Featured Home (TOP)

Recent Comments

Thursday, March 12, 2015

Unknown

ஐக்கிய அரபு இராஜ்ஜியத்தை வீழ்த்தியது தென்னாபிரிக்கா

ஐக்கிய அரபு இரஜ்ஜிய அணிக்கெதிரான உலகக் கிண்ண லீக் போட்டியில் தென்னாபிரிக்க அணி 146 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது.
11 ஆவது உலகக் கிண்ணத் தொடர் அவுஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து மண்ணில் இடம்பெற்று வருகின்றது.
நியூசிலாந்தின் வெலிங்டனில் இன்று இடம்பெற்ற உலகக் கிண்ண லீக் போட்டியில் குழு “பி ” யில் இடம்பெற்றுள்ள தென்னாபிரிக்கா மற்றும்  ஐக்கிய அரபு இராஜ்ஜிய அணிகள் ஒன்றையொன்று சந்தித்தன.

இப் போட்டியில் நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்ற ஐக்கிய அரபு இராஜ்ஜிய அணி முதலில்  துடுப்பெடுத்தாடத் தீர்மானித்தது.
அதன் படி முதலில் துடுப்பெடுத்தாடக் களமிறங்கிய தென்னாபிரிக்க அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 341 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது.
தென்னாபிரிக்க அணி சார்பாக ஏபிடி வில்லியர்ஸ் 99 ஓட்டங்களையும் மில்லர் 49 ஓட்டங்களையும் பிஹர்டின் ஆட்டமிழக்காது 69 ஓட்டங்களையும் பெற்றுக் கொடுத்தனர்.
பந்துவீச்சில் ஐக்கிய அரபு இராஜ்ஜிய அணி சார்பில் மொஹமட் நவீட் 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
இந்நிலையில் 342 என்ற இமாலய வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய ஐக்கிய அரபு இராஜ்ஜிய அணி, தென்னாபிரிக்க அணியின் பந்து வீச்சுக்கு தாக்குப்பிடிக்க முடியாது 47.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 195 ஓட்டங்களைப் பெற்று 146 ஓட்டங்களால் தோல்வியடைந்தது.
துடுப்பாட்டத்தில் ஐக்கி அரபு இராஜ்ஜிய அணி சார்பில் படில் ஆட்டமிழக்காது 57 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார் . ஏனைய துடுப்பாட்ட வீரர்கள் பெரிதாக ஓட்டங்களை பெற்றுக் கொடுக்கவில்லை.
தென்னாபிரிக்க அணி சார்பில் பந்து வீச்சில் பிலேந்தர், மோர்கல் மற்றும் ஏபிடி வில்லியர்ஸ் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர். பந்து வீச்சு மற்றும் துடுப்பாட்டத்தில் அசத்திய ஏபிடி வில்லியர்ஸ் இப் போட்டியின் ஆட்டநாயகனாக தெரிவு செய்யப்பட்டார்.

Unknown

About Unknown -

Author Description here.. Nulla sagittis convallis. Curabitur consequat. Quisque metus enim, venenatis fermentum, mollis in, porta et, nibh. Duis vulputate elit in elit. Mauris dictum libero id justo.

Subscribe to this Blog via Email :