(ஜுனைட்.எம்.பஹ்த் )
நவமணி பத்திரிகை நடத்திய “ரமழான் முபாறக் பரிசு மழை” போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கான பரிசளிப்பு நிகழ்வு நேற்று ஜம்மியத்துஷ்ஷபாப் தலைமையகத்தில் இடம் பெற்றது.
இவ்வைபவத்திற்கு முஸ்லிம் சமய, கலாசார மற்றும் தபால் அமைச்சர் எம்.எச்.எம்.ஹலீம் பிரதம அதிதியாக கலந்து கொண்டு சிறப்பித்தார்.
மேலும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஏ.எச்.எம்.அஸ்வர், முஸ்லிம் பண்பாட்டலுவல்கள் திணைக்கள பணிப்பாளர் எம்.எச்.எம்.ஸமீல் ஜனாதிபதி சட்டத்தரணி பாயிஸ் முஸ்தபா, சட்டத்தரணி இம்தியாஸ், புரவலர் ஹாஷிம் உமர் ஆகியோருடன் இன்னும் பல பிரமுகர்களும் கலந்து கொண்டனர்.
இந் நிகழ்வில் வெற்றியாளர்களுக்கான பரிசில்களும் வழங்கிவைக்கப்பட்டது.


