Featured Home (TOP)

Recent Comments

Tuesday, April 28, 2015

Unknown

18 இற்காக இழைத்த தவறுக்கு பிராயச்சித்தம் - இன்றைய தினகரன் பத்திாிகையின் ஆசிாியா் தலையங்கம்..!

அரசியலமைப்புக்கான 19 ஆவது திருத்தம்: பாரா ளுமன்றத்தில் இதனை சட்டமூலமாக சமர்ப் பித்திருந்தும் விவாதத்துக்கு எடுக்க முடியாமல் இழுபறிப்பட்ட நிலையில் நேற்று ஒருவாறாகக் கை கூடியி ருக்கிறது. திருமண பந்தம் தொடர்பான பேச்சுவார்த் தையின் போது இடைநடுவில் ஏற்படும் சலசலப்புகளுக்கும் இடையூறுகளுக்கும் ஒப்பானதாகவே இதனைப் பார்க்க முடிகிறது.


19ஆவது திருத்தம் தொடர்பான சட்ட மூலம் கடந்த மாதம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டிருந்தது. என்றாலும் இதன் இரண்டாவது வாசிப்பு மீதான விவாதம் எதிர்க் கட்சி களின் கடுமையான எதிர்ப்புகளால் தாமதப்படுத்தப்பட்டே வந்தது. விவாதத்துக்கான திகதிகள் மூன்று தடவைகள் தீர் மானிக்கப்பட்டும் இறுதி நேரத்தில் கைவிடப்பட்டே வந்தன.

ஐ. ம. சு. மு. அதில் அங்கம் வகிக்கும் ஸ்ரீல. சு. க. ஆகிய வற்றின் கடுமையான எதிர்ப்பினால் விவாதம் பின்போடப் பட்டு வந்தாலும் அவர்களின் இறுதி நேர மனமாற்றம் சாகதமான நிலையை ஏற்படுத்தியிருப்பது மக்கள் மத்தியில் பெருமகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்கள் மத்தியில் பேசி உண்மை நிலையை எடுத் துக் கூறியதனையடுத்தே இந்த மாற்றம் ஏற்பட்டது மட்டு மல்ல. சு. க. மத்திய குழுவும் இதற்கு முழுமையான சம் மதத்தைத் தெரிவித்துள்ளது.
19 ஆவது திருத்தச் சட்ட மூலத்தின் 2 ஆவது வாசிப்பு மீதான விவாதத்தை ஜனாதிபதி நேற்று சபையில் சமர்ப் பித்து உரையாற்றிய போது, இரு தரப்பு எம்.பிக்களும் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். உண்மையில் இலங்கைப் பாராளுமன்ற வரலாற்றில் இது முக்கிய நிகழ் வாகவே இருக்கிறது. நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியொருவர் தனது அதிகாரத்தைக் குறைத்து ஜன நாயகத்துக்கு பலம் சேர்ப்பதற்கு சட்ட மூலம் ஒன்றைச் சமர்ப்பித்து உரையாற்றுவது இதுவே முதற் தடவையாகும்.

19ஆவது திருத்தச் சட்டம் தேர்தல் காலத்தில் மக்களுக்கு வழங்கிய ஆணைக்கு ஏற்ப கொண்டுவரப்பட்டதாகும். நிறை வேற்று அதிகாரத்தை ஒழிப்பதும் தேர்தல் மறுசீரமைப்பை ஏற்படுத்துவதும் மக்களுக்குக் கொடுத்த வாக்குறுதிகளில் முக்கியமானதாகும். இதில் 20 ஆவது திருத்தமாகச் சமர்ப் பிக்கப்படவுள்ள தேர்தல் மறுசீரமைப்புக்கு அரச தரப்பு ஆதரவு வழங்குமெனத் தெரிவிக்கப்பட்ட உத்தரவாதத் துக்கு அமைய சுதந்திரக் கட்சி 19க்கு முழுமையான ஆத ரவு வழங்க முன்வந்திருக்கிறது.
அதேநேரம் தமிழ்த் தேசிய கூட்டமைப்பும், ஜே. வி. பி.யும் 19ஐ முழுமையாக ஆதரிப்பதோடு, நேற்று சபையில் பாராட்டும் தெரிவித்தன. இது நிறைவேற்று அதிகாரத்தை ஒழிக்க, 19 ஆவது சட்ட மூலம் முழுமையாக வழிவகுக் காவிட்டாலும் ஓரளவேனும் ஜனநாயகத்தை வலுப்படுத்த முயற்சித்துள்ளது என இரு கட்சிகளும் சபையில் தெரிவித் துள்ளன.

