கடந்த வரவு செலவுத் திட்டத்தில் குறைக்கப்பட்ட திருமண பதிவுக் கட்டணக் குறைப்பு நேற்று திங்கள் முதல்1000 ரூபாவாக குறைக்கப்பட்டுள்ளதாக கொழும்பு பதிவாளர் நாயகம் காரியாலய சிரேஷ்ட பிரதிப் பதிவாளர் நாயகம்ரி.எம். பிரேமசிரி தெரிவித்துள்ளார்.
இந்த கட்டணக் குறைப்பு தொடர்பில் நாட்டின் சகல பிரதேசங்களிலுமுள்ள பதிவாளர்களுக்கு இன்று (17)அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் அவர்மேலும் கூறியுள்ளார்.
இதன்படி, ஏற்கனவே அறிவிடப்பட்ட 5000 ரூபா திருமணப் பதிவுக் கட்டணம் தற்பொழுது 1000 ரூபாவாக குறைக்கப்பட்டுள்ளது.
இந்த கட்டணக் குறைப்பு அரசாங்கத்தினால் முன்வைக்கப்பட்ட இடைக்கால வரவுசெலவுத் திட்டத்தில் கடந்த ஜனவரி 19 ஆம் திகதி முன்வைக்கப்பட்ட போதிலும் இதுவரை நடைமுறைக்கு வரவில்லையென்பது குறிப்பிடத்தக்கது.
(ஜுனைட்.எம்.பஹ்த்)
(ஜுனைட்.எம்.பஹ்த்)
