Featured Home (TOP)

Recent Comments

Wednesday, February 18, 2015

Unknown

இன்றைய "மஹிந்தவை பிரதமராக்குவோம்" கூட்டம் பற்றிய அவதானங்கள்:


முஜீப் இப்றாஹீம்  -

நுகேகொடையில் இடம்பெற்ற இந்த கூட்டத்திற்கு பெருந்தொகையான மக்கள் வருகை தந்திருந்தனர்.

இதில் வழமைபோல வருவிக்கப்பட்ட ஒரு கூட்டம் இருந்ததா என்ற சந்தேகமும் இருந்தது. ஏனெனில் மஹிந்தவின் உருவப்படம் ஏந்திய நிறையப்பேரை காணமுடிந்தது. சாதாரணமாக கூட்டம் பார்க்க வரும் மக்கள் அவ்வாறு வருவதில்லை.


அது ஒரு திட்டமிட்டு வரவழைக்கப்பட்ட மக்கள் பகுதியே! அதுபோக சாதாரண மக்களும் பெருமளவில் இருந்தனர்.

58 லட்சம் வாக்குகளை பெற்ற ஒருவருக்கு பெளத்த மேலாதிக்கமிக்க நுகேகொடை போன்ற இடத்தில் இவ்வாறு கூட்டம் சேருவது ஆச்சரியமில்லை.

இன்றைய பிரதான பேச்சாளராகிய விமல் வீரவன்சவிற்கு வாய்க்கு அவல் கிடைத்தது போல், சிங்களவர்களை சூடாக்க சில சிறுபான்மை சார்நத விடயங்கள் உதவின.

சிவாஜிலிங்கத்தின் சிபாரிசின் பெயரில் வட மாகாண சபை நிறைவேற்றிய பிரேரணையினை ராணுவத்தை காட்டிக்கொடுக்கும் சதியென காட்டமாய் எடுத்துரைத்தார்.

வடக்கில் விடுவிக்கப்பட்ட நிலப்பரப்பில் இந்தியாவில் இருக்கும் இலங்கை அகதிகளோடு இந்திய உளவுப்படையும் குடியேறுமென பேரினவாதிகளை சூடேற்றினார்.

மனித உரிமைகள் பற்றிய விடயங்களை விசாரணைக்கு ஐ. நா தள்ளிப்போட்டமை அமெரிக்காவின் ஒரு "செட்டப் கேம்" என்றார்.

இவ்வாறு இனத்துவ அரசியலுக்கு மேலும் சார்பான பல விடயங்கள் அவரது உரையில் காணப்பட்டன.

கடந்த தேர்தலை விட எதிர்வரும் பொதுத்தேர்தல் கடும்  சவாலாக அமையுமென இன்றைய கூட்டம் கட்டியங்கூறுகிறது.

எதிரியை ஒருபோதும் அற்பமாக எண்ணலாகாது என்ற பாடத்தையும் அது கற்றுத்தந்துள்ளது!

Unknown

About Unknown -

Author Description here.. Nulla sagittis convallis. Curabitur consequat. Quisque metus enim, venenatis fermentum, mollis in, porta et, nibh. Duis vulputate elit in elit. Mauris dictum libero id justo.

Subscribe to this Blog via Email :