார மண்டபத்தில் இடம்பெற்றது.

சிகரம் கிராம அபிவிருத்தி சங்கத்தின் தலைவர் எம்.வை.ஆதம் ஜேபி தலைமையில் இடம்பெற்ற மேற்படி வறிய தமிழ்,முஸ்லிம் மாணவர்களுக்கான பாடசாலை உபகரணங்கள் வழங்கும் நிகழ்வில் பிரதம அதிதியாக ஆரையம்பதி பிரதேச செயலாளர் வி.வாசுதேவன் கலந்து கொண்டார்.

இதன் அதிதிகளினால் வறிய தமிழ்,முஸ்லிம் மாணவர்களுக்கு பாடசாலை உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டதுடன் நான்கு குர்ஆன் மத்ரசாக்களைச் சேர்ந்த மாணவர்களுக்கு குர்ஆன் பிரதிகளும் வழங்கி வைக்கப்பட்டது.

இந் நிகழ்வில் ஸ்ரீலங்கா கப்பல் ஆலிம் பவுண்டேஷனின் பணிப்பாளர் மௌலவி எஸ்.எம்.எம்.முஸ்தபா (பலாஹி),ஆரையம்பதி மாவட்ட வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் பிரான்சிஸ் அல் மேடா,ஆரையம்பதி பிரதேச சபையின் செயலாளர் திருமதி.சீ.ஜெ.அருட்பிரகாசம்,ஆரையம்பதி நீர் வலங்கள் வடிகாலமைப்பு சபையின் பொறியியலாளர் கே.எம்.எம்.சமட்,ஆரையம்பதி பிரதேச செயலகத்தின் பிறப்பு,இறப்பு,விவாகப் பதிவாளர் ரமனி லக்சுமிகாந்தன், ஆரையப்பதி மத்தியஸ்த சபையின் முன்னாள் தலைவர் எஸ்.ராமசந்திரன் உட்பட ஆரையம்பதி மாவட்ட வைத்தியசாலை அபிவிருத்திக்குழு,ஆரையப்பதி மத்தியஸ்த சபை ஆகியவற்றின் உறுப்பினர்கள், ஊர்பிரமுகர்கள்,
உலமாக்கள்,ஊடகவியலாளர்கள் பொது மக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

















Read More
avathani Media Network

ஏன் நாங்கள் மாலபே தனியார் மருத்துவ கல்லூரியை ( SAITM) நிராகரிக்க வேண்டும்

MB.முஹம்மது ஸில்மி,
மருத்துவ மாணவன்,
கிழக்கு பல்கலைக்கழகம்.


நேற்று (2016.01.13) இலங்கையிலுள்ள ஏழு அரச மருத்துவ பல்கலைக்கழகங்கள் இணைந்து கொழும்பிலும் யாழ். பல்கலைக்கழகத்தினால் யாழிலும் மாலபே தனியார் மருத்துவ கல்லூரியினால் இலங்கைக்கு ஏற்படும் விபரீதங்கள் பற்றியும் அரச பல்கலைக்கழகங்களில் மருத்துவத்துறை கற்கும் மாணவர்களுக்கு ஏற்படும் அநீதி பற்றியும் சாத்வீகப் போராட்டமொன்று ஒழுங்குபடுத்தப்பட்டிருந்தது.
பொதுமக்களில் பலருக்கு இது விடயத்தில் உள்ள தெளிவின்மையை களைவதற்கும் பணத்துக்கு விலை போன சில அரசியல்வாதிகள் மற்றும் கல்வி கற்று பட்டம் பல பெற்றும் முட்டாள்களாய் நடந்து கொள்ளும் அறிவீனர்கள் இது பற்றி கூறும் கருத்துக்களில் உள்ள பொய்களை அம்பலப்படுத்தும் வண்ணமும் இக்கட்டுரை வரையப்படுகின்றது.
அரச பல்கலைக்கழகங்களின் வளங்களை சூறையாடி இலவச கல்வியை முறையை செயலிழக்கச்செய்து அவற்றிற்கு மாற்றீடாக தனியார் பல்கலைக்கழகங்களை மக்கள் முன் அறிமுகப்படுத்தி பணம் சம்பாதிக்கும் முறை இன்று நேற்று அல்ல சுமார் 30 வருடங்களுக்கு முன்பிருந்தே ஆரம்பிக்கப்பட்டுவிட்டது.
இதற்கெதிராக மாணவர்கள் ஆட்ஷேபனை தெரிவித்த போதெல்லாம் அவர்களின் குரல் வளைகள் நசுக்கப்பட்டன.
அதிகாரத்திலிருந்தோர் பணத்துக்கு அடிமையாகி அதர்மத்தின் பக்கம் தலைசாய்த்தனர்.
விளைவு...??? தனியார் பல்கலைக்கழங்கள் ஆங்காங்கே தலைதூக்க தொடங்கின. அரச பல்கலைக்கழகங்களின் விரிவுரையாளர்கள் பணம் கொடுத்து வாங்கப்பட்டனர். அரச பல்கலைக்கழகங்களின் கல்வி கற்கும் மாணவர்களின் நிலை அந்தோ பரிதாபமானது. கல்வி நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டன.

