Featured Home (TOP)

Recent Comments

Wednesday, February 18, 2015

Unknown

கொழும்பு துறைமுக நகரத்திட்டத்திற்கு அரசாங்கம் பச்சைக்கொடி

கொழும்பு - 

காலிமுகத்திடலில் சீன நிறுவனத்தினால் முன்னெடுக்கப்படும் கொழும்பு துறைமுக நகர நிர்மாணிப்பு பணிகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த திட்டம் சுற்றாடலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்ற அடிப்படையில் புதிய அரசாங்கம் அதனை ரத்து செய்ய தீர்மானித்திருந்தது. எனினும் குறித்த திட்டத்தை மீளாய்வு செய்ததன் அடிப்படையில் இலங்கை அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ அறிக்கை இன்று 18ஆம் திகதி வெளியாகும்.

  
ஏற்கனவே சீன நிறுவனம் குறித்த திட்டத்துக்காக அதிக நிதிகளை செலவழித்துள்ளது. கருங்கற்களை கொண்டு கடல் பிரதேசம் நிலப்பரப்பாக மாற்றப்பட்டு சுமார் 230 ஹெக்டேயர் நிலப்பரப்பில் இந்த கொழும்பு துறைமுக நகரம் அமைக்கப்படுகிறது. இதில் விளையாட்டு, பாதைகள், நீர், மின்சாரம் உட்பட்ட அனைத்து வசதிகளையும் கொண்ட குடியிருப்புக்களும் வர்த்தக நிலையங்களும் அமைக்கப்படவுள்ளன.

Unknown

About Unknown -

Author Description here.. Nulla sagittis convallis. Curabitur consequat. Quisque metus enim, venenatis fermentum, mollis in, porta et, nibh. Duis vulputate elit in elit. Mauris dictum libero id justo.

Subscribe to this Blog via Email :