Featured Home (TOP)

Recent Comments

Friday, February 6, 2015

Unknown

19 நிமிடங்கள் மஹிந்த என்னை திட்டித் தீர்த்தார் : சந்திரிகா

கொழும்பு - வாழ்த்­து­வ­தற்­காக தொலை­பேசி அழைப்பை எடுத்த போது முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ 19 நிமி­டங்கள் தொடர்ச்­சி­யாக திட்டித் தீர்த்ததாக சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார்.




ஊட­க­மொன்­றிற்கு வழங்­கிய செவ்­வி­யி­லேயே முன்னாள் ஜனா­தி­பதி சந்­தி­ரிகா பண்­டா­ர­நா­யக்க இவ்­வாறு தெரி­வித்­துள்ளார்.

சந்­தி­ரிகா பண்­டா­ர­நா­யக்க பத­வி­யி­லி­ருந்து ஓய்வு பெறும் சந்­தர்ப்­பத்தில் அடுத்த ஜனா­தி­பதி வேட்­பா­ள­ராக மஹிந்த ராஜ­பக்­ஷவை நிறுத்­தி­யி­ருந்­தமை குறிப்­பி­டத்­தக்­கது.

அவர் மேலும் தெரிவித்திருப்பதாவது;

அப்­போ­தி­ருந்த 61 அரச கட்சி உறுப்­பி­னர்­களில் 56 பேர் மஹிந்த ராஜ­பக்ஷவை ஜனா­தி­பதி வேட்­பா­ள­ராக நிறுத்த வேண்டாம். அவர் கட்சி தலை­மைத்­து­வத்­திற்கு பொருத்­த­மற்­றவர் என தெரி­வித்­தி­ருந்­தனர்.

எனினும் அவர் தனது தவ­று­களை உணர்ந்து மக்­க­ளுக்கு நல்­லாட்சி வழங்­குவார் எனும் நம்­பிக்­கையில் நானும், இன்னும் மூவரும் அவரை ஜனா­தி­பதி வேட்­பா­ள­ராக நிய­மித்தோம்.

ஆனால் நான் கட்­சியின் மூத்த உறுப்­பி­னர்­களின் கருத்­திற்கு முக்­கி­யத்­துவம் அளிக்­கா­ததை கூட அவர் பொருட்­ப­டுத்­தாமல் அப்­போ­தி­ருந்த எதிர்க்­கட்சி தலைவர் ரணில் விக்­ர­ம­சிங்­க­வுடன் இணைந்து கொண்டு எனக்கு எதி­ராக மேடை பேச்­சுக்­களை நடத்­து­வது உள்­ளிட்ட பல்­வேறு விட­யங்­களில் ஈடு­பட்டார்.

இந்­நி­லையில் அவ­ருக்கு ஒத்­து­ழைப்பு வழங்­கிய ரணில் விக்­கிர­ம­சிங்­க­விடம் அவ­ரது கட்­சி­யி­லுள்ள 23 முக்­கிய உறுப்­பி­னர்­களை தான் பத­விக்கு வந்­ததன் பின்னர் தனது கட்­சிக்கு அழைத்து கொள்­கின்றேன் என வாக்­கு­று­தி­ய­ளித்­தி­ருந்தார்.

எனினும் அவரால் அந்த வாக்­கு­று­தியை செயற்­ப­டுத்த முடி­யாமல் போன நிலையில் அறு­வ­ருக்கு மாத்­திரம் தனது கட்­சியில் இடங்­கொ­டுத்தார்.

அவரின் இந்­ந­ட­வ­டிக்­கை­களை நான் அறிந்­தி­ருந்தும் பழைய விட­யங்­களை பெரி­து­ப­டுத்தக் கூடாது எனும் கார­ணத்­தினால் அவர் ஜனா­தி­ப­தி­யாக பொறுப்­பேற்­றதன் பின்னர் அவ­ருக்கு வாழ்த்து தெரி­விப்­ப­தற்­காக தொலை­பேசி அழைப்­பொன்றை விடுத்தேன்.

அதன் போது அவர் என்னை 19 நிமி­டங்கள் தொடர்ச்­சி­யாக தகாத வார்த்­தை­க­ளினால் திட்டித் தீர்த்தார். நான் அமை­தி­யாக அவர் கூறி­ய­வற்­றை­யெல்லாம் கேட்டு விட்டு குறிப்­பிட்ட சிலர் மாத்­தி­ர­மே­அ­றிந்த அவரின் வாழ்க்கை ர­க­சி­யத்தை கூறினேன். உடனே அவர் தொலை­பேசி அழைப்பை துண்­டித்து விட்டார்.

பின்னர் மஹிந்த என்னை சிறிது சிறி­தாக பழி­வாங்­கினார், என்னை உத்­தி­யோ­க­பூர்வ இல்­லத்­தி­லி­ருந்து வெளி­யேற்­று­வ­தற்­காக எனக்கு எதி­ராக வழக்கும் தொடர்ந்து என்னை மிகவும் கேவ­லப்­ப­டுத்­தினார், எனினும் அவரால் அந்த வீட்டை பறிக்க முடி­யாது போய்­விட்­டது.

இந்­நி­லையில் கடந்த 9 வரு­டங்­க­ளாக அவர் நடத்­திய அர­சியல் சீர­ழி­வு­களை தாங்கிக் கொள்ள முடி­யாமல் பல்­வேறு தரப்­பினர் என்னை மீண்டும் அரசியலுக்கு வருமாறு வற்புறுத்தினர்.

எனினும் மீண்டும் ஒருமுறை நான் அரசியலுக்கு வர விரும்பாததினால் இந்நாட்டை கட்டியெழுப்ப சிறந்த தலைமைத்துவம் ஒன்று வேண்டும் என தீர்மானித்து அதற்கு ஏற்றாற் போல் தற்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை நியமித்தேன் என்றார்.

நன்றி - வீரகேசரி

Unknown

About Unknown -

Author Description here.. Nulla sagittis convallis. Curabitur consequat. Quisque metus enim, venenatis fermentum, mollis in, porta et, nibh. Duis vulputate elit in elit. Mauris dictum libero id justo.

Subscribe to this Blog via Email :