Featured Home (TOP)

Recent Comments

Thursday, February 26, 2015

Unknown

தேசிய ஔடத சட்டமூலம் மார்ச் 4 இல் சபையில் சமர்ப்பிக்கப்படும்

கொழும்பு - 
தேசிய ஔடத சட்­ட­மூலம் மார்ச் மாதம் 4ஆம் திகதி பாரா­ளு­மன்­றத்தில் சமர்ப்­பிக்­கப்­பட்டு உடனே நிறை­வேற்­றப்­படும் என சுகா­தார அமைச்சர் ராஜித சேனா­ரட்ன தெரி­வித்தார்.
ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன தலை­மை­யி­லி­ருந்த நாம் முன்­னைய அர­சி­லி­ருந்து வெளி­யேற சிறி­நீ­ரக நோய் தொடர்­பான பிரச்­சி­னையே மூலகா­ரணம் என்றும் அமைச்சர் சுட்­டிக்­காட்­டினார்.

சிறு­நீ­ரக நோய்­க­ளுக்கு உத­வி­ய­ளிக்கும் முக­மாக ஜனா­தி­ப­தியால் திறக்­கப்­பட்ட வங்கிக் கணக்­கிற்கு நிதி ஆதாரம் உத­வி­யோ­ருக்கு கௌர­வ­ம­ளிக்கும் முக­மாக நேற்று காலி முகத்­திடல் ஹோல்பேஸ் ஹோட்­டலில் இடம்­பெற்ற வைப­வத்தின் போதே அமைச்சர் இவ்­வாறு தெரி­வித்தார்.
அங்கு அவர் மேலும் கூறு­கையில்,
முன்­னைய அரசின் அமைச்­ச­ர­வையில் சிறு­நீ­ரக நோய் தொடர்பில் பல்­வேறு அறிக்­கை­களை முன்னாள் சுகா­தார அமைச்சர் மைத்­தி­ரி­பால சிறி­சேன, சம்­பிக்க ரண­வக்க, அத்­து­ர­லியே ரத்­தன தேரர் ஆகியோர் சமர்ப்­பித்த போதும் அப்­போ­தைய அரசு அதற்கு இட­ம­ளிக்­க­வில்லை.
அதே­போன்று இந்த சிறு­நீ­ரக நோய்க்கு மூலகா­ர­ண­மாக கரு­தப்­படும் தர­மற்ற இர­சா­யன உரம் தொடர்பில் முன்னாள் ஜனா­தி­ப­தி­யிடம் முறை­யிட்­ட­போது அவர் அதனை கண்­டு­கொள்­ள­வில்லை. அப்­போது சர்­வா­தி­கா­ர­மிக்க குடும்ப ஆட்­சியே நில­வி­யது.
இது­போன்ற தேசிய ஔடத சட்­ட­மூ­லத்­திற்கு புகைத்தல் உருவ எச்­ச­ரிக்­கையும் நடந்­தது. இந்­நி­லையில் மார்ச் மாதம் 4ஆம் திகதி தேசிய ஔடத சட்­ட­மூலம் பாரா­ளு­மன்­றத்தில் சமர்ப்­பித்து உட­ன­டி­யாக அதனை நிறை­வேற்­றுவோம். சேனக பிபிலே எனது குருவாவார். அவரது கொள்கையே ஔடத சட்டமூலமாகும் என்றார்.
Source - Virakesary

Unknown

About Unknown -

Author Description here.. Nulla sagittis convallis. Curabitur consequat. Quisque metus enim, venenatis fermentum, mollis in, porta et, nibh. Duis vulputate elit in elit. Mauris dictum libero id justo.

Subscribe to this Blog via Email :