1978 ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட இந்த அரசியலமைப் புக்கு இதுவரை 18 திருத்தங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன. உலகில் ஓர் அரசியலமைப்புக்கு கூடுதல் திருத்தங்கள் கொண்டுவரப்பட்டிருப்பது இலங்கையில் தான் எனக் கூறப் படுகிறது. இந்தப் 18 திருத்தங்களிலும் 13 ஆவது 17ஆவது திருத்தங்களைத் தவிர (இரண்டையும் தவிர) ஏனைய திருத்தங்கள் யாவும் நிறைவேற்று அதிகாரத்துக்கு வலுச் சேர்ப்பதாகவே இருக்கின்றன.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் கொண்டு வரப்பட்ட 18 ஆவது திருத்தம் நிறைவேற்று அதிகாரத்தை மேலும் பலப்படுத்தி நாட்டில் சர்வாதிகாரத்தை ஏற்படுத்தி யது. ஜனநாயகம் என்ற போர்வையில் சர்வாதிகாரத்துக்கு மகுடம் சூட்டியதே 18 ஆவது திருத்தமாகும். நாட்டின் நிர் வாகத்துறையில் சகலவற்றிலும் நிறைவேற்று அதிகாரத்தின் கோரக் கரங்கள் புகுந்ததனால் நிர்வாகத்தின் சகல துறை களும் ஸ்தம்பித்தே இருந்தன. எங்கு பார்த்தாலும் அரசி யல் தலையீடுகளும் ஊழல், மோசடிகளுமே மலிந்து காணப்பட்டன. நீதித்துறையில் நிறைவேற்று அதிகாரம் தலையிட்டதனால் நாட்டில் ஏற்பட்ட அமைதியின்மையை நாம் சொல்லித்தான் நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அவசியமில்லை.

ஆகவே 19 ஆவது திருத்தம் என்பது கடந்த 37 ஆண்டுக ளாக இந்த நாட்டு மக்கள் அனுபவித்த சர்வாதிகார ஆளு மைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் சட்டமூலமாகும். அதேநேரம் நிறைவேற்று அதிகாரத்தின் கோரப்பிடியை தகர்த்து மக்களுக்கு பலம் சேர்க்கும் திருத்தம் என்பதை நாம் மனதில் கொள்ள வேண்டும். சுருங்கச் சொன்னால் 18 ஆவது திருத்தத்துக்கு ஆதரவு வழங்கி சர்வாதிகாரத்துக்கு வலுச்சேர்த்து வரலாற்று தவறிழைத்த அனைத்து பாராளு மன்ற உறுப்பினர்களுக்கும் பாவ மன்னிப்பு தேட நல்ல தொரு சந்தர்ப்பமாகும்.

19 ஆவது திருத்தம் மீதான வாக்கெடுப்பு இன்று மாலை நடைபெறுகிறது. ஜனநாயகத்தை நேசிக்கும் சகலரும் இந்த சட்டமூலத்திற்கு ஆதரவு வழங்குவார்கள் என்பதே எமது எதிர்பார்ப்பு.

