Featured Home (TOP)

Recent Comments

Friday, February 27, 2015

Unknown

ஜனாதிபதி மைத்திரிபால 3 ஆம் திகதி யாழ்ப்பாணத்திற்கு வருகை!

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எதிர்வரும் 3 ஆம் திகதி யாழ்ப்பாணத்திற்கு வருகை தரவுள்ளார். யாழ்.மாவட்ட செயலகத்தில், அவரது தலைமையில் வடக்கு மாகாண ஒருங்கிணைப்புக்குழுக்கூட்டம் நடைபெறவுள்ளது.


அதில் வடக்கு மாகாண முதலமைச்சர் க.வி.விக்கினேஸ்வரன் பங்கேற்பதுடன் வடக்கு அமைச்சரவையும் பங்கெடுக்கவுள்ளது.  ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்ட பின்னர், முதன் முதலாக வடக்கு மாகாணத்துக்கு-யாழ்.மாவட்டத்துக்கு மைத்திரிபால சிறிசேன வரவுள்ளார்.

அவரின் தலைமையில் இடம்பெறும் மாகாண ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டத்தில் பல்வேறு முக்கிய தமிழ் மக்களின் அன்றாடப் பிரச்சினைகளுடன் 
தொடர்புடைய விடயங்கள் தொடர்பில் தீர்மானங்கள் எட்டப்படவுள்ளன.
ஜனாதிபதி மைத்திரிபால மற்றும் மத்திய அரசின் 9 அமைச்சர்கள் இந்தக் கலந்துரையாடலில் பங்கெடுக்கவுள்ளனர்.

Unknown

About Unknown -

Author Description here.. Nulla sagittis convallis. Curabitur consequat. Quisque metus enim, venenatis fermentum, mollis in, porta et, nibh. Duis vulputate elit in elit. Mauris dictum libero id justo.

Subscribe to this Blog via Email :