இலவசக்கல்வி முறை பாதிக்கப்படுவதனை எதிர்த்து மாணவர்கள் போராடத்தொடங்கினர்.
இதனை சகிக்க முடியாத அதிகாரத்திலிருந்தோரால் மாணவர்கள் மீது வன்முறைகள் கட்டவிழ்த்து விடப்பட்டன.இற்றை வரை இதற்காக போராடிய மாணவர் ஒன்றியத்தின் தலைவர்களில் சுமார் 10 பேர் வரிசையாக கடத்தப்பட்டு மிகவும் மோசமான முறையில் படுகொலை செய்யப்பட்டனர்.

இதன்தொடராகவே கடந்த 2010 ஆம் ஆண்டு  மாலபே எனும் இடத்தில் SAITM எனும் தனியார் மருத்துவ கல்லூரி ஆரம்பிக்கப்பட்டது.
இதன் விளைவுகள்.
1. இதுவரை காலமும் மாவட்டத்தில் அதிகூடிய சித்திகளைப்பெற்று  திறமை அடிப்படையில் வடிகட்டப்பட்டு மருத்துவ துறை கற்பதற்கு தெரிவாகின்றனர்.
இதற்காக ஆகக்குறைந்தது A 2 B அல்லது  2AB பெற்றிருக்க வேண்டிய நிலைமையில் வெறுனே 3 S களை பெற்ற ஒருவரால் பணம் இருந்தால் மருத்துவம் கற்கும் நிலை தோன்றியுள்ளது.

2. இதன் காரணமாக தரமற்ற வைத்திய சமுதாயம்,நம்பகத்தன்மை குறைந்த சுகாதாரத்துறை உருவாகும் ஆபத்து உள்ளது.
3. இலங்கை அல்லாத வேறுநாடுகளில் மருத்துவம் பயிலும் ஒருவர் இலங்கையில் தொழில் புரிய வேண்டுமாயின் அரச மருத்துல சங்கத்தினால் நடாத்தப்படும் பரீட்சையில் சித்தி அடைய வேண்டும்.
ஆனால் மாலபே தனியார் கல்லூரி மாணவர்கள் இவ்வாறான பரீட்சை எழுதாமலேயே நேரடியாக தொழில் புரிய முடியும் என்பதனால் இவர்களது திறமையின்மை மூடி மறைக்கப்பட்டு மற்றும் நம்பகத்தன்மையற்ற வைத்தியம் மக்களை அடைய வழிகோலும்.

4. இவர்களுக்கென்று தனியான போதனா வைத்தியசாலை கட்டிகொடுக்கப்பட்ட போதிலும் தமது மருத்துவ பயிற்சியினை (clinical practice ) கொழும்பு தேசிய வைத்தியசாலை, ஹோமாகம,மஹரகம,அவிஸ்ஸாவலை, ஜெயவர்தனபுர,நாரஹேன்பிட்டிய ஆகிய அரச வைத்தியசாலைகளில் தொடர அனுமதி கேட்டு வழக்குதாக்கல் செய்திருப்பதனால் திறமை அடிப்படையில் தெரிவு செய்யப்பட்டு களனி,கொழும்பு,ஜெயவர்தனபுர பல்கலைக்கழங்களில் மருத்துவம் பயிலும் மாணவர்கள் எதிர்காலம் கேள்விக்குறி ஆகியுள்ளது.
5. பொதுவாக ஒரு மருத்துவ மாணவனுக்கு/வைத்தியருக்கு மிக அவசியமான பாடங்களான anatomy , physiology , biochemistry ஆகிய மூன்று பாடங்களும் முழுமையாக இரண்டு வருடங்கள் அக்குவேரு ஆணிவேராக கற்பிக்கப்படும்.ஆனால் இத்தனியார் கல்லூரியில் வெறும் ஆறே மாதங்கள் நுனிப்புல் மேய்வது போல் கற்பிக்கப்படுகிறது.
இதிலிருந்து இக் கல்லூரியிலிருந்து வெளியாகும் மாணவனின் தகைமை பற்றி பாமர மகனால் கூட கூறிவிடமுடியும்.

6. ஒவ்வொரு வருடமும் அரச பல்கலைக்கழகங்களிலிருநது சுமார் 1000 மருத்துவ பட்டதாரிகள் வெளியாகி மருத்துவ தொழில்பயிற்சியினை
(Internship) மேற்கொள்ளும் நிலையில் அவ்வெண்ணிக்கையினை 600 ஆக குறைத்து  தனியார் கல்லூரி மாணவர்கள் 400 களை திட்டமிட்டிருப்பதாக தெரியவருகினறது. இதன் திறமை அடிப்படையில் தெரிவு செய்யப்பட்டு கல்வி பயிலும் அரச மருத்துவ மாணவர்கள் பெரிதும் பாதிக்கப்படுவர்.
இவ்வாறாக அரச பல்கலைக்கழகங்களின் மருத்துவ மாணவர்களின் வளங்களை சூறையாடி ; திறமை குன்றிய , நம்பகத்தன்மை அற்ற சுகாதாரத்தை வழங்கும் வழங்கும் வைத்தியர்களை உருவாக்கும் பொறிமுறையை ஒழிக்க இச்சாத்வீகப் போராட்டத்தில் நாமும் இணைவோம்.

MB.முஹம்மது ஸில்மி,
மருத்துவ மாணவன்,
கிழக்கு பல்கலைக்கழகம்.





Read More