இந்த சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த 19 ஆவது திருத்தத்தின் வெற்றி 225 பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் உரித்துடைய தாக இருக்கும்.
Read More
Unknown

சபையில் சிலருக்கு வயிற்றோட்டமாம்: ரணில் கூறுகின்றார்

பங்குச் சந்தை நிதி புரள்வு மோசடிகள் உட்பட பாரிய ஊழல் மோசடிகள் தொடர்பாக விசாரணைகளை ஆரம்பித்தவுடன் இன்று ஒரு சிலருக்கு வயிற்றோட்டம் ஆரம்பித்து விட்டது என இன்று பாராளுமன்றத்தில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் பந்துல குணவர்தன எம்.பி. இன்று கிளப்பிய சிறப்புரிமை பிரச்சினை தொடர்பான கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே பிரதமர் இதனைத் தெரிவித்தார்.
இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவுக்கு தனது பிரச்சினைகள் தொடர்பாக விளக்கமளிப்பதற்காக பந்துல குணவர்தன சென்றுள்ளார். அப்படியெனில் அது முடிந்தவுடன் அவர் அங்கிருந்து வெளியேறி இருக்க வேண்டும்.
Read More
Unknown

19ஆவது அரசியலமைப்பு திருத்தம் சற்றுமுன்னர் மூன்றிலிரண்டு பெரும்பான்மை வாக்குகளினால் நிறைவேற்றப்பட்டது.

19ஆவது அரசியலமைப்பு திருத்தம் சற்றுமுன்னர் மூன்றிலிரண்டு பெரும்பான்மை வாக்குகளினால் நிறைவேற்றப்பட்டது.
ஆதரவாக 215 வாக்குகளும் எதிராக 01 வாக்கும் அளிக்கப்பட்டதோடு 7 பேர் இன்று சமூகமளிக்கவில்லை. மேலும் ஒருவர் வாக்களிப்பதிலிருந்து விலகியிருந்தார்.
19ஆவது அரசியலமைப்பு திருத்தத்திற்கு பாராளுமன்ற உறுப்பினர் சரத்வீரசேகர எதிராக வாக்களித்ததோடு அஜித் குமார எம்.பி. வாக்கெடுப்பில் பங்கேற்கவில்லை.

Read More
Unknown

நேபாள மக்களுக்கு மனிதாபிமான உதவிகளை வழங்க முன்வாருங்கள் – ACJU


கடந்த இரு நாட்களாக நேபாளம், கட்மண்டூரில் ஏற்பட்ட திடீர் பூமியதிர்ச்சியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு முடியுமானவரையில் மனிதாபிமான உதவிகளை வழங்க முன்வாருமாறு அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா வேண்டிக் கொள்கின்றது.



குறித்த பூகம்பத்தினால்  இதுவரை மூவாயிரத்துக்கு மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதுடன் பல்லாயிரக்கனக்கானோர் தமது இருப்பிடங்களை இழந்து நிர்கதியாகியுள்ளதாகவும் உணவு மற்றும் மருத்துவ வசதிகளை பெற்றுக்கொள்ள முடியாமல் தவிப்பதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.



எனவே பாதிக்கப்பட்ட இம்மக்களுக்காக அனைவரும் தம்மாலான பங்களிப்புகளை வழங்க முன்வருமாறு அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா அனைவரையும் வேண்டிக்கொள்கின்றது.



ஜம்இய்யத்துல் உலமாவின் ஊடாக தமது உதவிகளை வழங்க முன்வருவோர் பின்வரும் கணக்கிலக்கத்தில் தங்களது உதவித் தொகைகளை வைப்புச் செய்யுமாறும் மேலதிக விபரங்களுக்கு அதனது சமூக சேவைக் குழு செயலாளர் அஷ்-ஷைக் அப்துல் முக்ஸித் அவர்களை 077 3575742 எனும் இலக்கத்தில் தொடர்புகொள்ளுமாறும் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா அன்புடன் வேண்டிக்கொள்கின்றது.



All Ceylon Jamiyyathul Ulama
A/C Number : 1320006768
Bank : Commercial Bank
Branch : Maradana



வஸ்ஸலாம்.
இவ்வண்ணம்
அஷ்-ஷைக் ஏ.எல். முஹம்மத் கலீல்
கௌரவப் பொருளாளர்
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா,
Read More