Featured Home (TOP)

Recent Comments

Wednesday, March 25, 2015

Unknown

"அகர ஆயுதம்" ஏற்பாட்டில் இடம்பெற்ற மூன்றாவது கலை, இலக்கிய சந்திப்பு


 -மரியமின் புத்திரன்-

பொத்துவில் பிரதேச சபைக் கேட்போர் கூடத்தில் 2015-03-22ம் திகதி நடைபெற்ற  “அகர ஆயுதம்” கலை,இலக்கிய சந்திப்பிற்கும் உரையாடலுக்குமான பொதுவெளி)  ஏற்பாடு செய்த மூன்றாவது கலை, இலக்கிய சந்திப்பு இரண்டு அமரவ்வுகளாக நடைபெற்றது. 

முதல் அமர்வுக்கு பொத்துவிலின் மூத்த இலக்கியவாதி "கலையன்பன் அஸீஸ்" அவர்கள் தலைமை வகித்து நிகழ்வை சிறப்பித்தார்.

இரண்டாம் அமர்வு சிறப்புக் கவியரங்கமாக இடம்பெற்றது. கவியரங்கத்திற்கு இலங்கையின் பிரபலமான சந்தக் கவிஞர். சந்தக் கவிமணி கன்னல் கவி -கிண்ணியா அமீர் அலி- தலைமை வகித்துச் சிறப்பித்தார்.

இந்நிகழ்வை கவிஞர்களும் , “அகர ஆயுதம்” இலக்கிய சந்திப்பிற்கும், உரையாடலுக்குமான பொதுவெளியின் பிரதான ஏற்பாட்டாளர்களான கவிஞர் கிராமத்தான் கலிபா - கவிஞர் இலக்கியன் முர்சித் - கவிஞர் எஸ்.ஜனூஸ் - கவிஞர் தொலைந்த கவி இப்றாஹிம் அஹ்சன் - மற்றும்   பிரகாசகவி அன்வர் ஆகியோர்கள்  ஏற்பாடு செய்திருந்தனர். பொத்துவில் நிகழ்வு சிறப்புற சமூகசேவகரும் இலக்கியவாதியுமான தேசமான்ய எம்.எஸ்.எம் அப்துல் மலீக் அவர்களின் பங்களிப்பு அளப்பரியது. 

நிகழ்வுக்கு மூத்த எழுத்தாளர்கள் திறனாய்வாளர்கள்,விமர்சகர்கள் இளம் கவிஞர்கள்,கவிதாயினிகள் ,கலைஞர்கள் இலக்கிய ஆர்வலர்கள் ஊடகவியலாளர்கள் என பெருந்திரளானவர்கள் கலந்து கொண்டனர். சமூகசேவகரும், இலக்கிய ஆர்வலருமான பொத்துவில் பிரதேச சபைத் தவிசாளர் எம்.எஸ்.அப்துல் வாஸித் அவர்கள் முன்னிலைவகித்த  முதலாமமர்வில் ஜாமியா நளீமியாவின் முன்னைநாள் சிரேஷ்ட விரிவுரையாளரும்,ஆய்வாளரும்,எழுத்தாளருமான ஏ.பீ.எம் இத்ரீஸ் மற்றும் அமெரிக்காவின் “டெட்” வலையமைப்பின் மொழி இணைப்பாளரும் எழுத்தாளருமான தாரிக் அஸீஸ் ஆகியோர்கள் உரைகள் நிகழ்த்தியதுடன் பல புதுமுக கவிஞர்கள், கவிதாயினிகளுடைய கவிதைப் பொழிவுகள்,பாடல்கள்,நாட்டார் பாடல்கள்,அபிநய நிகழ்வு மற்றும் நகைச்சுவைகள் ஆகியனவும் இடம்பெற்றன.

மதிய போஷனத்தின் பின்  இரண்டாவது அமர்வு சிறப்புக் கவியரங்கமாக இடம்பெற்றது. கவிஞர் சந்தக் கவிமணி கிண்ணியா அமீர் அலி தலைமையில்  கவிஞர் ஜமீல் - கவிஞர் - மருதமுனை விஜிலி - கவிஞர்,விமர்சகர் ரியாஸ் குரானா - கவிஞர் எஸ்.ஜனூஸ் - கவிதாயினி இறக்காமம் பர்சானா - கவிஞர் கிராமத்தான் கலீபா - கவிஞர் உமர் அலி - கவிஞர் மியாட் மௌலானா ஆகியோர்களின் கவிதைப் பொழிவு இடம்பெற்றது.


இவ்விலக்கிய நிகழ்வில் எழுத்தாளர்கள் தங்கள் வௌியீடுகள் ,பிரசுரங்களை விற்பனைக் காட்சிப்படுத்தியதுடன் "காகம் பதிப்பகத்தின்" வௌியீடுகளும் விற்பனைக் காட்சிப்படுத்தலும்   இடம்பெற்றது சிறப்பம்சமாகும்.

"அகர ஆயுதம்" ஏற்பாடுசெய்த இந்நிகழ்வானது பல மூத்த,இளைய இலக்கிய உறவுக்கு பாலமாக அமைந்து தங்களின் பரஸ்பர அன்பை,  அனுபவங்களைப் பகிர்ந்துகொள்ள வாய்ப்பாக அமைந்தது .

 “அகர ஆயுதம்” நடாத்திவரும் தொடர் அமர்வின் அடுத்த அமர்வு இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் சார்பாக எதிர்வரும் 2015.04.18 அளவில் இடம் பெறும் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.









Unknown

About Unknown -

Author Description here.. Nulla sagittis convallis. Curabitur consequat. Quisque metus enim, venenatis fermentum, mollis in, porta et, nibh. Duis vulputate elit in elit. Mauris dictum libero id justo.

Subscribe to this Blog via Email :