Featured Home (TOP)

Recent Comments

Sunday, February 22, 2015

Unknown

பொது தேர்தலை இலக்கு வைத்து அம்பாறையில் தகவல் திரட்டும் பணி -மக்கள் அதிருப்தி

கொழும்பு -
அம்பாறை மாவட்டத்தில் நடைபெறவுள்ள பொது தேர்தலை இலக்கு வைத்து இங்குள்ள தமிழ்க்கிராமங்களில் தலைமறைவாக இருந்த பலர் சமூக சமயப்பணிகளிலும் மற்றும் தகவல்களை திரட்டும் பணியிலும் ஈடுபட்டு வருவதாக அப்பகுதி மக்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.
கடந்த காலங்களில் இம்மாவட்ட தமிழ் மக்கள் பல்வேறு வழிகளிலும் பாதிக்கப்பட்ட நிலையில் அவர்களுக்காக முன்னின்று குரல் கொடுக்காதவர்களும் இம்மக்களை நட்டாற்றில் விட்டு விட்டு வெளிநாடு சென்றவர்களும் தற்போது சமூகத்தின் மீது அக்கறையுள்ளவர்களாக காட்டி வருகின்றனர்.

இவை தவிர பிரதேச ரீதியாக காணாமல் போனவர்கள் மற்றும் அனாதைகள் வறுமைக்கோட்டிற்கு உட்பட்டவர்களினது பெயர் விபரங்கள் தகவல்களை சேகரிப்பதிலும் ஈடுபட்டுள்ளதை காணக்கூடியதாகவுள்ளது.
சிலர் மாணவர்களுக்கு இலவச அப்பியாசக் கொப்பிகளையும் வழங்கி வருவதாக சுட்டிக்காட்டியுள்ளனர்.
அம்பாறை தமிழ் மக்களின் சுகதுக்கங்களில் பங்குகொள்ளாத பலரும் இம்முறை தமிழ்தேசியக்கூட்டமைப்பின் சார்பில் போட்டியிடுவதற்கு பிரதேசங்களிலுள்ள முக்கிய பிரமுகர்களை சந்தித்து வருவதும் குறிப்பிடத்தக்கது.

Unknown

About Unknown -

Author Description here.. Nulla sagittis convallis. Curabitur consequat. Quisque metus enim, venenatis fermentum, mollis in, porta et, nibh. Duis vulputate elit in elit. Mauris dictum libero id justo.

Subscribe to this Blog via Email :