Featured Home (TOP)

Recent Comments

Thursday, February 12, 2015

Unknown

‘குடிநீருக்கான எமது உரிமையைப் பாதுகாப்போம்’ கவனயீர்ப்பு நிகழ்வு

யாழ் குடாநாட்டின் சுன்னாகம் உள்ளிட்ட  வலிகாமம் பகுதி நிலத்தடி நீரில் எண்ணெய்க்கழிவுகள் கலப்பதால் மக்கள் குடிநீரைப் பெற்றுக் கொள்வதற்கான அச்சுறுத்தலுக்கு தீர்வினை  வலியுறுத்தி எதிர்வரும் 15 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணி முதல் 11 மணிவரை  கொழும்பு 06, வெள்ளவத்தையில்  (கொமர்ஷியல் வங்கிக்கு அருகில்) கவனயீர்ப்பு நிகழ்வு நடைபெறவுள்ளது.


நிலத்தடி நீரை மாத்திரமே குடிநீர் உள்ளிட்ட அனைத்து அத்தியாவசிய தேவைகளுக்குமான நீராதாரமாக கொண்டுள்ள யாழ் குடாநாட்டின் நீர் வளத்தை மாசுபடாது பாதுகாப்பது அவசியமானது.

அதுபோல, எண்ணெய்கழிவுகளினால் மாசடைந்துள்ள நிலத்தடி நீரினை விரைவாக சுத்தப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட வேண்டும். இல்லாது போனால், நிலத்தடி நீர் மாசடைதலின் வேகம் இன்னமும் அதிகரிக்கலாம் என்று சூழலியலாளர்களும், துறைசார் நிபுணர்களும் எச்சரித்துள்ளனர்.

Courtesy - Virekesary 

Unknown

About Unknown -

Author Description here.. Nulla sagittis convallis. Curabitur consequat. Quisque metus enim, venenatis fermentum, mollis in, porta et, nibh. Duis vulputate elit in elit. Mauris dictum libero id justo.

Subscribe to this Blog via Email :