இவ்வருடத்தின் கடந்த இரண்டரை மாத காலத்துக்குள் நாடு முழுவதும் பரவியுள்ள டெங்கு நோயினால் 10325 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக தொற்று நோய் ஆய்வுப் பிரிவு தெரிவித்துள்ளது.
இவ்வருடத்தின் ஜனவரி முதலாம் திகதி முதல் மார்ச் 14 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் தான் இந்த நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர் .
இந்த நோயாளர்களில் அதிகமானவர்கள் மேல் மாகாணத்திலேயே காணப்படுவதாகவும் அப்பிரிவு மேலும் குறிப்பிட்டுள்ளது.
(ஜுனைட்.எம்.பஹ்த் )
