(பழீல் அப்துல் கபூர்)
மஞ்சந்தொடுவாய், கிழுரியா குர்ஆன் மத்ரஸா மாணவர்களைக் கௌரவிக்கும் நிகழ்வு நேற்று (13.03.2015) ஹிழுரியா ஜும்ஆ பள்ளிவாயலில் இடம்பெற்றது.
பள்ளிவாயல் பேஷ் இமாம் மௌலவி ARM.மன்சூர் (பலாஹி) அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பிரதம அதிதியாக காத்தான்குடி ஜாம்இய்யதுல் உலமா சபைத் தலைவரும், காதி நீதிபதியுமான அல்ஹாஜ் மௌலவி SM.அலியார் (பலாஹி), கௌரவ அதிதியாக மௌலவி அல்ஹாஜ் MI. அப்துல் கபூர் (மதனி), அல்ஹாஜ் மௌலவி AGM.அமீன் (பலாஹி) உள்ளிட்ட அதிதிகள், பள்ளிவாயல் தலைவர், நிருவாகிகள், பெற்றோர்கள், மாணவர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.
கடந்த மூன்று வருடங்களில் (2012, 2013, 2014) இந்த குர்ஆன் மத்ரஸாவில் கற்ற 113 (37,38,38) மாணவர்கள் இதன்போது கௌரவிக்கப்பட்டனர். இவர்களில் முதலாம் இரண்டாம் மூன்றாம் இடங்களைப் பெற்ற மாணவர்களுக்கு விஷேட பரிசில்களும் அதிதிகளால் வழங்கி வைக்கப்பட்டன.
அத்துடன் இங்கு பணி புரியும் ஆசிரியர்களும் கௌரவிக்கப்பட்டார்கள்.
இதேவேளை கடந்த 14 வருடங்களாக கிழுரியா ஜும்ஆ பள்ளிவாயலில் பேஷ் இமாமாகக் கடமையாற்றும் மௌலவி ARM.மன்சூர் (பலாஹி) அவர்களைக் கௌரவிக்கும் முகமாக அவர்களுக்கு மோட்டார் சைக்கிள் ஒன்றும் இதன்போது பள்ளிவாயல் நிறுவாகிகளால் அன்பளிப்புச் செய்யப்பட்டது.
கடந்த மூன்று வருடங்களாக அடிப்படை வசதிகள் ஏதுமின்றி பெற்றோர்களினதும், நலன்விரும்பிகளினதும் பங்களிப்புடன் இயங்கிவரும் வரும் இந்த குர்ஆன் மத்ரஸாவில் தற்போது 272 மாணவர்கள் கற்றுவருகின்றமை குறிப்பிடத்தக்கது..JPG)