பூச்சியத்துடன் ஆட்டமிழப்பதிலிருந்து நூலிழையில் தப்பினார் பாகிஸ்தான் அணித்தலைவர் மிஸ்பா-உல்-ஹக். விக்கெட்டில் பந்து பட்டும் பெயில்ஸ் விழாததால் அதிர்ஷ்டவசமாக மிஸ்பா தப்பினார்.
அவுஸ்திரேலியாவுக்கு எதிரான இன்றைய போட்டியில் பாகிஸ்தான் அணியின் முதல் 2 விக்கெட்டுக்களும் 24 ஓட்டங்களுக்குள் வீழ்த்தப்பட களமிறங்கிய மிஸ்பா உல் ஹக் ஓட்டம் ஏதும் எடுக்காத நிலையில், ஹசல்வுட் பந்தை சந்தித்தார்.
அப்போது மிஸ்பாவின் துடுப்பில் படாத பந்து, மிஸ்பாவின் தொடையில் பட்டதுடன், விக்கெட்டிலும் பட்டு சென்றது. இதனால் விக்கெட்டில் பொருத்தப்பட்டுள்ள மின் விளக்குகள் ஔிர்ந்தன.
இதன்போது இதனை ஆட்டமிழப்பென எண்ணிய அவுஸ்திரேலிய அணி வீரர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். எனினும் பந்து பட்டும் விக்கெட் பெயில்ஸ் விழாததைக் கண்டு ஆச்சரியப்பட்டனர்.
news1st
news1st
