Featured Home (TOP)

Recent Comments

Monday, March 16, 2015

Unknown

பகிரங்க சேவை ஒய்வூதியர்களின் நம்பிக்கை நிதியத்தின் காத்தான்குடி பிரதேச கிளையின் 2015-2016 வருடாந்த பொதுச் சபைக் கூட்டம்

பழுலுல்லாஹ் பர்ஹான்)

பகிரங்க சேவை ஒய்வூதியர்களின் நம்பிக்கை நிதியத்தின் காத்தான்குடி பிரதேச கிளையின் 2015-2016 வருடாந்த பொதுச் சபைக் கூட்டம் எதிர்வரும் 19-03-2015 வியாழக்கிழமை காத்தான்குடி பிரதேச செயலக மகாநாட்டு மண்டபத்தில் பகிரங்க சேவை ஒய்வூதியர்களின் நம்பிக்கை நிதியத்தின் காத்தான்குடி கிளையின் தலைவர்  கே.எம்.ஏ.அஸீஸ் ஜேபி தலைமையில் நடைபெறவுள்ளதாக நிதியத்தின் செயலாளர் ஏ.எல்.எம்.சித்தீக் ஜேபி தெரிவித்தார்.

இப் பொதுச் சபைக் கூட்டத்தில் பிரதம அதிதியாக காத்தான்குடி பிரதேச செயலாளர் எஸ்.எச்.முஸம்மில் கலந்து கொள்ளவுள்ளதோடு கௌரவ மற்றும் சிறப்பு அதிதிகளாக காத்தான்குடி பிரதேச உதவிப் பிரதேச செயலாளர் ஏ.சீ.அஹமட் அப்கர், காத்தான்குடி பிரதேச கணக்காளர் எஸ்.ரூபாகரன்,மாவட்ட ஒய்வூதியர்களின் நம்பிக்கை நிதியத்தின் தலைவர் சொலமன் சுப்பிரமணியம் ஜேபி , நிதியத்தின் செயலாளர் ஏ.எம்.அப்துல் காதர் ஜேபி ஆகியோர் கலந்து கொள்ளவுள்ளனர்.

ஓய்வூதியம் பெறும் ஓய்வூதியக் காரர்களின் நலனைக் கருத்தில் கொண்டு இலங்கை பாராளுமன்ற 1999ம் வருட 40ம் இலக்க சட்டத்தின் பிரகாரம் ஆரம்பிக்கப்பட்ட மேற்படி நம்பிக்கை நிதியத்தின் 14ம் வருட வருடாந்த பொதுச் சபைக் கூட்டத்திற்கு நிதிய அங்கத்தவர்கள் அனைவரும் வருகை தந்து பயன் பெறுமாறு பகிரங்க சேவை ஒய்வூதியர்களின் நம்பிக்கை நிதியத்தின் காத்தான்குடி பிரதேச கிளை வேண்;டுகோள் விடுக்கின்றது.

Unknown

About Unknown -

Author Description here.. Nulla sagittis convallis. Curabitur consequat. Quisque metus enim, venenatis fermentum, mollis in, porta et, nibh. Duis vulputate elit in elit. Mauris dictum libero id justo.

Subscribe to this Blog via Email :