Featured Home (TOP)

Recent Comments

Sunday, March 1, 2015

Unknown

கெட்ட வார்த்தைகளால் திட்டினார் அதிபர்.! மயங்கி விழுந்த ஆசிரியை அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதி.

யாழ்.மாவட்டத்தில் காரைநகர் பிரதேசத்தில் உள்ள பிரபல பாடசாலை ஒன்றின் அதிபர் கடமைக்குச் சென்ற, பாலூட்டும் தாயான ஆசிரியை ஒருவரை கெட்டவார்த்தைகளால் திட்டியதால், மயங்கீ வீழ்ந்த ஆசிரியை யாழ். போதனா வைத்தியசாலை அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.


இந்தச் சம்பவம் பற்றி தெரியவருவதாவது: தனது மகப்பேற்று விடுமுறையை முடித்துக் கொண்டு கடமைக்குத் திரும்பிய ஆசிரியை கையொப்பமிடச் சென்ற போது, கையொப்பப் பதிவேட்டை எடுத்து எறிந்த அதிபர், மிக மோசமான கெட்டவார்த்தைகளாலி் அவரைத் திட்டினார். இதனால் அதிர்ச்சியடைந்த ஆசிரியைக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டு மயங்கி விழுந்தார்.
உடனடியாக சக ஆசிரியர்களால் காரைநகர் பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட அவர், மேலதிக சிகிச்சைக்காக சுவாச வாயு பொருத்தப்பட்ட நிலையில் யாழ் போதனா வைத்தியசாலையின் அவசர கிசிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார். சிகிச்சைக்குப் பின்னர் குறிப்பிட்ட ஆசிரியை வீடு திரும்பியுள்ளார்.
  

Unknown

About Unknown -

Author Description here.. Nulla sagittis convallis. Curabitur consequat. Quisque metus enim, venenatis fermentum, mollis in, porta et, nibh. Duis vulputate elit in elit. Mauris dictum libero id justo.

Subscribe to this Blog via Email :