Featured Home (TOP)

Recent Comments

Wednesday, March 25, 2015

Unknown

முஸ்லிம்களுக்கு இடையூறு விளைவித்தோமா? நிரூபித்தால் ஜனாதிபதி வீட்டில் எடுபிடி வேலை செய்கின்றோம்: பொதுபல சேனா

பொது­பல சேனா அமைப்பு நாட்டில் வாழும் முஸ்­லிம்­க­ளுக்கு இடை­யூறு விளை­வித்­த­தாக ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன லண்­டனில் குற்­றம்­சு­மத்­தி­யுள்ள நிலையில், இதனை பாது­காப்பு அமைச்சர் என்ற வகையில் அவர் நிரூ­பித்து காட்­டினால் எமது அமைப்பை கலைத்து விட்டு நான் ஜனா­தி­பதி வீட்டில் எடுபிடி வேலை செய்ய தயா­ராக உள்ளேன். அதே­போன்று குறித்த குற்­றச்­சாட்டை நிரூ­பிக்க முடி­யா­விடின் ஜனா­தி­பதி, விகா­ரைக்கு வந்து எடு­பிடி வேலை­களை செய்ய வர வேண்டும் என பொதுபலசேனா அமைப்பின் பொது செய­லாளர் கல­கொட அத்தே ஞான­சார தேரர் ஜனா­தி­ப­திக்கு சவால் விடுத்தார்.

இதே­வேளை நாட்டில் எல்லா பாகங்­க­ளிலும் சிங்­க­ள­வர்கள் மீள்­கு­டி­யேற முடியும். அதனை எதர்ப்­ப­தற்கு அமைச்சர் ரிஷாத் பதி­யுதீன் யார்? தற்­போது முஸ்லிம் அர­சி­யல்­வா­திகள் மிகவும் மோச­மாக செயற்­ப­டு­கின்­றனர். எம்­முடன் விளை­யாட வேண்டாம். நாட்டின் பெரும்­பான்மை இனத்­த­வர்­களை சினம் கொள்ள செய்­ய­வேண்டாம். அவ்­வா­றாயின் எதிர்­காலம் மிகவும் மோச­மாக அமையும் எனவும் அவர் எச்­ச­ரித்தார்.
கிரு­லப்­ப­னை­யி­லுள்ள அந்த அமைப்பின் காரி­யா­ல­யத்தில்   இடம்­பெற்ற ஊட­க­வி­ய­லாளர் மாநாட்டின் போதே தேரர் இவ்­வாறு தெரி­வித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் கருத்து தெரி­விக்­கையில்,

யுத்தம் இடம்­பெற்ற பிற்­பாடு வடக்கில் தமிழ் ,முஸ்­லிம்­களை மீள்­கு­டி­யேற்­றிய போதும் சிங்­க­ள­வர்­களை மீள்­கு­டி­யேற்­று­வ­தற்­கான எந்த நட­வ­டிக்­கையும் எடுக்­க­வில்லை. பல்­வேறு அழுத்­தங்­களின் பிற்­பாடு வெலி­ஓ­யாவில் சிங்­க­ள­வர்கள் 5000 பேர் மீள்­கு­டி­யேற்­றப்­பட்­டனர். எனினும் அமைச்சர் ரிஷாத் பதி­யுதீன் சிங்­க­ள­வர்­களை மீள­்கு­டி­யேற்­றிய அதி­கா­ரி­களை மிரட்­டி­யுள்ளார். இதற்கு எதிர்ப்பும் வெளியூட்­டுள்ளார்.
நாட்டில் பெரும்­பான்மை இனத்­த­வ­ரான சிங்­க­ள­வர்கள் நாட்டில் அனைத்து பாகங்­க­ளிலும் குடி­யேற முடியும். அதனை எவ­ராலும் கேள்­விக்கு உட்­ப­டுத்­த­மு­டி­யாது. எனவே வெலி­ஓயா குடி­யேற்றம் தொடர்பில் எதி­ர்ப்­பினை வெளியி­டு­வ­தற்கு அமைச்சர் ரிஷாத் பதி­யுதீன் யார்?அவ­ருக்கு என்ன தகுதி உள்­ளது. சிறுப்­பான்மை மக்கள் அனைத்து சுதந்­தி­ரங்­க­ளையும் பெற்று வாழ­வேண்டும். பௌத்­த­ர­்களின் உரி­மைகள் கிடப்பில் போடப்­பட்டால் அது தவ­றில்லை. இதுவா நல்­லாட்சி.
அத்­தோடு அமைச்சர் ரிஷாத் பதி­யுதீன் முஸ்­லிம்­களை மீள்­கு­டி­யேற்­றிய போது பல்­வேறு ஊழல் மோச­டி­களை செய்­துள்ளார். இது தொடர்பில் இலஞ்ச, ஊழல் விசா­ரணை ஆணைக்­கு­ழுவில் முறைப்­பாடு செய்­யப்­பட்­டுள்­ளது. குறித்த விசா­ர­ணையை உரிய முறையில் முன்­னெ­டுத்து அமைச்சர் ரிஷாத் பதி­யு­தீ­னுக்கு எதி­ராக சட்ட நட­வ­டிக்கை எடுக்­கப்­பட வேண்டும்.
இதே­வேளை தற்­போது முஸ்லிம் அமைச்­சர்கள் மிகவும் மோச­மான முறையில் செயற்­பட்டு வரு­கின்­றனர். தமது இஷ்­டப்­படி துள்ளுகின்­றனர். எனவே குறித்த அமைச்­சர்­க­ளுக்கு எச்­ச­ரிக்கை விடுக்­கிறோம். நாட்டின் பெரும்­பான்மை இனத்­த­வர்­க­ளுடன் விளை­யாட வேண்டாம். எம்­முடன் விளை­யா­டினால் பாரிய விளைவை எதிர்­கா­லத்தில் சந்­திக்க நேரிடும். எமது அலை இன்னும் ஓய­வில்லை.

மேலும் அண்­மையில் பிரித்­தா­னி­யா­விற்கு விஜயம் மேற்­கொண்ட ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன, லண்டன் நகரில் இடம்­பெற்ற நிகழ்வின் போது நாட்டில் வாழும் சிறு­பான்மை இனத்­த­வர்­க­ளான முஸ்­லி­ம்­க­ளுக்கு எதி­ராக பொது பல சேனா அமைப்பு செயற்­பட்­ட­தா­கவும் இதன் கார­ண­மாக முஸ்­லிம்­களின் வணக்க வழி­பா­டு­க­ளுக்கு இடை­யூறு விளை­விக்­கப்­பட்­ட­தா­கவும் கடு­மை­யாக எம்மை சாடி­யுள்ளார் என்றார்.
Source - VK

Unknown

About Unknown -

Author Description here.. Nulla sagittis convallis. Curabitur consequat. Quisque metus enim, venenatis fermentum, mollis in, porta et, nibh. Duis vulputate elit in elit. Mauris dictum libero id justo.

Subscribe to this Blog via Email :