(ஜூனைத் எம் பஹத்)
அறபு மொழி இன்று அரசியல் பொருளாதார இராஜதந்திர தேசிய பிராந்திய சர்வதேச கேந்திர முக்கியத்துவமிக்க பாதுகாப்பு நகர்வுகள், யுத்தம் சமாதானம் குறித்த நகர்வுகளுடன் பெரிதும் தொடர்புபட்டுள்ளது.
உலகில் உள்ள அனைத்து மதங்களினதும் மொழிகளில் உயிரோட்டத்துடன் வாழுகின்றஒரு மொழி மாத்திரமல்லாது இன்று முழு உலகினதும் கவனத்தை ஈர்த்துள்ள மத்திய கிழக்கின்இஸ்லாமிய எழுச்சியின் மொழி என்பதால் அது சர்வதேசமுக்கியத்துவத்தை பெற்றுள்ளது.
முஸ்லிம்களைப் பொறுத்தவரை அறபு மொழியை முறையாக கற்பதன் மூலம் அல்-குரான்,சுன்னாஹ் உற்பட இஸ்லாமிய கற்கைகளை கற்றுக்கொள்வதற்கும், தமது ஓதல்களை, வணக்க வழிபாடுகளை அர்த்தமுள்ளஉயிரோட்டமுள்ளவைகளாக மாற்றிக்கொள்வதற்கும், ஆன்மீக உயர்விற்கும்அறபு மொழி பெரிதும் உதவும் என்பதில் சந்தேகமில்லை.
சாதாரண உயர்தரம் வரை முறையாகஅரபு மொழிகறவர்கள், அறபு இஸ்லாமிய கற்கை கல்லூரிகளுக்கு செல்லும் பொழுதுஅவற்றின் தராதரங்கள் உயர்கல்வி தராதரங்களாக மாறுகின்ற நிலையம், கற்கின்றகாலத்தின் அளவினை குறைத்துக் கொள்ளும் வாஈப்பும் அதிகரிக்கும்,அதோடு மிம்பர் மேடைகளின்தராதரங்களும் உயருகின்ற நிர்பந்தநிலையம் ஏற்படும் என்பதில்சந்தேகமில்லை.
இலங்கையில் கல்வித் திட்டத்தில் சர்வதேச மொழிகளுடன் அறபு மொழியும்அங்கீகாரம் பெற்றிருக்கின்றது, ஆனால்பெயரளவிலேயே அறபு மொழிக்கானபாட விதானம் இருக்கின்றது, உயர்தரப்பரீட்சைக்கும் அரபு மொழியை ஒரு பாடமாக கற்க முடியும், ஓரிரு பல்கலைக்கழகங்களிலும் அறபு மொழி பீடங்கள் இருக்கின்றன.
பேராதனை பல்கலைக் கழகத்தில் 1986 ஆம் ஆண்டு அறபு மொழியில்சிறப்பு பட்டதாரி கற்கைகளை வெளிவாரியாக நானும் நிறைவு செய்துள்ளேன்,கொழும்பு பல்கலைக் கழகத்தில் விரிவுரையாளராக நியமனம் பெற்ற பொழுதும்சந்தர்ப்ப சூழ்நிலைகளால் கடமைகளை பொறுப்பேற்கவில்லை.
இலங்கையை பொறுத்த வரையில் ஆரம்பப் பாடசாலை முதல், சாதாரண தரம், உயர்தரம்,பல்கலைக் கழகம் வரைக்குமான அறபு மொழி பாடவிதானங்களை தயார்செய்ய வேண்டிய தேவைப்பாடு இருக்கின்றது,அறபு நாடுகளில் அறபு மொழியை தாய்மொழியாக கொண்டிராதவர்களுக்கானகற்கைகளும், பாடவிதானங்களும், நவீன கற்பித்தல் முறைகளும் பிரயோகத்தில்உள்ளன, அவற்றை நாம் பெற்று எமக்கானபாடத்திட்டங்களை வடிவமைத்துக் கொள்ள முடியும் இன்ஷா அல்லாஹ்.
சர்வதேச தரம் வாய்ந்த ஒரு பாடவிதானத்தை எம்மால் தயார் செய்து கொள்ள முடியுமாயின், இலங்கையின்கல்வி உயர் கல்வி அமைச்சின்அங்கீகாரத்தை காலப் போக்கில் பெற்றுக் கொள்ள முடியும் என்றநம்பிக்கை உண்டு, பிர மொழி கற்கைகளுக்கான பிரிவில்கல்வி அமைச்சு அறபு மொழிக்கு உரிய இடத்தை வழங்கியுள்ளது.
அடுத்த கட்டமாக அரபு மொழி கற்பிக்கும் தகைமை வாய்ந்தஆசிரியர்களை உள்வாங்குதல்அவர்களை பயிற்றுவித்தல் போன்ற பாரிய பணிகள் இருக்கின்றன, தென்கிழக்கு பலகலைக் கழகம் கருத்திட்டமாக இருக்கின்றபொழுது மேற்படி இலக்குகளை அடியமுடியுமான அறபு மொழி பீடம்ஒன்றை ஸ்தாபிப்பது தொடர்பான திட்ட வரைவொன்றை அமைச்சர்அஷ்ரஃப அவர்களிடம்அன்று உலமா காங்கிரஸ் சார்பாக நாம் முன்வைத்திருந்தோம்.
அறபுமொழி கற்கைகளுக்கான ஒரு (ARABIC LANGUAGE ACADEMY ) ஸ்தாபிப்பதற்கானகருத்திட்டமொன்றை தாயார்செய்து வைத்துமுள்ளேன், அது தொடர்பாக பல்வேறு தரப்புக்களுடனும்கலந்துரையாடி வருகின்றேன், இன்ஷா அல்லாஹ் இலங்கையில் உள்ள சகலமுஸ்லிம் பாடசாலைகளிலும் தேசியநலன்களையும் கருத்திற் கொண்டு சர்வதேச தராதரங்களுக்கு அமையஅரபு மொழி கற்பிக்கும் காலம் வரவேண்டும் அது எமது தெரிவும்உரிமையுமாகும்.
கொரியன், சீன, ஜப்பானிய , பிரெஞ்சு,ஆங்கில மொழிகள் போன்று அறபு மொழி அபிவிருத்திக் கற்கைகள் இலங்கையின் வெளிநாட்டுச்பொருளாதாரத்திற்கு பாரியபங்களிப்பினை செய்யமுடியும்,அறபு தேசங்களில் சிறந்த தொழில்வாய்ப்புக்கள், வெளிநாட்டுச் செலாவணி, அரசியல் இராஜ தந்திர உறவுகளின்மேம்பாடு என பல்வேறு நன்மைகள் தேசத்திற்கு இருக்கின்றன.
அறபு மொழியை கற்பதற்கு சந்தர்ப்பங்கள் உள்ளவர்கள் குறிப்பாக அறபுஇஸ்லாமிய கல்லூரிகளில் கற்பவர்கள் அந்த மொழியில் சிறப்புத்தேர்ச்சியை பெற்றுக் கொள்ளுங்கள்..
ஷரிஆத் துறை கற்கைகளுக்காக மாத்திரம் கற்பவர்கள் குறிப்பாக நவீன பிரயோகமொழியில் பாண்டித்தியம் பெறுவதில் அக்கறை காட்டுவதில்லை,அதேபோன்று பலர் கற்கைகளை நிறைவு செய்த பின் அறபு மொழியிற்கு தலாக் சொல்லிவிடுகின்றனர்.
%2B(1).jpg)