நாரஹேன்பிட்ட பொருளாதார மத்திய நிலையத்தில் ஏற்பட்ட தீயினால் மூன்று வர்த்தக நிலையங்களுக்கு சேதம் ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
குறித்த சம்பவம் இன்று காலை இடம்பெற்றுள்ளது.
பொலிஸாரும் தீயணைப்பு படையினரும் இணைந்து தீயினை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
பொலிஸார் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
