Featured Home (TOP)

Recent Comments

Saturday, March 21, 2015

Unknown

35 இலட்சம் ரூபாய் நிதி உதவியில் மஸ்ஜிதுல் ஜன்னத் பள்ளிவாயலில் - புதிய மேல்மாடி கட்டிட திறப்பு விழா

(பழுலுல்லாஹ் பர்ஹான்)

காத்தான்குடி-06 பாவா லேனிலுள்ள மஸ்ஜிதுல் ஜன்னத் பள்ளிவாயலில் ஸ்ரீலங்கா ஹிறா பவுண்டேஷன் நிறுவனத்தின் 35 இலட்சம் ரூபாய் நிதி உதவியில் நிர்மாணிக்கப்பட்ட புதிய மேல்மாடி கட்டிட திறப்பு விழா 21-03-2015 இன்று சனிக்கிழமை இடம்பெற்றது.

மஸ்ஜிதுல் ஜன்னத் பள்ளிவாயலின் தலைவர் ஏ.எல்.ஏ.அஸீஸ் தலைமையில் இடம்பெற்ற இத் திறப்பு விழாவில் பிரதம அதிதியாக ஸ்ரீலங்கா ஹிறா பவுண்டேஷன் நிறுவனத்தின் பணிப்பாளரும்,பாராளுமன்ற உறுப்பினருமான எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் கலந்து கொண்டார்.

இதன் போது அதிதிகளினால் மேற்படி பள்ளிவாயல் கட்டிடத்தின் நினைவு கல் திரை நீக்கம் செய்து வைக்கப்பட்டு புதிய மேல்மாடி கட்டிடம் உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட்டது.

இப் புதிய மேல்மாடி கட்டிட திறப்பு விழாவில் ஸ்ரீலங்கா ஹிறா பவுண்டேஷன் நிறுவனத்தின் செயலாளர் நாயகம் அஷ்ஷெய்க் ஏ.எல்.எம்.மும்தாஸ் (மதனி),காத்தான்குடி ஜம்இய்யதுல் உலமாவின் தலைவரும், காழி நீதிபதியுமான மௌலவி எஸ்.எம்.அலியார் (பலாஹி),காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்கள் சம்மேளனத்தின் தலைவர் எம்.ஐ.எம்.சுபைர், முஸ்லிம் கலாசார உத்தியோகத்தர் அஷ்ஷெய்க் ஜூனைட் நளீமி உட்பட காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்கள் சம்மேளனம் மற்றும் ஜம்இய்யதுல் உலமாவின் பிரதிநிதிகள்  ,உலமாக்கள் ,ஊர் பிரமுகர்கள்,   மஸ்ஜிதுல் ஜன்னத் பள்ளிவாயல் நிருவாகிகள் உட்பட மஹல்லாவாசிகள் பலரும் கலந்து கொண்டனர்.

குறித்த பள்ளிவாயலின் புதிய மேல்மாடி கட்டிடம் மத்ரசா நடாத்தும் நோக்கிலும் நோன்பு காலத்தில் பெண்கள் தராவிஹ் தொழுகை நிறைவேற்றும் நோக்கிலும் அமைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.



















Unknown

About Unknown -

Author Description here.. Nulla sagittis convallis. Curabitur consequat. Quisque metus enim, venenatis fermentum, mollis in, porta et, nibh. Duis vulputate elit in elit. Mauris dictum libero id justo.

Subscribe to this Blog via Email :