Featured Home (TOP)

Recent Comments

Thursday, March 19, 2015

Unknown

தேர்தல் முறை மாற்றம் 22 இல் இறுதி முடிவு

விகி­தா­சாரத் தேர்தல் முறை­மையை மாற்­று­வது தொடர்­பி­லான இறுதித் தீர்­மானம் எடுக்கும் விஷேட கட்சித் தலை­வர்கள் கூட்டம் எதிர்­வரும் 22ஆம் திகதி நடை­பெ­ற­வுள்­ளது. இதன்­போது அனைத்து கட்­சி­களும் ஏற்­றுக்­கொள்­ளக்­கூ­டிய தீர்வு கிட்டும் என ஐ.தே.க ஊடக பேச்­சா­ளரும் அமைச்­ச­ரு­மான அகில விராஜ் காரி­ய­வசம் தெரி­வித்தார்.
மேலும் 100 நாள் வேலைத்­திட்­டத்­தினை முன்­னெ­டுக்­கும் ­போது ஸ்ரீலங்கா சுதந்­திர கட்­சியின் நிகழ்ச்சி நிரலை செயற்­ப­டுத்த நாம் தயா­ரில்லை. அத்­தோடு தேர்தல் முறை­மையில் மாற்றம் ஏற்­ப­டுத்த வேண்டும் என்­பதே ஐ.தே.க வின் நிலைப்­பா­டாகும். எனினும் பெரும்­பான்மை இல்­லாத பாரா­ளு­மன்­றத்­துடன் பய­ணிக்க முடி­யாது. இதனால் பாரிய சிக்­கல்கள் உள்­ள­தா­கவும் அவர் சுட்­டிக்­காட்­டினார்.
ஐ.தே.க தலை­மை­ய­க­மான சிறி­கொத்­தாவில் நேற்
று இடம்­பெற்ற ஊட­க­வி­ய­லாளர் மாநாட்டின் போதே அவர் இவ்­வாறு தெரி­வித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் கருத்து தெரி­விக்­கையில்,
அர­சி­ய­ல­மைப்பின் 19 ஆவது திருத்த சட்டம் விரைவில் பாரா­ளு­மன்­றத்தில் சமர்­பிக்­கப்­ப­ட­வுள்­ளது. இத­னூ­டாக நிறை­வேற்று அதி­காரம் கொண்ட ஜனா­தி­ப­தியின் வரம்பு மீறிய அதி­கா­ரங்கள் நீக்­கப்­படும். இதனை பாரா­ளு­மன்றில் சமர்­பித்து நிறை­வேற்­றுவோம்.
எனினும், தேர்தல் முறைமை மாற்றம் தொடர்பில் பெரும் சிக்கல் ஏற்­பட்­டுள்­ளது. விகி­தா­சார தேர்தல் முறை­மையை மாற்றி அமைப்­பதே ஐக்­கிய தேசி­யக்­கட்­சியின் நிலைப்­பா­டாகும். இதற்கு மாற்­றீ­டாக தொகு­தி­வா­ரியும் விகி­தா­சார முறை­மையும் கலந்த ஒரு தேர்தல் முறை­மை­யையே ஏற்­ப­டுத்த வேண்­டி­யுள்­ளது. இதற்கு ஐ.தே.க ஒரு­போதும் எதிர்ப்­பினை வெளிப்­ப­டுத்­தாது.
எனினும் தேர்தல் ஆணை­யாளர் மஹிந்த தேசப்­பி­ரி­யவின் ஆலோ­ச­னையின் பிர­காரம் எல்லை நிர்­ணயம் தொடர்­பி­லான ஆய்­விற்கு மாத்­திரம் மூன்று மாத­காலம் தேவைப்­படும் என்­பதே சிக்­க­லாக உள்­ளது.
பெரும்­பான்மை பலம் இல்­லாத பாரா­ளு­மன்­றமே தற்­போது உள்­ளது. இந்த பாரா­ளு­மன்­றத்தில் பெரும்­பான்மை கட்­ட­மைக்­கப்­ப­ட­வேண்டும். இது இவ்­வா­றிக்­கையில் மக்­க­ளுக்கு வாக்­கு­றுதி அளித்­த­மைக்கு அமை­வாக 100 நாள் வேலைத்­திட்டம் அவ­ச­ர­மாக நிறை­வேற்ற வேண்­டி­யுள்­ளது. பல்­வேறு வாக்­கு­று­தி­களை நிறை­வேற்றி உள்ளோம். தற்­போது தகவல் அறியும் சட்ட மூலத்­தினை சமர்­பிக்­க­வேண்­டி­யுள்­ளது.
அத்­தோடு மக்­க­ளுக்கு வாக்­கு­றுதி அளித்­த­மைக்கு அமை­வாக பாரா­ளு­மன்றம் கலைக்­கப்­ப­ட­வேண்டும். எவ்­வா­றா­யினும் இது தொடர்­பி­லான இறுதி தீர்­மானம் எடுக்கும் முக்­கிய கட்சி தலை­வர்கள் கூட்டம் எதிர்­வரும் 22 ஆம் திகதி ஞாயிற்­றுக்­கி­ழமை கூட­வுள்­ளது. இதன்­போது இணக்கம் இனக்­கப்­பாட்­டிற்கு வரமுடியும் என்றார்.
virakesary

Unknown

About Unknown -

Author Description here.. Nulla sagittis convallis. Curabitur consequat. Quisque metus enim, venenatis fermentum, mollis in, porta et, nibh. Duis vulputate elit in elit. Mauris dictum libero id justo.

Subscribe to this Blog via Email :