Featured Home (TOP)

Recent Comments

Sunday, March 22, 2015

Unknown

ஜனா­தி­பதி செய­ல­கத்தில் சுகபோகங்களை அனுபவித்த 1,011 ஊழியர்களுக்கு கல்தா

கடந்த அரசால் முறை­யற்ற வகையில் சம்­பளம் மற்றும் வரப்­பி­ர­சா­தங்­களை வழங்கி ஜனா­தி­பதி செய­ல­கத்தில் பல்­வேறு பத­வி­களில் அமர்த்­தப்பட்டி­ருந்த 1,011 பேரை ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன கட­மை­யி­லி­ருந்து நீக்­கி­யுள்­ள­தாக சிங்­களப் பத்­தி­ரி­கை­யொன்று செய்தி வெளி­யிட்­டுள்­ளது.
முன்னாள் ஜனா­தி­ப­தியின் காலத்தில் இவ்­வாறு முறை­யற்ற அர­சியல் நிய­ம­னங்கள் வழங்­கப்­பட்­டதால், செய­ல­கத்தின் ஊழியர் எண்­ணிக்கை 1,565 ஆக அதி­க­ரித்து மேல­தி­க­மாக ஊழி­யர்கள் இருந்­த­தாக செய­லக பேச்­சாளர் ஒருவர் தெரி­வித்தார்.
இதன் கார­ண­மாக இந்த அர­சியல் நிய­ம­னங்கள் வழங்­கப்­பட்­ட­வர்­க­ளுக்கு சம்­பளம், எரி­பொருள், வாகனம், தொலை­பேசி ஆகிய பல்­வேறு வச­தி­களை ஏற்­ப­டுத்தி கொடுத்­ததால் ஜனா­தி­பதி செய­ல­கத்தின் செலவு வரை­மு­றை­யற்று அதி­க­ரித்­தி­ருந்­தது. தற்­போ­தைய ஜனா­தி­பதி இந்த ஊழியர் எண்­ணிக்­கையை 554 வரையில் குறைத்துள்ளார்.
இதனால் ஜனாதிபதி செயலகத்தின் செலவுகள் வெகுவாக குறைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. 

Source - Virakesary

Unknown

About Unknown -

Author Description here.. Nulla sagittis convallis. Curabitur consequat. Quisque metus enim, venenatis fermentum, mollis in, porta et, nibh. Duis vulputate elit in elit. Mauris dictum libero id justo.

Subscribe to this Blog via Email :