மினுவான்கொடை - தொடில்லகஹாவத்த பிரதேசத்தில் உள்ள பட்டாசு தொழிற்சாலை ஒன்றில் இன்று காலை தீ ஏற்பட்டுள்ளது.
குறித்த தீயினால் தொழிற்சாலை முற்றாக சேதமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த தொழிற்சாலைக்கு அருகில் இருந்த வீடுகள் சிலவற்றிற்கும் இதனால் பாதிப்பு ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
பொலிஸார் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
